Friday, 14 March 2014

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார் ?

- 0 comments
வணக்கம் நண்பர்களே !
                       இன்றைய சினிமாவில் தினமும் எவ்வளவோ விஷயங்கள் தினம் தினம்  நடந்து கொண்டிருந்தாலும் , குறிப்பிட்ட ஒரு சில நடிகர்களின்  வட்டத்துக்குள் அடுத்தது என்ன என எதிர்பார்ப்பு கூடிகொண்டே இருக்கும். இள வயது நடிகர்கள் தொடர்ந்து நடித்து  கொண்டிருக்கின்றனர். ஆனால்,சில  மூத்த நடிகர்கள் (ஹிட் நடிகர்கள்) படங்கள் சீக்கிரம் வெளிவராது குறிப்பாக சொல்லப்போனால் ரஜினி மற்றும் கமல். இதில் கமல் ஆண்டுக்கு ஒரு படம் கொடுத்து விடுகிறார். இது விஷயமாக சமீபத்தில் நடந்த ரசிகர்கள்  பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் "ஒரு வருடத்தில் மிக குறைந்த எண்ணிக்கையில் (ஒன்று அல்லது இரண்டு படங்களில்) மட்டுமே  நடிக்கிறீர்கள் . இது  எங்களுக்கு பத்தாது என  கூறினார் . அதற்கு கமல்," இது எனக்கே பத்தாது"  என  அவருக்கே உரிய நகைச்சுவையோடு கூறினார். ஆனால் ரஜினி படங்கள் கேட்கவே  வேண்டாம் . எப்போது நடிப்பார் ? யார் இசை ? யார்  கதாநாயகி ?என நாளிதழ்கள் , தொலைகாட்சிகளில்  எப்போதும் பரபரப்பு, இதை எல்லாம் விட அவரை இயக்குவது யார் என்பததுதான் உச்ச பட்ச எதிர்பார்ப்பாக இருக்கும். அதனை பற்றிய ஒரு சிறிய அலசல் தான் இந்த பதிவு .

ரஜினி என்றாலே  ரசிகர்கள் அல்லாமல் குழந்தைகள் , பெண்கள்,முதியவர், என அனைத்து தரப்பினரும் பார்ப்பார்கள் என திரை உலகில் ஒரு கருத்து உண்டு. அதே போல ரஜினியின்  படம்  மாநகரம், நகரம், கிராமம் என அனைத்து வித மக்களையும் திருப்தி படுத்தும் விதமாக இருக்கும்! படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் .ஆனால்,ரஜினி நடித்து தற்போது விரைவில் வெளிவர உள்ள கோச்சடையான்  எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்று சொல்ல முடியாது!காரணம் அவர் ஒரு மாஸ் ஹீரோ ! மாஸ் ஹீரோவின் அசல் உருவத்திற்கும்,3டி  உருவத்திற்கும்  மிகப்பெரிய வேறுபாடு  உள்ளது ! இந்த படத்தின் Making  எனப்படும்  உருவாக்கும் முறை ரஜினிக்கு முற்றிலும் புதிது.இதனை ரசிகர்கள் எந்த அளவு வரவேற்ப்பார்கள் என தெரியவில்லை ? இந்தப்படம் வெற்றி பெற்றால் பரவாயில்லை.  அப்படி வெற்றி பெறாமல் போகும் பட்சத்தில் ரஜினியின் அடுத்த படம் கட்டாய வெற்றியை நோக்கி  என ஒரு வித நெருக்கடிக்கு ஆளாகும் ! அதனால் இப்போதே  ரஜினியின் அடுத்த படத்தை பற்றிய செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன .


ரஜினியின்  அடுத்த படத்தை  இயக்குவது  யார் ?

ரஜினி எப்போதுமே வெற்றிபெறும்  குதிரையின் மீதே சவாரி செய்து பழக்கம்! ஆதலால் !புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு என்ன என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் !

 அவரை வைத்து ஏற்கனவே இரண்டு  படங்களை  இயக்கிய K  S  ரவிக்குமார்
இயக்குவாரா ? அதற்கு   25 % வாய்ப்புகள் இருந்தாலும்  அவரின்  படங்கள் இன்றைய  Corporate  உலக மக்களுக்கு பிடிக்குமா என்பது தெரியவில்லை ! ஏன் என்றால் இன்றைய நிலையில் தியேட்டரின் முதல் வார வசூல் இவர்களை நம்பியே இருக்கிறது !அதனால் ரஜினியே கொஞ்சம் யோசிப்பார் !அடுத்தது K V  ஆனந்த் ! இவர்  இயக்குவதற்கு 75% வாய்ப்பு உள்ளது ! ஏன் என்றால் இவர் ஒரு வெற்றிப்பட இயக்குனர் !மேலும் ஷங்கரை போல  தொழில்நுட்பத்திலும் திறமைசாலி ! இவரின் அயன் மற்றும் கோ போன்ற திரைப்படங்கள்  வெற்றிப்படங்கள் !

கடைசியாக  ஷங்கர் ! படத்தின் வெற்றிக்கு 100 சதவீத உத்திரவாதம் இவர் தருகிறாரோ இல்லையோ ரசிகர்கள் தந்து விடுகிறார்கள் ! படம் எடுப்பதற்கு கொஞ்சம் முன்னோ பின்னோ ஆகலாம் ! ஆனால்  நிச்சய வெற்றி! ஏற்கனவே ரஜினியை வைத்து  இரண்டு மெகாஹிட் படத்தை  கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் அதிபர் போன்ற அனைத்து பிரிவினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுக்கும் தமிழ் சினிமாவின் ATM !    ரஜினி படத்தின் தயாரிப்பு செலவுகுகளை  மீறி லாபம் பார்க்க வேண்டுமானால்  இது போன்ற கூட்டணி வைத்தால் மட்டுமே முடியும்  என ரஜினிக்கே தெரியும் ! மேலும் தமிழ் திரை  உலகில் தனது மாஸ் ஹீரோ இமேஜை தக்க வைத்துகொள்ளவும் ரஜினிக்கு இந்த கூட்டணி அவசியம்!

இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடத்தான் போகிறது !

ரஜினி  புதிய குதிரையில் பயணித்து  வெற்றி பெற போகிறாரா ? அல்லது வெற்றி பெற்ற குதிரையில் பயணம் செய்ய போகிறாரா என்று  ? பொறுத்திருந்து பார்ப்போம் !


நன்றியுடன்
இரா.மாடசாமி

[மேலும் படிக்க>>>]
 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger