Tuesday 31 July 2012

நான் ரசித்த தமிழ் சினிமா ! ஒரு பார்வை !!!!

- 2 comments
வணக்கம் நண்பர்களே,
                                                 பொதுவாக சினிமா விமர்சனங்களை நான் எழுதுவதில்லை, சினிமாவின் ரசிகனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். ஏன் எனில் , சினிமா விமர்சனம் எழுதுவது என்பது சாதரணமான ஒன்று அல்ல.அதற்க்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
இன்றைய திரை உலகில் பல கிளைத்துறைகள்  உள்ளன . நடிப்பு, இயக்கம்,ஒளிப்பதிவு, இசை,எடிட்டிங்  இன்னும் பல. இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்துதான் விமர்சனம் செய்ய வேண்டும். பல பதிவர்கள் விமர்சனம் எழுதி வருகிரார்கள் அவர்களை  நான் குற்றம் சொல்ல வில்லை. அவர்களுக்கு விஷயம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை, அனைத்தும் தெரிந்த ஒரு இயக்குனரின் படங்களை போகிற போக்கில் JUST LIKE THAT மொக்கை படம், டப்பா படம் ,சப்பை படம், என்று சொல்ல முடியாது. அப்படி சொல்வது,  நமக்கு நன்கு தெரிந்த அல்லது expert ஆன துறையை பற்றி, நமது துறையில் சிறிதும் அனுபவம் இல்லாத  ஒருவர் நம்மிடம் வந்து , "உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை" என்று கூறுவது போலத்தான் ?ஆனால் நான் ரசித்த படங்களையும்  காட்சிகளையும் நினைவு கூர்ந்து அதை இன்னொருவரிடம் பகிரலாம்.  எனவே  இந்த பதிவை எழுதுகிறேன்.  இதில் பழைய படங்களும் வரும், புதிய படங்களும் வரும்.அந்த வரிசையில் இந்த பதிவில் முதலில் பார்க்க போகும் படம்  "சுமை தாங்கி "


கதையின் கரு :
                               சுதந்திரமாக சுற்றி திரியும் ஒரு வாலிபனின் வாழ்க்கையில் , திடீரென சுமத்தப்படும் குடும்ப சுமைகள்  அவனை எந்த நிலைக்கு இழுத்து செல்கிறது என்பது தான் கதை.

 இந்த படத்திற்கு இயக்கம் திரு.ஸ்ரீதர்(நெஞ்சம் மறப்பதில்லை, கல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை படங்களை இயக்கியவர் )அவர்கள் . ஒரு அழகான கதையை , மிக நேர்த்தியோடு படமாக்கியிருப்பார். ஒரு நடுத்தர மிக்க  குடும்பத்தில் பிறந்த ஒரு  இளைஞனை  எப்படி காட்ட வேண்டுமோ  அப்படி செதுக்கி இருப்பார். எனக்கு பிடித்த இயக்குனர்களில் இவருக்கு தனி இடம்  உண்டு !


 இயக்குனருக்கு ஈடு கொடுக்கும் வகையில் திரு.ஜெமினி கணேசனும் மிக அருமையாகவும் ,  அழகாக நடித்திருப்பார். இந்த கதைக்கு இவரை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை. திரை உலகம் தான் இவரை காதல் மன்னன் என்று  சொல்கிறதே தவிர, சோகம்,கோபம், சாந்தம்  என நவ ரசங்களையும் இந்த படத்தில்  அள்ளி  தெளித்து இருப்பார். அருமையான  நடிகர். கதாநாயகியாக தேவிகா ஆசிரியரின் மகளாக நடித்திருப்பார்! அவரும் தன்  பங்கிற்கு அருமையாக  நடித்திருப்பார்.

சரி கதைக்கு வருவோம்,  ஆரம்பத்தில் சொன்னது போல படத்தின் நாயகன் கதை என்றால் வில்லன் யார்?  இருக்கிறார் , ஆனால்  இந்த படத்தில் வில்லனுக்கு வசனம் , சண்டை , கடத்தல், கார் ஓட்டுவது , எதுவுமே கிடையாது. ஆனால் படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை   ஹீரோவுடன் இவர் பயணிப்பார்! என்னங்க குழ்ம்பிடீங்களா ? சூழ்நிலை தான் இந்த படத்திற்கு வில்லன் ! நாயகனின் வாழ்க்கையில் இந்த சூழ்நிலை தான் எதிரி.

ஒரு நடுத்தர குடும்பம்.அதில், ஓய்வுபெற்ற தந்தை,பணிக்கு செல்லும்  அண்ணன், குடும்பத்தை கவனிக்கும் அண்ணி ,தங்கை,மற்றும் கதையின் நாயகன்  என அழகான  குடும்பம். கல்லூரிக்கு சென்று வருவது, சினிமா செல்வது , காதலிப்பது என ஜாலியாக சுற்றிகொண்டிருப்பவரின் வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பம். குடும்பத்திற்கு வருவாய் ஈட்டி தரும் ஒரே  நபரான  அண்ணனாகிய  முத்துராமனுக்கு  வேலை பொய் விடுகிறது . அன்று முதல் குடும்ப பாரம் அத்தனையும்  ஜெமினி கணேசன் தலையில் விழுகிறது .படிப்பை பாதியில் விட்டு விட்டு வேலைக்கு செல்கிறார். இதற்கிடையில் பழைய நண்பன் மூலமாக நல்ல வேலை ஒன்று வர , அதை அண்ணனுக்காக  விட்டுகொடுக்கிறார். வேலை செய்து சம்பாதித்த பணத்தை தங்கையுடைய  காதலனின்  வேலைக்காக கொடுக்கிறார். பின்னர், தான் காதலித்த பெண்ணை அவர் தந்தை கேட்டுகொண்டதர்க்கிணங்க காதலயும் விட்டு கொடுக்கிறார்.அனைத்தையும் இழந்து வீட்டிற்கு வந்தால் , தன் அண்ணனே தன்னை உதவாக்கரை என்று சொல்வதை  தாங்க முடியாமல் வீட்டை விட்டு செல்கிறார். அவர் என்ன ஆனார் என்பது தான் படத்தின் முடிவு . படம் முழுக்க  சூழ்நிலையானது  எந்த அளவுக்கு அவரது வாழ்வில் விளையாடுகிறது என்பதை அழகாக சொல்லி இருப்பார்கள். சிவாஜி/MGR படங்களை தவிர இந்த படத்திலும் MSV /கண்ணதாசன் கூட்டணியில்  தன்னம்பிக்கை பாடல்கள் அருமையாக இருக்கும்(மனிதன் என்பவன் தெய்வமாகலாம், மயக்கமா கலக்கமா ).

குடும்ப சுமை ஒரு இளைஞனை எவ்வளவு  கஷ்டபடுத்துகிறது என  அருமயாக எடுத்து காட்டிய படம். இந்த  படத்தை எப்போதெல்லாம் டிவி யில் போடுவார்களோ, அப்போதெல்லாம்  தவறாது பார்த்து விடுவேன் . நீங்களும் நேரம் கிடைத்தால் பார்த்துவிட்டு சொல்லுங்கள். மறக்காமல் கமெண்ட்  போடவும்.

   
நன்றியுடன்


இரா.மாடசாமி.




[மேலும் படிக்க>>>]

Monday 30 July 2012

குழந்தைகளுக்கு ஏன் விஜய்யை பிடிக்கிறது!?

- 0 comments
 வணக்கம் நண்பர்களே ,
                                                 இந்த பதிவை படிப்பதற்கு முன்  நீங்கள் ஒரு முக்கியமான  முடிவு ஒன்றை  எடுக்க வேண்டும் .அது என்னவென்றால் எந்த நடிகரையும் சாராத ஒரு நடுநிலையான மனதுடன் மட்டுமே படிப்பது

 
சரி மேட்டர்க்கு  வருவோம்,   இன்றைய திரைத்துறையில் ஹீரோவாக  வருவதற்கு அதிக சிரத்தை எல்லாம் எடுக்க  வேண்டாம் . கொஞ்சம் பஞ்ச் வசனம், கொஞ்சம் சண்டை , கொஞ்சம்  காதல் அவ்வளவுதான் , இது இருந்தாலே அவர் பெரிய ஹீரோவாகி விடுகிறார் .இதில் ,எந்த நடிகர் சிறப்பாக நடிக்கிறாரோ அவரின் படங்களை பார்க்கிறோம், ரசிக்கிறோம் .  சிலர்  அவரின் மேல் உள்ள  பற்றினால் தீவிர ரசிகர்களாக கூட மாறி விடுகின்றனர்.

  ஆனால் குழந்தைகள் மனதில் இடம் பிடிக்க மேலே சொன்ன கொஞ்சம், கொஞ்சம் டெக்னிக் வேலை செய்யாது .அதைத்தான், இன்று நாம் இந்த கட்டுரையில் அலசபோகிறோம். இவர்களின் உலகம் சற்று வித்தியாசமானது , திரை உலகில் குழந்தைகளின் ரசனையை  இரண்டு விதமாக பார்க்கிறேன்  நான்! அது என்ன வென்றால்.  

  1 வயது  முதல்  3 வயது வரை:  இந்த வயது குழந்தைக்கு  நல்ல இசை மட்டுமே பிடிக்கும், இவர்களுக்கு வசனமோ,பாடலோ புரியாது. அதனால்தான் இன்றைக்கும் " Why  திஸ் கொலைவெறி" "வேணாம் மச்சான் வேணாம்  "  ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் " போன்ற பாடல்களுக்கு  இவர்கள் ஆடவும் , வைத்த கண் மாறாமல் பார்க்கவும் முடிகிறது.  மேலே சொன்ன காரணங்களில் விஜய் நடித்த படங்களின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆவது வாடிக்கையே!  வேட்டைக்காரன் படம் தோல்வி அடைந்தாலும் அதன் பாடல்கள்  " ஏன் உச்சி , கரிகாலன், புலி உறுமுது" போன்ற  பாடல்கள் இன்றளவும் குழந்தைகளின் மனதில் இறுக்கிறது. தற்போதய ஹிட் நண்பன் படத்தில் அனைத்து பாடல்களும். இன்னும் பல...


3 முதல் 10  வயது வரை :
                                               இந்த இடைப்பட்ட வயது உள்ளவர்கள்  விரும்புவது,   நல்ல இசையுடன் கூடிய  நடனம்,  கொஞ்சம் சண்டை, கொஞ்சம் சாகசம் ! படத்திலே ஹீரோ செய்யும் நகைச்சுவையுடன் கூடிய முக பாவனைகள், கொஞ்சம் ஸ்டைல்  போன்றவை . இவர்கள்,ஹீரோ ஆடும் நடனத்தையும்,  சண்டை கட்சியையும்  அப்படியே ஆடுவது  மற்றும்  செய்கை செய்வது , பஞ்ச் வசனம் பேசுவது வழக்கமாக்கி கொள்கிறார்கள்.ஆதலால் ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு வித்தியாசமான நடன அமைப்பை எதிர்பார்ப்பார்கள் . இதில் விஜய் ஒவ்வொரு படத்திற்கும் எப்படி சிரத்தை எடுத்து ஆடுகிறார் என்பது அனைத்து  நடிகர்களின் ரசிகர்களுக்கே தெரியும். மேலும் படத்தில்   கதையோடு ஒன்றி  நகைச்சுவை (Friends ,கில்லி,வேட்டைக்காரன், நண்பன் )  வருமாறு பார்த்து கொள்கிறார்.  


பொதுவாக குழந்தைகளுக்கு  திரைப்படத்தில் என்ன பிடிக்கிறது ?
 இவர்களின் உலகில் ஹீரோ மாங்கு மாங்கு என வில்லனை அடித்தாலும், பக்கம் பக்கமாக வசனம் பேசினாலும், செண்டிமெண்டாக கண்ணீர் விட்டாலும்,காதல் ரசம் பொழிந்தாலும்,டிவி ரிமோட் தானாகவே  மாறிவிடும்.
இவர்களுக்கு  ஹீரோ என்பவர் ,ஒன்று சூப்பர் பவர் உள்ளவராக (சூப்பர் MAN , Spider MAN )   இருக்க வேண்டும் அல்லது அவர்களில் ஒருவராகவே  இருக்க வேண்டும் .அதாவது  இவர்கள் செய்யும் சேட்டை, குறும்பு, நடனம் போன்றவற்றை பிரதிபலிக்கவேண்டும்  என்றே விரும்புகிறார்கள்.  இந்த அனைத்தையும் விஜய் தனது படங்களில்  ஓரளவாவது நிறைவேற்றி இருக்கிறார் என நான்  நினைக்கிறேன் .

பின் குறிப்பு: இது விஜய்யை பாராட்டி எழுதப்பட்டது அல்ல! நடுநிலையுடன் எழுதப்பட்டது. மேலும் முழுக்க  முழுக்க குழந்தைகளின்  ரசனை சார்ந்த பதிவு மட்டுமே . இதற்கு முந்தய தலைமுறை நடிகர்களை  உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. இந்த பதிவு  யாரையும் புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!












[மேலும் படிக்க>>>]

Friday 27 July 2012

பட்டையை கிளப்பும் பராசக்தி சிவாஜி கணேசன் !!!

- 3 comments
வணக்கம் நண்பர்களே !
                                                    பதிவுலகம்!  விசித்திரமான எத்தனையோ பல பதிவர்களை பார்த்திருக்கிறது ! விசித்திரமான பதிவுகளையும் பார்த்து இருக்கிறது! ஆனால்  இந்த பதிவும்  விசித்திரமான பதிவு அல்ல , நானும்  விசித்திரமான பதிவாளர்  அல்ல! 

[மேலும் படிக்க>>>]

Wednesday 25 July 2012

இது கவிதை அல்ல !

- 0 comments
வணக்கம் நண்பர்களே!
                                                என்  மனதில் தோன்றிய சில கிறுக்கல்களை  இங்கு
 கொடுத்திருக்கிறேன். பிடிதிருந்தால் கமெண்ட் செய்யவும் .

1.குழந்தை பருவத்திலிருந்து  விரும்பும்  பேருந்தின் ஜன்னல்  சீட்டை, விருப்பமில்லாமல்  விட்டு கொடுத்தேன் மனைவிக்கு!! காலத்தின் கட்டாயம்!!!!  

2. மூக்கை பிடித்த படியே  குப்பை லாரியை கடக்கும் யாவருக்கும் , அதன்  ஓட்டுனரின் மனநிலையை அறிந்திருக்க வாய்ப்பில்லை!!!  
அசுத்தம் சோறு போடும் !!!!

3.கிரிக்கட்டை ரசித்து பார்த்து கொண்டிருந்த என் நண்பர் சொன்னார் , சுரேஷ் ரைனா சூப்பராக Catch  பிடிப்பார் என்று !? புரியாமல் கேட்டேன் Catch  என்பதன் தமிழ் அர்த்தம் "பிடி" என்பதுதானே ?!

4.என் மகன் , எனக்கும் தந்தையாகிறான் , என்  தந்தைக்கும் , தந்தையாகிறான், "என்  அய்யாவே"  என ஆசையோடு அழைக்கும் போது !!!!

5. மகனின் மொட்டைக்கு, வந்திருந்த உறவினர்கள் வாழ்த்தியது நினைவில் இல்லை , இறுதியில் மிஞ்சிய சோறை ஒரு அறிமுகம் இல்லாத பாட்டிக்கு கொடுத்தபோது, அவர்  சொன்ன  வார்த்தைகள், நினைவை விட்டு நீங்க மறுக்கிறது! "உன் புள்ள , நோய் நொடியில்லாம சந்தோசமா இருக்கணும்"!

6. மது பழக்கம் இல்லாத என்னை பார்த்து , மது பழக்கம் உள்ள நண்பன் சொன்னான், நானும் உன்னை மாதிரி இருந்திருந்துருக்கலாம் என்று !  அப்போதுதான் ,எனக்கு என்னையே பிடித்தது!

7. போதையில் இருந்த நண்பனை  வண்டியில் பத்திரமாய் வீட்டில் கொண்டு சேர்த்து விட்டு கிளம்பும் போது  நண்பன் சொன்னான் " மச்சி பாத்து போடா!
அக்கறை !!!!!

8. வண்டி ஸ்டார்ட் ஆகாதபோது ,படித்த  Mechanical engineer கூட படிக்காத மெக்கானிக்கிடம் செல்கிறார்! Experience is Good Teacher !  

9.  நண்பனைப்போல் நாத்திகவாதி ஆகவேண்டும் என நினைக்கும் அடுத்தநாளே , குளித்து உடையணிந்த உடன் மனம் தானாக  திருநீரை நோக்கி பயணிக்கிறது ! தொட்டில் பழக்கம் !

10. ஆட்டோ காரரிடம் சண்டை போட்டு  மிச்சம் பிடித்த பத்து ரூபாயை  ,
       கேட்காமல்  டிப்ஸாக கொடுத்தேன் செட்டி நாடு ஹோட்டல் சர்வரிடம் !!!!
       முரண்பாடு !!!   







நன்றியுடன்,
இரா. மாடசாமி

[மேலும் படிக்க>>>]

Tuesday 24 July 2012

சுஜாதா - தொடர் பதிவு-2

- 2 comments

                                                                       


வணக்கம் நண்பர்களே ,
                                              தனது சுய சரிதை, வாசகர்களுக்கு  ஒரு பயனுள்ள படைப்பாக  அமைய வேண்டும் என தான் கடந்து வந்த பாதயை  கூட  அறிவியல் தகவல்கள் ,சந்தித்த பிரச்சினைகள் , படித்த புத்தகங்கள் , என பலவற்றையும் அழகாக தொட்டு சென்றிருப்பார்.  உதாரணத்திற்கு,1953ல்   முதன் முறையாக  ஒரு  சிறுகதை  எழுதி  அனுப்பினார் .அது சிவாஜி என்ற புத்தகத்தில் வெளி  வந்தது. அதை இப்படி எழுதி இருந்தார்,

[மேலும் படிக்க>>>]

காதலில் சொதப்பியது எப்படி?!! எனது முதல் காதல் அனுபவம்!!!!

- 0 comments

வணக்கம்  நண்பர்களே  !!!
                                                   இன்று எனது முதல் காதல் (சொதப்பல்) அனுபவத்தை  இங்கு எழுத போகிறேன். இது வரை யாரிடமும் சொல்லவில்லை! காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு  நிச்சயமாக இது  பயன் உள்ளதாக  இருக்கும் !


[மேலும் படிக்க>>>]

Monday 23 July 2012

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏன்?!!

- 1 comments
வணக்கம் நண்பர்களே!
                                                 நீண்ட நாட்களாகவே  பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் இன்னல்கள் பற்றியும் , எதனால் ஏற்படுகிறது ? என்பது பற்றியும்   ஒரு உருப்படியான பதிவை எழுதவேண்டும் என எண்ணினேன் . அது இந்த பதிவின் மூலம் நிறைவேறி இருக்கிறது என நினைக்கிறேன் !  


[மேலும் படிக்க>>>]

Saturday 21 July 2012

வீரபாண்டிய கட்டபொம்மனை ரீமேக் பண்ணுகிறார் மணிரத்னம்!!!!!

- 0 comments
 
வணக்கம் நண்பர்களே !

தலைப்பை  பார்த்துவிட்டு புது  மேட்டரா  இருக்கே என படிக்க வந்த அனைவருக்கும் வணக்கம்! ஒரு நகைச்சுவை (கற்பனை)  பதிவை போடலாம்னு கழிவறையில் உட்கார்ந்து கன நேரம் யோசிச்சபோ  கிடைத்த தலைப்பு தான் இது !
  .
[மேலும் படிக்க>>>]

Friday 20 July 2012

சிகப்பழகு விளம்பரம் ஒரு சீட்டிங்!

- 0 comments
வணக்கம் நண்பர்களே ,                                                
                                               இன்றைய  தினம்  டிவியில்  வரும் விளம்பரங்கள் (Advertisement) நம்மை  ஏமாற்றும்  விதமாகவே உள்ளது.  அதிலும் சிகப்பழகு விளம்பரங்கள் சொல்லவே வேண்டாம் !  ஒரு பொருளை விற்பனை செய்ய விளம்பரம்  எவ்வளவு  முக்கியம் என்பது நமக்கு தெரிந்ததே!அதுவே எல்லை மீறும் போது நமக்கு எரிச்சலூட்டும்படி  செய்து விடுகிறது!  

[மேலும் படிக்க>>>]

Thursday 19 July 2012

சுஜாதா - தொடர் பதிவு

- 2 comments
வணக்கம் நண்பர்களே ,
                                                இந்த தொடர் பதிவு , எழுத்துலகில்  தனி இடத்தை பிடித்த திரு.சுஜாதா அவர்களைப்பற்றி,   இன்றும் அவரது  படைப்புகள்  புத்தக சந்தையில்  சக்கை போடு போடுகிறது என்றால் ,  இவரின்    எழுத்துக்கு மட்டுமே என்று சொன்னால் மிகை ஆகாது .அவரை பற்றி தெரிந்தவர்களுக்கு, இந்த பதிவு பழைய ஒன்றாக இருக்கும் . அனால் அவரை பற்றி தெரியாதவர்களுக்கு  மிக பயனுள்ள ஒன்றாக அமையும். எனது  அலுவலக நண்பர்  திரு. ரவிக்குமார் ஒரு நாள் எனது பதிவில் உள்ள  திரு. சுஜாதா  அவர்களின் படத்தை பார்த்து  இவர் யார் என கேட்டார் . அதன் தாக்கமே இந்த தொடர் பதிவு. 

[மேலும் படிக்க>>>]

Monday 16 July 2012

கவிதையா? நீங்களே சொல்லுங்க!!!

- 2 comments
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,
                                                                        மூன்று நாள் விடுமுறையில் , நிறைய படித்தேன் என்று சொன்னால் , அது பொய் . வெட்டியாக  வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்தேன். நண்பர் குழந்தையின் பிறந்தநாள்  விழாவினை சிறப்பித்து வந்தேன் (வடிவேல் பாஷையில்).வேறொன்றும் உருப்படியான வேலை செய்யவில்லை. இப்போதுதான் எழுத ஆரம்பித்திருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன் !! மன்னிக்கவும் !

இங்கு எனக்கு பிடித்த  ஒரு புது கவிதையை  போஸ்ட் செய்கிறேன்




கை கடிகாரம்
என் மணிக்கட்டின்   வழியே
இளமை உறிஞ்சும் அட்டைபூச்சி


பிடித்திருந்தால் கமெண்ட் செய்யவும்
 இல்லையென்றாலும் கமெண்ட் செய்யவும் 



மீண்டும் சிந்திப்போம்
மாடசாமி
[மேலும் படிக்க>>>]

ஹைக்கூ !!! எனக்கு புடிச்சிருச்சு கிறுக்கு !!!

- 0 comments
அனைவருக்கும் வணக்கம்,
                                                          அடுத்த கவிதை தொகுப்பு

இங்கு  எனது மனதில் தோன்றிய கிறுக்கல்களை எழுதியிருக்கிறேன். படித்துவிட்டு கமெண்ட் செய்யவும்

1) ஹைக்கூ!!!
காந்தி மீது
கருப்பு முத்திரை!
தபால் தலை  !!


2) விவாகரத்து!

  அவனும் ஜெயித்தான்!

  அவளும்  ஜெயித்தாள்!!

  வாழ்க்கைதான் தோற்றது

   வழக்கில்! !!!
  


மீண்டும் சந்திப்போம்

இரா. மாடசாமி







[மேலும் படிக்க>>>]

மழலையின் அறிவு

- 0 comments
அனைவருக்கும்  இனிய  வணக்கம் , நீண்ட இடைவெளிக்குப்பின் இப்பதிவை எழுதுகிறேன் .  பொதுவாக குழந்தைகள்  எப்போதும் நமக்கு ஏதோவொன்றை உணர்த்தி கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் அறிவும் , குறும்பும் , ஆச்சர்யபடவைக்கிறது.  இங்கே எனது மகனுக்கும் மனைவிக்கும் நடந்த  உரையாடலின் ஒரு பகுதியை கவிதை!!!!(குழந்தையின் உரையாடல் எல்லாமே கவிதைதானே )நடையில் எழுதியிருக்கிறேன் .


சுவற்றில் கிறுக்கும் 

மூன்று  வயது 

 மகனை பார்த்து 

அரட்டி கேட்டாள்  என் மனைவி 

உனக்கு அறிவு  இருக்கா ?

பயந்தபடியே  அவனும் சொன்னான் 

என்கிட்ட பென்சில்தான்  இருக்கு !!!!!



முப்பது வருடம் கற்காத  அறிவை

மூன்றே வினாடியில்  கற்பித்து விட்டான்

எனக்கும் என் மனைவிக்கும்

அறிவு என்றால்  என்ன என்று ?




குழந்தையிலிருந்து  நாம் ஏதோ ஒன்றிற்கு நாம் தீவிர ரசிகராகவும் ,பற்று உடையவராக இருந்தாலும்,   நம் குழந்தையின் குறும்பு,பேச்சு ,செயல், இவை அனைத்தும் அந்த தீவிர ரசிப்புதன்மையை  உடைத்துவிடுகிறது என்பது 
 அனைவராலும் ஏற்றுகொள்ளக்கூடிய உண்மை.





உணர்வுடன்
இரா .மாடசாமி  
 
[மேலும் படிக்க>>>]

டிரான்ஸ்பார்மரும் சூப்பர் கம்பியூட்டரும் !!!

- 0 comments

என்னடா  இவன் என்ன புது படம் காட்டுறான் .நாம டிரான்ஸ்பார்மர் படம்தான் பாத்துருக்கோம்னு நெனைக்க கூடாது. இது எங்க கல்லூரில நடந்த ஒரு நகைச்சுவையான!!!!  சரி !!! சரி!!!!  ஒரு  சம்பவம் . அத பத்திதான்   நான் இந்த பதிவுல எழுத போறேன் . எங்க காலேஜ்ல முதல் வருஷம் அப்போ பேசிக்ஸ் ஆப்  கம்ப்யுட்டர்னு  ஒரு சப்ஜெக்ட் . அதில கம்பியுட்டரோட Types   பத்தி எங்க வாத்தியார் முதல்  நாள்  சொல்லி கொடுத்தார் . அடுத்த நாள் எல்லார்கிட்டயும் முதல் நாள் சொல்லிகொடுத்தத பத்தி கேட்கிறார். இங்கதான்  நம்ம ஹீரோ   வர்றார், (பேரு வேணாம்  கோச்சுக்குவாறு) . இவர் கிட்ட நம்ம வாத்தியார் சூப்பர் Computer அப்ப்டின்னா  என்னனு ? கேட்டார் . அதுக்கு  நம்ம ஹீரோ சூப்பர் Computer அப்படின்னா  செம சூப்பரா இருக்குற Computer தான்  சூப்பர் Computer அப்டின்னு சொன்னாரு. வாத்தியாருக்கு அப்பவே  நம்ம ஹீரோ ஒரு சூப்பர் ஸ்டார் அளவுக்கு வருவார்னு தெரிஞ்சு போச்சு. பாவம் அந்த வாத்தியாருக்கு அதுவே கடைசி  செமஸ்ட்டர் ஆயிடுச்சு.  இது முடிஞ்சு ஒரு வருஷம் கழிச்சு, Electrical சப்ஜெக்ட்ல    டிரான்ஸ்பார்மர்  பத்தியும் அதோட பயன்பாடு  பத்தியும் சொல்லிகொடுத்தார் இன்னொரு வாத்தியார்  . அடுத்த நாள் நம்ம ஹீரோகிட்ட, டிரான்ஸ்பார்மர் எதுக்கு பயன்படுத்துறாங்க அப்படின்னு கேட்டாரு நம்ம வாத்தியார். இப்பயும்  நம்ம ஹீரோ சலைக்கலியே!!!! பதில் சொன்னாரு பாருங்க!அப்படி !அய்யோ இப்போ நெனச்சாலும் புல்லரிக்கும் .   டிரான்ஸ்பார்மர  EB Office லயும்  , நம்ம  college பிரா க்டிகல் கிளாஸ்ல யும்  பயன்படுத்தலாம்  அப்படின்னு. இத கேட்டதும் வாத்தியார் இந்த பயனுக்குள்ள எதோ இருக்குப்பா அப்படின்னு   7G Rainbow Colony ல வர்ற விஜயன்  மாதிரி பீல் பண்ணி அழுதது வேற விசயம்!!!! இது மாதிரி  அப்படி இப்படின்னு படிச்சு அவர் பாஸாயிட்டாரு . ஆனா எங்க நண்பர்கள் கூட்டமா கூடும்போது இந்த நிகழ்வ மறக்காம பகிர்ந்துக்குவோம்.

அடுத்த பதிவில் சந்திப்போம்!!!!

மாடசாமி .இரா      
 
   
[மேலும் படிக்க>>>]

தொப்பலும், தொப்ப கட்டையும்,

- 0 comments
          
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம், பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு நண்பர் திரு.தங்கம் பழனி அவர்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சரி, இந்த வாரம் எந்த விஷயம் பத்தி எழுதலாம்னு  யோசிச்சப்போ, தமிழின் சில சொற்கள் திரிந்து வேறு ஒரு சொல்லாக உருவெடுத்து பின் அதே வழக்கமாகி போன பல சொற்களை நாம் கேள்வி பட்டிருப்போம். அதில் எனக்கு தெரிந்த  ஒரு சொல்லை இன்று பார்ப்போம்.

நீங்கள், மழையில் முழுவதுமாக  நனைந்து வந்தால்  (ஷர்ட்,பான்ட் உட்பட) உங்கள் நண்பர்களோ, அல்லது குடும்பத்தினரோ இப்படி கேட்டிருப்பர்.
" என்ன ? இப்படி தொப்பகட்டயாக நனைந்து வந்திருக்கீங்க!! " ()
 " என்ன ? இப்படி தொப்பல் தொப்பலாக நனைந்து விட்டீர்கள் !!?

மேற்காணும் வாக்கியங்களில் உள்ள தொப்பகட்டை, தொப்பல்  ஆகிய  இரண்டும் தவறான சொற்களாகும்.

 தமிழகத்தின் தென் மாவட்டங்களில்  உள்ள  ஊர்களில்,
நீரை தேக்கி வைக்க பயன்படும் ஒரு பெரிய தொட்டி போன்ற  இடம் தெப்பம் எனப்படும், இந்த தெப்பம் பொதுவாக கோவில் அருகிலோ, அல்லது விவசாயம் சார்ந்த பகுதிகளிலோ, இருக்கும். இந்த தெப்பத்தில்  மரத்தாலான கட்டையானது  தண்ணீரில் முழுவதுமாக ஊறிய (அதில் உள்ள துகள்கள் பிரித்து போகும் அளவுக்கு) நிலைதான் தெப்பக்கட்டை என்று அழைப்பர் . இதுவே நாளடைவில் தொப்பகட்டையாகவும் பின் அதுவே தொப்பலா
கவும்  திரிந்து விட்டது .
தகவல் உதவி
திரு. நடேசன் ஐயா  
(எனது தமிழ் பேராசிரியர்) 

[மேலும் படிக்க>>>]
 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger