Monday 27 January 2014

ஆதார் அட்டையும் கொஞ்சம் ஊறுகாயும் !

- 4 comments
வணக்கம் நண்பர்களே ! சமீபத்தில் ஆதார் அட்டை வழங்கும் முகாமிற்கு சென்றிருந்தேன் ! அங்கு ஒரு வரிசையில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். 

அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரிடம், இந்த வரிசை எதற்கு? என கேட்டேன்.

அதற்க்கு அவர், தம்பி ! இதுதான் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்க டோக்கன் குடுக்குற இடம் ! என சொன்னார் . 


நானும் அந்த வரிசையில் நின்று கொண்டேன் ! ஒரு மணி நேரம் கழித்து எனது முறை வந்தது.

டோக்கன் கொடுக்கும் நபர் என்னிடம் , டோக்கன் எங்க? என கேட்டார்.

என்ன சார் ! நீங்க தான் டோக்கன் குடுக்கணும் ! என நான் கேட்டேன் .

தம்பி ! போட்டோ எடுக்க நான்தான் டோக்கன் குடுப்பேன் ! ஆனா இந்த டோக்கன் வாங்க காலைல 5 மணிக்கு ஒரு டோக்கன் குடுப்போமே ! அது எங்கப்பா ? என சொன்னார் .

என்னது ? டோக்கன் வாங்க டோக்கனா ? 


 அப்புறம் என்ன ? கீழே உள்ள மாதிரி ஒரு லுக் விட்டுட்டு வந்துட்டேன் 



Photo: சமீபத்தில் ஆதார் அட்டை வழங்கும் முகாமிற்கு சென்றிருந்தேன் ! அங்கு ஒரு வரிசையில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர் . அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரிடம் ,

 இந்த வரிசை எதற்கு? என கேட்டேன்.

 அதற்க்கு அவர், தம்பி ! இது தான் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்க டோக்கன் குடுக்குற இடம் ! என சொன்னார் . நானும் அந்த வரிசையில் நின்று கொண்டேன் !  ஒரு மணி நேரம் கழித்து எனது முறை வந்தது. 

 டோக்கன் கொடுக்கும் நபர் என்னிடம் , டோக்கன் எங்க? என கேட்டார். 

என்ன சார் ! நீங்க தான் டோக்கன் குடுக்கணும்  ! என நான் கேட்டேன் .

தம்பி !  போட்டோ எடுக்க நான்தான் டோக்கன்  குடுப்பேன் ! ஆனா இந்த டோக்கன் வாங்க  காலைல 5 மணிக்கு ஒரு டோக்கன் குடுப்போமே ! அது எங்கப்பா ? என சொன்னார் .

என்னது ? டோக்கன் வாங்க டோக்கனா ? விளங்கிறும்!
              ----------------------------------------------------------------------------------------------


கொஞ்ச நாள் முன்னாடி உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கானு கேட்டாங்க ! இப்போ உங்க டூத் பேஸ்ட்ல எலுமிச்சைசக்தி மற்றும் உப்பு அடங்கி இருக்கான்னு கேட்குறாங்க !! இன்னும்  மிளகாய் போடி மட்டும்தான் பாக்கி !
 அதுவும் சேத்துட்டாங்கன்னா  ஊறுகாய் ரெடி ! அப்புறம் டூத்பேஸ்ட் மற்றும் ஊறுகாய் டூ இன் ஒன் ! சூப்பர் ஐடியாதானே  !

Photo: கொஞ்ச நாள் முன்னாடி உங்க  டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கானு கேட்டாங்க ! இப்போ உங்க டூத்  பேஸ்ட்ல எலுமிச்சைசக்தி மற்றும்  உப்பு அடங்கி  இருக்கான்னு கேட்குறாங்க !! போகிற போக்க பாத்தா அடுத்து காரம் இருக்கான்னு  கேட்பாங்க போலிருக்கே ! உண்மையிலேயே இவங்க  டூத் பேஸ்ட் விற்பனை செய்றாங்களா ? இல்ல ஊறுகாய் விற்பனை செய்றாங்களா  !
  
-----------------------------------------------------------------------------------------------------------------------

 டிவியில , 

பல்லு கறை படிஞ்சா அதை செக் பண்ண ஒரு scanner !

தலையில பொடுகு பார்க்க ஒரு scanner!

கையில கிருமி இருக்கான்னு  பார்க்க ஒரு scanner !

தோல் என்ன  கலர்னு பார்க்க ஒரு scanner! 


இப்படி எல்லாத்துக்கும் scanner இருக்கு ஓகே ! ஆனா இந்த scanner  எங்க கிடைக்குதுன்னு சொன்னா நல்லா இருக்கும் ! சொல்லுங்க பாஸ் !

 

நன்றியுடன்
இரா.மாடசாமி





[மேலும் படிக்க>>>]
 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger