Thursday 27 September 2012

அப்பாவும் நானும்! தொடர்பதிவு-1!

- 2 comments


வணக்கம் நண்பர்களே!  
                      ஒவ்வொருவருக்கும் தனது முதல் ரோல் மாடல் தனது தந்தைதான் என்று சொன்னால் அது மிகை ஆகாது! எனக்கும் அதுபோலத்தான். என் தந்தைக்கும் எனக்கும் இடையில் நடந்த சில சுவையான சம்பவங்களை உங்களுடன் பகிர்கிறேன்.
அரசாங்க பணியில் விருப்ப ஒய்வு வாங்கிவிட்டு சொந்தமாக தொழில் செய்வதற்காக  சென்னையில் சிறிய மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார். வருமானம் சொல்லும் படியாக இல்லை . விடுமுறை தினங்ளில் அடிக்கடி கடைக்கு சென்று வருவேன். ஒரு நாள், தந்தை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது நான் கடையை பார்த்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு வாடிக்கையாளர், தம்பி! க்ளோசப் பேஸ்ட் ஒன்னு கொடு! என கேட்டார், நான் தேடி பார்த்துவிட்டு,க்ளோசப் இல்லைங்க! என்றேன். உடனே அப்பா உள்ளிருந்து சார் கோல்கேட் தரட்டுமா? என்றார்! வாடிக்கையாளரும் சரி என வாங்கி சென்றார். உடனே என் தந்தை என்னை பார்த்து வியாபாரம் எப்படி செய்யனும்னு கத்துக்க! கெடுக்காத என்றார், அசிங்கமாக போய் விட்டது எனக்கு! எப்படியாவது தந்தையிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என உறுதி எடுத்துகொண்டேன். சற்று நேரத்தில் இன்னொரு வாடிக்கையாளர், தம்பி ! வாழைப்பழம் இருக்கா? என  கேட்டார். அப்போதுதான் விற்று தீர்ந்தது வாழைப்பழம். ஆனாலும் என் தந்தையிடம் நல்ல பெயர் வாங்கும் ஆர்வத்தில் , சார் பேரீச்சம்பழம் இருக்கு தரட்டுமா? என்றேன். வாடிக்கையாளரும் அப்பாவும் என்னை பார்த்து சிரித்தனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா முதல் முதலாக சபரிமலைக்கு மாலை போட்டார்! எங்கள் வீட்டில் அதிக சந்தோஷம் எனக்குத்தான். காரணம். மாலை போட்டால் அப்பா அடிக்கமாட்டார், திட்டமாட்டார் என அம்மா சொன்னார்! அது போலவே அப்பாவும் என்னை வாங்க சாமி,போங்க சாமி என்றார். ஒரு நாள் மொத்த வியாபாரம் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு கடை திரும்பினேன். என் போதாத நேரம் , ஒரு பொருள் மிஸ்ஸிங். சரி அப்பாதான் மாலை போட்டிருக்கிறாரே நம்மை திட்ட மாட்டார் என சந்தோஷமாக இருந்தேன். இடிவிழுந்தது அந்த எண்ணத்தில், அட புறம்போக்கு சாமி! எருமமாடு சாமி ! உனக்கு அறிவு இருக்கா சாமி! என மரியாதையோடு திட்ட ஆரம்பித்தார்! கொடுமைடா சாமி என நானே நொந்துகொண்டேன் !   

தொடரும் !!!!!!


நன்றியுடன் 
இரா.மாடசாமி                        





[மேலும் படிக்க>>>]

Monday 24 September 2012

வடிவேலுவும் ! தமிழ் பாடல்களும் !

- 4 comments

 வணக்கம் நண்பர்களே !
                                             கொஞ்ச காலமா நம்ம  நகைச்சுவை நடிகர் வடிவேல் அண்ணன் பத்தி ஒண்ணுமே போடல ! அதனால அவர வச்சு ஒரு நகைச்சுவை பதிவ போடலாம்னு இந்த பதிவ போடுறேன் ! அதாவது நம்ம வடிவேல் அண்ணன் தியேட்டருக்கு போய் சில தமிழ் படங்கள பாக்குறார் ! அதுல வர்ற  சில தமிழ் பாடல்கள் அவர சில கேள்விகள் கேட்க வைக்குது ! அதுக்கு  வடிவேலு அண்ணன் கமெண்ட் குடுக்குறார் ! இது ஒரு கற்பனை கலந்த  நகைச்சுவை பதிவு ! யாருடைய  மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் !

பாடல் : ஏன் உச்சி மண்டைல சுர்ருங்குது !
வடிவேல்:  தம்பி ! வாராவாரம்  சனிக்கிழமை எண்ணெய் தேச்சு குளிப்பா! சரி ஆயிடும் !

 பாடல் : டாடி மம்மி  வீட்டில் இல்ல ! தட போட யாரும் இல்ல !
விளையாடுவோமா உள்ள வில்லாடா!
வடிவேல் : யே ! யே ! என்ன இது ! சின்ன புள்ள தனமா இருக்கு ! பொம்பள புள்ள மாதிரியா நடந்துக்குற ! இப்பிடி எல்லாம் பேசிக்கிட்டு இருந்த ! மவளே!!

பாடல் : டான் ! டான் ! டான் ! பில்லா டான் ! டானுக்கெல்லாம் டான் !
வடிவேல் : ஏன் தம்பி கோயில் மணி எதுவும் வாய்க்குள்ள போட்டு முழுங்கிட்டயா! ஏன்பா வாயில இருந்து டான் டான் சத்தம் வருது ! 

பாடல் : எவண்டி உன்ன பெத்தான் !பெத்தான் !பெத்தான்! அவன் கைல கெடச்சான் செத்தான் !
வடிவேலு : மவனே !  இப்ப நீ என் கைல கெடச்ச! பாட்ட பாரு !

பாடல் : ஒய் திஸ் கொலைவெறி ! கொலைவெறி !கொலைவெறிடி!
வடிவேல் :  அதேதான் நான் கேக்குறேன் ! உன்னை எல்லாம் யார் பாட்டெழுத சொன்னது !ஒய் திஸ் கொலைவெறி !


பாடல் : எந்திர்ர்ரா !எந்திர்ர்ரா !எந்திரா !எந்திரா!எந்திரா!எந்திரா!எந்திரா!என்திரன்!
வடிவேலு : இவரு ஏன் இத்தன தடவ நம்மள எந்திரிக்க சொல்றாரு ! தேசிய கீதம் பாட போறாரோ ! சரி எந்திருச்சுருவோம்! 

பாடல் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் !
வடிவேலு: ஸ்ஸ்ஸப்பா  முடியல ! முடியல !ஏன்டா அவசரம்னா போகசொல்ல வேண்டியதானே ! பாட்டு பாடிக்கிட்டு நிக்கிற!

பாடல் : மாக்க ஏல ! மாக்க ஏல ! காயகவுவா !
வடிவேல் : நல்லத்தனய்யா போய்கிட்டு இருந்துச்சு ! திடீர்னு ஏன் இந்தி பாட்ட போடுறாய்ங்க !


பாடல்: கட்டி புடி ! கட்டிபுடிடா! கண்ணாளா  கண்டபடி கட்டிபுடிடா!
வடிவேலு : அய்யோ ! அய்யோ ! அவன் சும்மா இருந்தாலும் இவ சும்மா இருக்க மாட்டா போலருக்கே ! அடியே!

கடைசியாக  வெறுத்துபோய் வீட்டுக்கு வந்து டிவி பார்க்கலாம்னு ரிமோட்ட ஆன் பண்றார் ! அப்பா ஒரு பழைய MGR பாடல் ஓடிக்கிட்டுருக்கு !

பாடல் : இன்பமே ! உந்தன் பேர் பெண்மையோ !
வடிவேல் : இவர் ஒருத்தரு ! அமுக்குன இடத்துலேயே அமுக்கிகிட்டு !





[மேலும் படிக்க>>>]

Tuesday 18 September 2012

இளையராஜா ! இசையராஜா!

- 8 comments
வணக்கம் நண்பர்களே !
                                                 அண்மையில் "நீதானே என் பொன் வசந்தம்" படத்தின் இசை வெளியீட்டு விழாவினை தொலைகாட்சியில்  பார்த்தேன் ! இளையராஜாவின் இசையில் நிறைய எதிர்பார்ப்புக்களோடு திரைக்கு வர இருக்கிறது ! பொதுவாக இளைய ராஜா இசை வெளியீடு நிகழ்சிகளில் பங்கேற்க மாட்டார். இப்போது அடிக்கடி பங்கேற்று  ரசிகர்களுக்கு உற்சாகமூட்டுகிறார் . நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைஞானி இசையில் வெளிவந்த சில முத்தாய்ப்பான பாடல்களை அவருடைய இசை குழுவில் உள்ளவர்கள் வாசிக்க கேட்டேன். அது  என்னை கொஞ்சம்  பின்னோக்கிய  காலத்திற்கு அழைத்து சென்றது ! அதை பற்றிய  ஒரு பதிவுதான் இது .  இந்த பதிவு முழுக்க முழுக்க இசைஞானி அவர்களுக்கு சமர்ப்பணம் .


இளையராஜா ! தமிழ் சினிமாவிற்கு என்றுமே இசையராஜாதான் இரா.பார்த்திபன் சொன்னதுபோல ! 1970-80 கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் இசை துறையில்  ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வந்த இசை சக்கரவர்த்தி !  இசை என்பது கேட்க கூடியதல்ல ! உணரக்கூடியது !அந்த உணர்வை தனது ஒவ்வொரு பாடலிலும் தருகிறவர் இசைஞானி ! இன்றளவும் பின்னணி இசையில் இவரை அடித்து கொள்ள ஆளே இல்லை எனலாம் ! மற்றவரின் இசை நம்மை மகிழ்ச்சி படுத்தும் ! இவரின் இசை மட்டுமே  நம்மை பரவசபடுத்தும் !

 " புது ராகம் படைப்பதாலே நானும் பிரம்மனே " ஆம் ! இவர் உண்மையில் இசைக்கான பிரம்மன் ! ஒவ்வொரு படைப்பும்  ஒவ்வொரு விதம் !முந்தய படைப்பின்  சாயம் இல்லாமல் நேர்த்தியாக  இன்னொன்றை   படைப்பதில் இவர் பிரம்மன் தான் !

இவரது படைப்பில் எனக்கு பிடித்த சிலவற்றை  உங்கள் முன் பகிர்வதில
மகிழ்ச்சியடைகிறேன் .

தாய் மூகாம்பிகை! " ஜனனி ! ஜனனி!  என்ற இந்த பாடல்  கண்களை  மூடிக்கொண்டு  தனி  அறையில் நீங்கள் கேட்டால்  கண்டிப்பாக ஒரு  மாற்றத்தை உணர்வீர்கள்!

அவதாரம்!"தென்றல் வந்து தீண்டும்போது" என்ற பாடலின் சரணத்துக்கு முன் வரும்" தந்த தான" என தொடங்கும்  ராஜாவின் ஹம்மிங் ! சான்ஸே இல்லை ! ராஜா ராஜா தான் !

அரங்கேற்றவேளை ! " ஆகாய வெண்ணிலாவே "இந்த பாடலின் பல்லவியில் வரும் ஒவ்வொரு வரிகளும் ஏற்ற இறக்கத்துடன் அழகான  சந்தம்!மேலும் பல்லவிக்கு முன் வரும் வயலின் இசை மனதை மயக்கும் !

மூன்றாம் பிறை !"கண்ணே கலைமானே"! சிறு வயதில் இந்த பாடலை போட்டுவிட்டால் தானாகவே  தூங்கி விடுவேனாம் ! அம்மா  சொன்னது ! அருமையான தாலாட்டு !

பன்னீர் புஷ்பங்கள் !"ஆனந்த ராகம் " என்ற பாடல்களுக்கு முன் வரும் இசை கோர்வை ஜிவ்வென்று உங்களை இழுத்தால் ஆச்சர்யமில்லை ! கீழே சொடுக்கி அதை உணருங்கள் !


சிந்து பைரவி !" கலைவாணியே !  என்ற பாடலில்  " கண்ணீர்  பெருகியதே " என யேசுதாஸ் உச்ச ஸ்தாதியில் பாடும் இடத்தில் நமக்கு கண்ணீரை வர வைத்துவிடும்! இளையராஜா -வைரமுத்து கூட்டணி மீண்டும்  எப்போது ?

தர்ம பத்தினி ! நான் தேடும் செவ்வந்தி பூவிது ! எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் !

முதல் மரியாதை ! ராசாவே உன்னை நம்பி ! மெல்லிசையின் முத்திரை !

இன்னும் சொல்லிகொண்டே போகலாம் ! பின்னணி பற்றி எழுத வேண்டுமே !

 மௌன ராகம்- கார்த்திக் ரேவதி காதல் காட்சியின்  பின்னணியில்  ஒலிக்கும்    "கீ  போர்டு "  இளையராஜாவின் ஸ்கோர் போர்டு

வீடு திரைப்படத்தில் " சொக்கலிங்க பாகவதரின் சோகத்தை உணர்த்தும்
 வயலின்  எத்தனை  முறை என்னை அழ வைத்தது !

காதலுக்கு மரியாதை-கடைசி காட்சியில் இவர் சேர்த்திருக்கும் பின்னணி இசை நீங்களே கேளுங்கள்  ! முழுவதுமாக கேட்க வேண்டும் ! குறிப்பாக ஷாலினியின் தாயிடம் ஸ்ரீவித்யா ஷாலினியை பெண் கேட்டதும் " ஷாலினியின் தாய்" எடுத்துகோங்க,கூட்டிட்டு போங்க "  என சொல்லி முடித்தவுடன் வரும் இசை கோர்வையை கவனமாக கேட்கவும் !



 இது போல் ஆயிரம் ஆயிரம் சொல்லிகொண்டே போகலாம் !  மாலை சூட மலர்கள்  பத்தாது ! புகழை வர்ணிக்க வார்த்தைகள் பத்தாது !  வாழ்க இசைஞானி! வளர்க அவர்தம் புகழ் !


நன்றியுடன்
இரா.மாடசாமி

[மேலும் படிக்க>>>]

Saturday 15 September 2012

நகைச்சுவை கவிதை கதம்பம்

- 3 comments
வணக்கம் நண்பர்களே !
                                                   நீண்ட நாட்களுக்கு பிறகு எனது யார் நடிகன் ?   

பதிவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன . வாக்களித்த அனைவருக்கும் மிக்க

 நன்றி !  ஒரு சிறிய  கதம்பம்   ஒன்றை இந்த பதிவில் விட்டு செல்கிறேன் !

 -----------------------------------------------------------------------------------------------------------------------
கவிதை 

இசைக்கருவிகள்

காலில் படக்கூடாதம் !

கழட்டிவிடு கண்ணே!

உன் கொலுசுகளை !
--------------------------------------------------------------------------------------------------------------------------
நகைச்சுவை 



ஆசிரியர்:  ஏண்டா   இவ்வளவு லேட்டா  வர்ற  !

மாணவன் : இந்த  பொண்ண  பின் தொடர்ந்து வந்தேன்   சார் !

ஆசிரியர்:  ஏம்மா  நீ ஏன் லேட்டு ! நீ வர வேண்டியதானே !

மாணவி :  அவன் ரொம்ப மெதுவா பின் தொடர்ந்தான் சார் !

          **************************************************

ஆசிரியை : மாணவர்களே!இப்ப ஒரு வாக்கியம் சொல்வேன்  அது எந்த

                         காலத்தை  குறிக்கிறது என சொல்லணும் சரியா ?

மாணவர்கள் : சரிங்க டீச்சர் !

ஆசிரியை: நான் அழகாக  இருக்கிறேன் ! இது எந்த காலம் ?

மாணவர்கள் : இறந்த காலம் டீச்சர் !

        ******************************************************

ஆசிரியர் : நெப்போலியனின்  வெற்றிகள்  பற்றி சொல்லு  ?


மாணவன்: சீவலப்பேரி பாண்டி , கிழக்கு சீமையிலே , எட்டுபட்டி ராசா !

       **********************************************************  


--------------------------------------------------------------------------------------------------------------------------

 கணிணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்த என்னிடம் சொன்னான்

 என் மகன்

" உங்க கம்ப்யூட்டர் தப்புப்பா"!

 ஏண்டா?  என்றேன்  ஆச்சர்யத்தோடு !

"நயன்க்கு  அப்புரம் டென் தானே  வரும் ! இங்க பாருங்க ஜீரோ இருக்கு!

 மழலையின் அறிவில் பூரிப்படைந்தேன் !

 -------------------------------------------------------------------------------------------------------------------------




நன்றியுடன்

இரா.மாடசாமி


 
[மேலும் படிக்க>>>]

Thursday 13 September 2012

யார் நடிகன் ?

- 6 comments
வணக்கம் நண்பர்களே !
                      என்னுடைய முந்தைய பதிவான புரியாத பாடல்வரிகளும் ! அதன் அர்த்தங்களும் ! பதிவு அனைவருக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.நிறைய பேர் பாராட்டி எழுதி இருந்தனர்.அனைவருக்கும் நன்றி ! 


அண்மை காலமாக  திரை உலகில் நான் அடிக்கடி கேள்விப்படும் ஒரு நிகழ்வு.அதாவது ஒரு பெரிய இயக்குனரும்,பெரிய நடிகரும் இணைந்து ஒரு படம்  பண்ண ஒப்புகொண்டு  பின்னர் அதை கைவிடுவது! காரணம் கேட்டால், அந்த பெரிய  நடிகர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிடுவார்.அது என்னவெனில்" இந்த கதை எனக்கு பொருந்தாது" "என்னுடைய ரசிகர்கள் விரும்பமாட்டார்கள்" என்று கூறுவார். இதை பற்றிய  ஒரு சிறு அலசல் இந்த பதிவு.


யார் கதாநாயகன்!
                  எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் கதையின் கருவை உள்  வாங்கி கொண்டு,கதைக்கு பொருந்தி, அதற்கேற்றாற்போல் தம்மை மெருகேற்றி  நடிக்க கூடியவர்தான் கதையின் நாயகன் ! ஆனால் இன்று கதா நாயகன் வெறும் நாயகனாக  மட்டுமே நமக்கு தோற்றமளிக்கிறார்.  அன்றைய காலத்தில்  நடிகர் திலகம்  திரு .சிவாஜி அவர்கள் கதைக்காக மட்டுமே நடித்தார். அவர் அவ்வாறு  நடிக்கவில்லை எனில் ஒரு வீரபாண்டிய கட்டபோம்மனையோ, கப்பலோட்டிய தமிழனயோ , கர்ணனயோ  நாம் அவர் உருவில் கண்டிருக்க முடியாது !

ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ,பொது மக்களின் எதிர்பார்ப்பும் !

என்னதான் மக்களுக்காக நடித்தாலும் ரசிகர்கள்தான் தியேட்டருக்கு முதல் நாளில் வந்து எங்களை வாழ்த்துகிறார்கள் ! படம் வெளியிடும் முதல் நாள்  வேலையை விட்டு விட்டு விடிய விடிய உழைக்கிறார்கள் அதனால் அவர்களின் ரசனைக்குத்தான் படம் எடுக்க முடியும்  என்று கூறலாம் ! ஒரு  ரசிகன் எதனால் ஒரு நடிகருக்கு ரசிகராகிறான் ! அந்த நடிகரானவர்  ஏதோ  ஒரு வகையில் அந்த ரசிகனை ஈர்க்கிறார்!  உடனே அந்த நடிகர் மீது பற்று உண்டாகிறது.அவ்வளவுதான் அடுத்து வரும் படங்களில் அந்த நடிகர் நடித்தாலும் சரி! இல்லை என்றாலும் சரி! ஆனால் ஒரு சாதாரண , நடுநிலையான ஒருவர்  படத்தில் நடிகரின்  நடிப்பையோ , அவர் செய்யும்  சாகச காட்சிகளையோ   மட்டும் விரும்புவதில்லை  மாறாக  படத்தின் அத்தனை அம்சங்களையும் விரும்புவார் ! பிடித்திருந்தால்  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிந்துரை செய்வார்! இவ்வாறு பரிந்துரை செய்த படங்கள் தான் நூறு நாட்களுக்கு ஓடுகிறது! 

கதைக்காக நடித்ததால்தான் சிவாஜிக்கு   இன்றளவும் நமது தாத்தா ,பாட்டி கூட ரசிகர்களாக இருக்கிறார்கள். மக்கள்  அவருக்கு நடிகர் திலகம் என பட்டம் சூட்டினரே அன்றி  யாரும்  ரசிகர் திலகம் என்று பட்டம் கொடுக்கவில்லை! ஒரு குறிப்பிட்ட ரசிகர்  கூட்டத்துக்கு  மட்டும் நடிப்பேன்  என்று சொன்னால் அந்த நடிகரை  மக்கள் மறக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை !



நன்றியுடன்!
இரா.மாடசாமி  






[மேலும் படிக்க>>>]

Wednesday 12 September 2012

புரியாத பாடல்வரிகளும் ! அதன் அர்த்தங்களும் !

- 12 comments
வணக்கம் நண்பர்களே !
                                                 இன்றைய காலங்களில்   நல்ல திரைப்பட பாடல்கள்  வந்தாலும், வார்த்தைகள்  புரிவதில்லை.அதற்காகவே மிக அரும்பாடுபட்டு அந்த பாடல் வரிகளின் அர்த்தம் கண்டுபிடிக்கும் முனைப்பில் இறங்கி சிலவற்றை மட்டும் கண்டுபிடித்துள்ளேன். இது யூகத்தின் அடிப்படையில் கண்டுபிடிக்க பட்டது . பாடலாசிரியர்  என்ன நினைத்து எழுதினாரோ எனக்கு தெரியாது !


முதலில் இப்போது திரை அரங்குகளில் ஓடிகொண்டிருக்கும் "நான்" திரைப்படத்தில் வரும் " மாக்க ஏல, மாக்க ஏல, காயகவுவா " அதாவது திருநெல்வேலியை மற்றும் தூத்துக்குடி பகுதியை சார்ந்த மக்கள் தமக்கு  நெருக்கமானவர்களை "ஏலே மக்கா" என அன்போடு அழைப்பர்கள். அதனை அடிப்படையாக கொண்டு  பாடலாசிரியரும் இசை அமைப்பாளரும் அதை மாற்றி போட்டு "மாக்க ஏல" என  வரிகளை அமைத்துள்ளனர். மேலும்  "கையை கழுவ வா " என்பதன் சுருக்கமே "காயா கவு வா" என்பதாகும் . இப்போது படியுங்கள்  ஏலே மக்கா,ஏலே மக்கா,சாப்பிட்டு விட்டு கையை கழுவ வா என்பதே இதன் பொருளாகும் .

அடுத்து , காக்க காக்க படத்தில் வரும் "ஓமகா சீயா மாகியாஹா ,ஹீமோ மகாசகியா " இந்த பாடல் படமாக்க பட்டிருக்கும் இடம் கடற் பகுதி  அதை உணர்த்தவே  இந்த வரிகள் (மகா- பெரிய ,"SEA"yaa   - கடலே )  (மாகியாகா- யாதுமான) (ஹீமோ - மானிடன் ) (மகா- பெரிய )( சகியா -தோழியா)
ஓமகா சீயா -ஒ  பெருங்கடலை போன்றவளே !
மாகியாஹா-எல்லாமாகிய !
ஹீமோ மகாசகியா -  மானுடத்தில் பெரிய தோழியே

அடுத்து , காதலில்  விழுந்தேன் திரைப்படத்தில் வரும் அட்ரா  அட்ரா நாக்க முக்க என்ற  பாடல். குத்து சண்டையில் நாக் அவுட்   என்று அழைக்கப்படும் ஒரு முறையாகும் . அதாவது மூக்கில் அடித்து  நாக் அவுட் செய் என்பதே இதன் விளக்கம் விரிவாக சொல்ல போனால் அடிடா! அடிடா! மூக்கில் அடித்து நாக் அவுட் செய்  என்பதாகும்

அடுத்து ஒரு பழைய பாடல் ! சூரியன் படத்தில் வரும் லாலாக்கு டோல் டப்பிமா ! லா - விதி , லாக்கு-பூட்டு , டோலு - சுங்க சாவடி , டப்பி,டப்பு- காசு
அதாவது  பூட்டியிருக்கும் சுங்க சாவடியில்  விதிப்படி காசு கட்டிவிட்டு செல்லுங்கள் என்று பாடலாசிரியர் கூறுகிறார்.

நண்பர்களே ! இந்த பாடல்களின்  ரசிகர்கள் கோபம் கொள்ள கூடாது!  புரியாத வரிகளை அர்த்தம் கண்டுபிடிக்கும் ஒரு சிறு முயற்சியே . இது ஒரு வானவில்லின்  இலக்கிய ஆராய்ச்சியின்  படைப்பு ! இந்த படைப்பிற்கு விழும் ஓட்டுக்களின் எண்ணிக்கையை பொறுத்து அடுத்த ஆராய்ச்சி தொடங்கும் !


நன்றியுடன் !
இரா.மாடசாமி




[மேலும் படிக்க>>>]

Friday 7 September 2012

எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !

- 4 comments
வணக்கம் நண்பர்களே ! 
                                         அண்மையில் நடந்த சிவகாசி வெடிவிபத்து என்னை நிலை குலைய செய்தது  !  விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன் என்கிற முறையிலும் , அந்த ஊரில் தங்கி படித்தவன் என்கிற முறையிலும் என்னை இன்னும் வெகுவாகவே பாதித்தது!  வெடி விபத்தில் இறந்து போன அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை  இந்த கவிதை/பாடல் மூலம் தெரிவித்து கொள்கிறேன் !

தெற்கு தமிழ் நாட்டினிலே தொழில் செய்யும்  நகரமுங்க !
கரிசல் மண் பூமியிலே கந்தக காத்து வீசுமுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !


பட்டாசு செய்வதிலே பெயர் வாங்கி குடுத்ததுங்க  , இன்று 
பட்டாசு விபத்துக்கு பெயராகி போனதுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி ! 



ஒரு நாளு பண்டிகையாம் உங்களுக்கு தீபாவளி ! அதுக்கு 
ஒரு வருஷம் உழைப்பாங்க எங்க ஊரு தொழிலாளி !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !

மாவட்ட செய்தியிலே ஓரமாக வந்ததுங்க ! இன்று 
மாநிலத்தின் செய்தியிலே தலைப்பாக வந்ததுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !

அப்பப்போ வெடிவிபத்தில் பெரிய சத்தம் கேக்குமுங்க ! 
அப்பமட்டும்  சர்க்காரு சைரன் சத்தம் கேக்குமுங்க ! 
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !
 
பாஸ்பரசும் , கந்தகமும்  வாழ்க்கையாகி போனதுங்க !எங்களுக்கு
பட்டாசு வெடி விபத்து  வழக்கமாகி போனதுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !





நன்றியுடன் !
இரா.மாடசாமி 

                                        
[மேலும் படிக்க>>>]

Wednesday 5 September 2012

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

- 8 comments
வணக்கம் நண்பர்களே !
                                             பின் வரும் நகைச்சுவைகள் அனைத்தும் நான் பார்த்து, படித்த , கேள்வி பட்ட நகைச்சுவைகள் மட்டுமே ! எதுவும் எனது சொந்த படைப்பு கிடையாது! ஆதலால்,  "நான் இதை  எங்கேயோ படிச்சுருக்கேன் !" என்று யோசிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்ளபடுகிறார்கள்!






அலெக்சாண்டர்:  முடியாது என்கிற வார்த்தையே என் அகராதியிலேயே  கிடையாது !
சர்தார்ஜி : அதுக்கு இப்போ  என்ன பண்றது ! டிக்க்ஷனரி வாங்கும்போதே பாத்து வாங்கணும் !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

கணவன் : பங்கஜம் நீ பண்ணுன மைசூர்பா நல்ல இருக்கு ! ஆனா கடிக்கத்தான் முடியல ! கல்லு மாதிரி இருக்கு!
மனைவி : என்ன கொழுப்பு உங்களுக்கு !  அது அல்வா!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
 
பயணி : நீங்க வண்டி ஒட்டுறதா பார்த்த பயமா இருக்குங்க !
டிரைவர் : பயமா இருந்த என்னை மாதிரி நீங்களும் கண்ணை மூடிக்குங்க !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

ஆசிரியர் : உங்க பையனுக்கு தமிழ் உச்சரிப்பு சரியா வரல ! "ஏராளம்" அப்படீன்னு சொல்லச்சொன்னா "ஏளாரம்" அப்டீன்னு சொல்றான் ! டியூஷன் வச்சு தான் சொல்லி கொடுக்க முடியும் !
மாணவனின் தந்தை : அதுக்கு என்னங்க "தாளாரமா" சொல்லி குடுங்க !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

நர்ஸ்: டாக்டர்! அந்த பேஷண்டுக்கு மயக்க மாத்திரை குடுத்தும் மயக்கம் வரல!
டாக்டர் : ஹாஸ்பிட்டல் பில்லை காமிங்க ! மயக்கம் வந்திடும் !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

அப்பா : எல்லா பாடத்துலயும் பெயிலாயிட்டு என்கிட்டே Sign கேக்குறியா ! என்ன உன் அப்பன்னு சொல்லாதடா !
மகன் : சரி மச்சி  சீன் போடாம  Sign போடு
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
ஆசிரியர் : மாணவர்களே ! என்னை ஆசிரியராக பாவிக்காமல் உங்களில் ஒருவனாக எண்ணுங்கள !
மாணவன் :  மாப்ள  ! ஜன்னல் பக்கத்துல பாரேன் ! சூப்பர் figure !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நோயாளி : டாக்டர் ! உடம்புல  சத்தே இல்லை டாக்டர் !
டாக்டர் :அதுக்கு தான்  சத்து டானிக் எழுதி கொடுத்தேனே !
நோயாளி : அந்த டானிக் மூடிய  தொறக்கவே முடியல டாக்டர் ! 
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ 


நகைச்சுவை அனைத்தும்  மொக்கையாக இருந்ததா?!  நன்றாக இருந்ததா ! கருத்துரைக்கவும் !  


நன்றியுடன்

இரா.மாடசாமி  

[மேலும் படிக்க>>>]
 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger