Wednesday, 3 April 2013

பரதேசி படத்தில் ஏன் இல்லை இளையராஜா ?

வணக்கம் நண்பர்களே !
  
 சமீபத்தில் வெளிவந்திருக்கும் பரதேசி படம் மக்களிடையே  நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாக பத்திரிக்கை வழியாகவும்  பதிவுகளின் வழியாகவும் படித்து தெரிந்து கொண்டேன்.ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதை தட்டி சென்றது மற்றுமொரு சிறப்பம்சம். தொடர்ந்து இயல்பான,மற்றும் தரமான படங்களை கொடுத்து கொண்டிருக்கும் திரு.பாலா அவர்களுக்கு இந்த விருது ஒன்றும் புதிதல்ல! இந்த படமும் அவருக்கு புதிதல்ல!வாழ்த்துக்கள் பாலாசார்!தமிழ் சினிமாவை வாழவைத்துக்கொண்டிருக்கும் சிலரில் நீங்களும் ஒருவர்!

இந்த பதிவு விமர்சன பதிவு  அல்ல.  இந்த திரைப்படத்தில்  இளையராஜா ஏன் பங்கேற்க்கவில்லை? என என் மனதில் ஒரு சிறிய சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது .அதற்க்கு விடை காணும் முடிவாக சில கருத்துக்களை இங்கே உங்களிடம்  முன் மொழிகின்றேன் . இது எனது தனிப்பட்ட கருத்து  மட்டுமே! இதை ஏற்றுக்கொள்ளவேண்டும்  என எந்த நிர்பந்தமும் கிடையாது !


இதுவரை வெளிவந்த பாலா படங்களில் மிகப்பெரிய வெற்றி என கொண்டாடப்படும் சேது மற்றும் பிதாமகன் இரண்டிலுமே இசை  இசைஞானியே ! அப்படி இருக்க ஒரு உழைப்பு சுரண்டலும் , அடிமைகளின்  வாழ்க்கை வரலாற்றையும்  அடிப்படையாக கொண்ட, கதைக்களம் வலுவாக உள்ள  இந்த படத்திற்கு பாலா ஏன் இளையராஜாவை அணுகவில்லை ! அல்லது அணுகி நிராகரிக்கப்பட்டதா? அல்லது  வேலைப்பளுவினால (இளையராஜாவிற்கு ) ஒத்துக்கொள்ளமுடியாமல் போனதா என்பதை பாலா  மட்டுமே சொல்ல முடியும்.

 எத்தனையோ புதிய இயக்குனர்கள் அதுநாள்வரை ஒன்றாக வேலை செய்த இசையமைப்பாளர்களிடம்  இருந்து பிரிந்து வந்து இசைஞானியின் இசைமட்டுமே அந்த படத்திற்கு சரியாக இருக்கும் என முடிவில் உறுதியாக இருந்து இசைஞானியிடம் பணியாற்றியிருக்கிறார்கள்(மிஷ்கின்,கௌதம் மேனன்). அப்படியிருக்க இது நாள்வரை இசைஞானியிடமும் ,யுவனிடமும் இணைந்து பணியாற்றிய பாலாவின்  இந்த முடிவுக்கு என்ன காரணம் ?

* சற்று ஆராய்ந்து பார்த்தால் ,இளையராஜா எப்படி அவருடைய துறையில் வல்லவரோ ! அதே நிகருக்கு  வைரமுத்துவும் அவருடைய துறையில் வல்லவர் என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும் . 
 

*  இந்த படத்தில்  எந்த அளவுக்கு இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டுமோ  அதே அளவுக்கு கருத்தாழம் மிக்க  பாடல்கள் இடம்பெற வேண்டும்  என பாலா கருதியிருக்கலாம்.அதை கருத்தில் கொண்டு வைரமுத்துவுடன் பணியாற்ற விருப்பபட்டிருக்கலாம்!(1980 கால கட்டத்தில் இளையாராஜாவின் பாடல்கள்  வெற்றிபெற வைரமுத்துவின் வைர வரிகளும் முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது !)

* மேலும் இதுபோன்ற கதை வலுவுள்ள படத்திற்கு வேறு பாடலாசிரியரை அணுகினாலும் வைரமுத்து பாடல்களை போல உயிரோட்டமாக இருக்குமா என்பது சந்தேகமே ! கதைக்களம் கிராமத்து பின்புலத்துடன்  அமைந்திருப்பதால் பாடல்களும் கிராமிய வாசனையுடனும் வார்த்தைகளுடனும் அமைய வேண்டும் என அனைத்து பாடல்களையும் வைரமுத்துவுக்கே எழுத  வாய்ப்பளித்திருக்கிறார்.தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் இவர் எழுதிய "கள்ளி காட்டில் பிறந்த தாயே " என்ற பாடல் சில வருடங்களுக்கு  முன் தேசிய விருதை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா,வைரமுத்துவுடன் பணியாற்ற எப்படியும் சம்மதிக்க மாட்டார்.அதே நேரம் நல்ல இசை மற்றும் பாடல்களும் வேண்டும்.  இந்நேரத்தில், சமீபத்தில் வெளியான தெய்வத்திருமகள் ,மதராசபட்டிணம் ஆகிய படங்களில் பாடல்கள் மட்டுமல்லாது பின்னணியிலும் அசத்தியிருப்பார் ஜி.வி.அதனால் இதையும் கவனத்தில் கொண்ட பாலா, இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்து இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்  .


MSV -கண்ணதாசன் கூட்டணிக்கு பிறகு ,தமிழ் திரை உலகம் அதிகம்  ரசித்தது இசைஞானி -வைரமுத்து கூட்டணி தான் . இந்த கூட்டணி முறிந்ததால் இசை ரசிகர்கள்  இழந்த பாடல்கள் அதிகம் .இதை கருத்தில் கொண்டு மீண்டும் அவர்கள் இணைய வேண்டும் அன்பது எனது விருப்பம் மட்டும் அல்ல  ஒட்டுமொத்த இசை ரசிகர்களின் விருப்பம் .


நன்றியுடன்

இரா.மாடசாமி
  
Related Posts Plugin for WordPress, Blogger...

6 comments :

 1. \\இதை கருத்தில் கொண்டு மீண்டும் அவர்கள் இணைய வேண்டும் அன்பது எனது விருப்பம் மட்டும் அல்ல ஒட்டுமொத்த இசை ரசிகர்களின் விருப்பம் .
  \\ சூரியன் மேற்க்கே உதிக்கலாம், ஆனால் இது நடக்காது................

  ReplyDelete
 2. itha ennakum thonichi neenga solintinga naan sollala.

  ReplyDelete
 3. "சமீபத்தில் வெளியான தெய்வத்திருமகள் ,மதராசபட்டிணம் ஆகிய படங்களில் பாடல்கள் மட்டுமல்லாது பின்னணியிலும் அசத்தியிருப்பார் ஜி.வி."

  பரதேசி படத்தின் பெரிய மைனஸ் ஜீவி தான் என்பதையும் மறைக்க / மறுக்க முடியாது

  ReplyDelete
 4. 'அசத்தியிருப்பார் ஜி.வி."......... Romba kurumbu sir ungalukku

  ReplyDelete
 5. வைரமுத்துவும் ரகுமானும் இணைந்து படைத்த பாடல்கள் வைரமுத்து இளையராஜா கூட்டணியில் வந்தவற்றைவிட மிக தரமானவை என்பது எனது தாழ்மையான கருத்து.

  ReplyDelete
 6. இந்தப்படத்துக்கு பாடல்களை விட பின்னணி இசைதான் முக்கியம். பாடலுக்காக வைரமுத்துவை நியமித்ததைவிட இசைக்காக இளையராஜாவை அணுகியிருக்கலாம். சரி, ரகுமானை ஏன் மறந்துவிடீர்கள்?

  கதையில் நின்று வேணுமென்றே விலகி மதங்களை வம்பிழுக்கும் செயலுக்கு இளையராஜாவும் ரகுமானும் ஒத்துளைத்திருக்க மாட்டார்கள் என்பதே காரணமாக இருக்கலாம்.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger