Monday 19 November 2012

பின்பற்றவேண்டிய ஆரோக்கிய அட்டவணை !

- 7 comments

வணக்கம் நண்பர்களே ,
                                               இதுவரை நாம் ஆரோக்கியபழக்கங்கள், தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பார்த்தோம் . அவற்றை அட்டவணைப்படுத்தி உங்களுக்கு பயனுள்ளவாறு போட்டிருக்கிறேன் .படித்து பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள் .

[மேலும் படிக்க>>>]

Wednesday 7 November 2012

தவிர்க்கப்படவேண்டிய நோய்த்தன்மை உடைய 10 உணவுகள் -பகுதி -2

- 16 comments
 வணக்கம் நண்பர்களே !
                                                  தவிர்க்கப்படவேண்டிய நோய்த்தன்மை  உடைய 10 உணவுகளில் , சென்ற பதிவில் ஐந்தை பார்த்தோம் . இந்த பதிவில் மீதி ஐந்தை பார்ப்போம் .

[மேலும் படிக்க>>>]

Friday 2 November 2012

விருமாண்டி ஸ்டைலில் ஒரு சிறுகதை !

- 5 comments

                                

                                  

                                              அவசர அழைப்பு !!! 


சாப்பிட்டு கொண்டிருந்த தனசேகரை ஆடி போனா ஆவணி பாட்டு  அலைபேசியில் அழைத்தது.  அலைபேசி திரையில்  யாரென பார்த்தான் .   சந்திரன் அழைக்கிறார் என்று காண்பித்தது . வாயில் பரோட்டாவை தினித்தவாறே இயக்கினான் .



தனசேகர் : சொல்லு மச்சி !

சந்திரன் : ________________

தனசேகர் : அய்யயோ ! எப்போ ? 

சந்திரன் : ________________

தனசேகர்: பொருளு எடுத்துட்டு போனியா ?

சந்திரன் : _________________

தனசேகர்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள்  இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய்  மாட்டிகிட்டியேடா !

சந்திரன் :__________________

 தனசேகர்: எத்தனை பேரு ?

 சந்திரன்:___________________

தனசேகர்: சரி இப்போ  எங்க இருக்க நீ ?

சந்திரன் : __________________

தனசேகர் : காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டலா ? சரி இரு வரேன் !

பாதி உரையாடலை  படித்து  முடித்ததும் பலபேருக்கும்  இந்த கதை கீழே உள்ளவாறு இருந்திருக்கும் என யூகித்திருக்கலாம் !


தனசேகர் : சொல்லு மச்சி !

சந்திரன் : ஆனந்து ,ஆள  வச்சு அடிச்சுட்டாண்டா !

தனசேகர் : அய்யயோ ! எப்போ ?

சந்திரன் : இப்போதான்டா

தனசேகர்: பொருளு எடுத்துட்டு போனியா ?

சந்திரன் : இல்லடா

தனசேகர்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள்  இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய்  மாட்டிகிட்டியேடா !

சந்திரன் : எதிர்பார்க்கலை மச்சி !

 தனசேகர்: எத்தனை பேரு ?

 சந்திரன்: நாலஞ்சுபேரு வந்தாங்கடா
 
தனசேகர்: சரி இப்போ  எங்க இருக்க நீ ?

சந்திரன் : காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் !

தனசேகர் :காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டலா ?சரி இரு வரேன் !


ஆனா நான் கதையை மேல உள்ளது மாதிரி நினைச்சு  எழுதலைங்க ! கொஞ்சம்  கீழே படிங்க!


தனசேகர் : சொல்லு மச்சி !

சந்திரன் : வண்டி பஞ்சர் ஆயிடுச்சு!

தனசேகர் : அய்யயோ ! எப்போ ?

சந்திரன் : இப்போதான்டா

தனசேகர்: பொருளு எடுத்துட்டு போனியா ?

சந்திரன் : லோக்கல் சவாரி அதான் ஜாக்கி  லிவரு எதுவும் எடுக்காம கேர்லெஸ்ஸா இருந்துட்டேன் !

தனசேகர்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள்  இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய்  மாட்டிகிட்டியேடா !

சந்திரன் : சரி மச்சி ! சும்மா உதார் உடாம குய்க்கா  கெளம்பி வா  ! கஸ்டமர் கார்லயே வெய்ட் பண்றாங்க !

 தனசேகர்: எத்தனை பேரு ?

 சந்திரன்: நாலு பெருசு ! ரெண்டு சிறுசு ! 

தனசேகர்: சரி இப்போ  எங்க இருக்க நீ ?

சந்திரன் : காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் பக்கத்துல !

தனசேகர் : காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டலா ? சரி இரு வரேன் !

நண்பர்களே ! விருமாண்டி ஸ்டைல்னு  சொன்னவுடனே அருவா கதைன்னு நெனச்சீங்களா ! அதான் இல்ல !அந்த படத்துல ஒரே கதையை ரெண்டு பெரும் வேற வேற மாதிரி சொல்லுவாங்க ! இங்க கதை வேற! வசனம் ஒன்னு !
 இந்த படைப்பு  உங்களுக்கு பிடித்திருக்கிறதா ! எனது  யோசனையில் தோன்றிய, நான் முதன்  முதலாக எழுதிய  இந்த  படைப்பை  உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! பிடித்திருந்தால்  கருத்திடவும் .


நன்றியுடன் !
இரா. மாடசாமி 




[மேலும் படிக்க>>>]
 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger