Tuesday 3 September 2013

2ஆம் ஆண்டு பதிவர் சந்திப்பு ! என் பார்வையில்!

வணக்கம் நண்பர்களே !
                                           
 பதிவர் திருவிழாவுக்கு முதல் நாள் இரவு  9 மணியில் இருந்தே விழா  ஜுரம்  என்னை தொற்றி  கொண்டது! மெதுவாக என் மனைவியிடம் இந்த விஷயத்தை  சொல்லி மேலும் எனது உடைகளை துவைத்து  இஸ்திரி பண்ண  கேட்டுக்கொண்டேன் !



மனைவியோ ,என்ன? ..............! நான் துவைக்க வேண்டுமா ? என இம்சை அரசன் வடிவேலு போல என் மீது பாய வந்தார் ! மேலும் , பிளாக் எழுத ஆரம்பிச்சதுல இருந்து புதுசு புதுசா பழக்கம் பழகிட்டு வர்ரீங்க ! இது எல்லாம் நல்லா இல்ல ! எப்பயும்  நீங்கதான துவைப்பீங்க ! இன்னைக்கு என்ன புதுசா ? நீங்க எங்க வேணும்னாலும் போங்க! நாளைக்கு நிறைய  வேலை இருக்கு! என கூறி சென்று விட்டார் ! சுனா .பானா. ம்ம்ம்ம் விட்றா ! விட்றா ! என  எப்பொழுதும் போல நானே துவைக்கலாம் என துவைத்து விட்டு தூங்க சென்றேன் !

 
காலையில் எழுந்து குளித்து முடித்து ஒருகப் காபி கேட்கலாம் என நினைத்தேன், முந்தய நாள் நிகழ்ச்சி நினைவுக்கு வர, சுனா .பானா. கெத்த விட்றாத ம்ம்ம்ம் வண்டியை கெளப்புடா !என கிளம்பினேன் !

 
அரங்கின் உள்ளே என் வாகன நண்பன் HONDA SHINE மெதுவாக உள்ளே நுழைந்து என்னை பத்திரமாக இறக்கி விட்டான் ! அப்போது தான் ! அரங்கிற்குள் ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருந்தார்கள் ! நண்பர் மது மதியிடம் என்பெயரை சொன்னவுடன், அவர் எனது  தளத்தின் பெயரோடு என்னை நினைவு கூர்ந்தார் ! இதை கேட்டதும் , இந்த பையனுக்குளையும் எதோ ஒன்னு இருக்கு பாரேன்! என்று 7 G  ரெயின்போ காலனியில்  வரும் விஜயன் போல என்னை நானே மனதுக்குள் நினைத்து கொண்டேன் ! மகிழ்ச்சியாக இருந்தது ! பின்னர் எனது பதிவுகளுக்கு அடிக்கடி  கருத்துரை போடும் நண்பர் திடங்கொண்டு போராடு சீனு அவர்களிடம் அறிமுக படுத்திகொண்டேன் !அவர் என்னை ஏற இறங்க பார்த்து ! அவனா நீயி ! என்பதுபோல  கை கொடுத்தார் ! பின் நண்பர் வீடு திரும்பல் மோகன்குமரிடம் அறிமுக படுத்திகொண்டு விழாவுக்கு சிறு தொகையை நன்கொடையாக வழங்க விருப்பம் தெரிவித்தேன் ! அவரும் திரு அரசனிடம்  கூட்டி சென்று அறிமுக படுத்தினார் ! அவைரிடம் தொகையை செலுத்திவிட்டு உள்ளே சென்றேன் ! எதிரே நண்பர் திண்டுக்கல் தனபாலன்  வந்து கொண்டிருந்தார் ! அவரிடமும், blogger நண்பன் திரு பாசித்திடமும்  அறிமுகம் செய்துகொண்டு   !  எனக்கான ஒரு இடத்தை தேர்வு செய்து கொண்டு உட்கார்ந்து கொண்டேன் !




நிகழ்ச்சி தொடங்கியது! திரு சுரேகா அவர்கள் நிகழ்ச்சியை நன்றாக தொகுத்து வழங்கினார் ! எனக்கெல்லாம்  மேடை ஏறினாலே ஒரு நடுக்கம் வந்து விடுகிறது! எப்படித்தான் பேசுகிறாரோ ! இதனிடையில் சென்ற வருடம் பதிவர் சந்திப்பில் அறிமுகமான வேல்முருகன் சாரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது .

பதிவர் சுய அறிமுகம் முடிந்ததும் திரு பாமரன் அவர்களின் பேச்சு , உணவு இடைவெளிக்கு பின் காட்டப்பட்ட மதுமதி அவர்களின் குறும்படம் , அதை தொடர்ந்து பேசிய கண்மணி குணசேகரன் அவர்களின் உரை என அனைத்தும் நிகழ்ச்சியை தொய்வடையாமல் பார்த்துகொண்டது!


சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டில் பதிவர் சந்திப்பு நிறைய முன்னேற்றம் கண்டிருந்தது ! தனித்திறன் காட்டுதல், 5 புத்தகங்கள் வெளியீடு ,  சிறப்பு  அழைப்பாளர்கள் பேச்சு , என விழா  களைகட்டியது .ஒரே ஒரு குறை! அது மண்டபத்தின் உள்ளே எழும்பிய வெட்கை மட்டுமே ! அரைமணிநேரத்துக்கு ஒருமுறை நம்மை காற்று வாங்க வெளியில் போக சொல்லியது !


இத்தகைய சிறப்பான சந்திப்பை ஏற்படுத்தி தந்த விழா குழுவினருக்கு மிக்க நன்றி ! தொடர்ந்து இது போன்ற சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என அன்போடு   கேட்டுக் கொள்கிறேன் !







நன்றியுடன்
இரா. மாடசாமி ,





Related Posts Plugin for WordPress, Blogger...

22 comments :

  1. சார் ரொம்ப சாரி சார்.. கிட்டத்தட்ட இருபது நிமிஷம் கழித்து தான் நீங்க யாருன்னு என்னால கண்டுபிடிக்க முடிஞ்சது, உடனே உங்ககிட்ட வந்து பேசணும்னு தேடினேன் உங்கள கண்டுபிடிக்க முடியல.. மாலை விழா முடியும் வரையிலும் அதையே நினைச்சிட்டு இருந்தேன்...

    நான் அப்படி முழிச்சத நீங்க கவனித்து இருக்கா மாட்டீங்கன்னு நினைச்சேன் இதான் சார் என் டக்கு :-)

    ReplyDelete
    Replies
    1. sorry எல்லாம் சொல்லி என்னை கஷ்டப்படுத்தாதீர்கள் திரு சீனு ! விழாவில் நீங்கள் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்ததை நான் கவனித்தேன் ! இருந்தாலும் என்னை ஞாபகம் வைத்து கருத்துரை இட்டதற்கு மிக்க நன்றி !

      Delete
  2. சிறப்பான சந்திப்புப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி ராஜேஸ்வரி அவர்களே !

      Delete
  3. சந்தோஷம்... சந்திப்புக்கு வராத குறையை தீர்த்து வைத்தது உங்கள் பதிவு...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் மிக்க நன்றி ! தொடர்ந்து தளத்துக்கு வருகை தரவும் !

      Delete
  4. பல புதியவர்களை சந்தித்த மகிழ்ச்சி... (உங்கள் எழுத்திலும்) வருடா வருடம் கண்டிப்பாக தொடரும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே ! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

      Delete
  5. தேடித் தேடி ஆண் பதிவர்களுடன் பேசினீர்கள்.. பெண் பதிவர்கள் யாரிடமும் பேசவில்லை போல... விழாவிற்கு வருகை தந்தமைக்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. பெண் பதிவர்களிடம் சென்று அறிமுகபடுத்தி கொள்ளாதது எனது தவறு தான் ! அடுத்தமுறை கண்டிப்பாக சந்திக்கிறேன் ! கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி !

      Delete
  6. ஏன் சார் பெண்களுக்கே உண்டான தயக்கத்தோடு நாங்க இருந்தோம். நீங்க வந்து இந்தா பாருங்க அக்கா! நாந்தான் மாடசாமின்னு ஒரு வார்த்தைல அறிமுகப்படுத்திக்கிட்டு இருந்தா குறைஞ்சா போய் இருப்பீங்க?!

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் ! அதே கூச்சமும் தயக்கமும்தான் எனக்கும் ! இருந்தாலும் அடுத்தமுறை கண்டிப்பாக உங்களை சந்திக்கிறேன் ! தளத்திற்கு வந்து கருத்துரை இட்டதிற்கு மிக்க நன்றி சகோதரி !

      Delete
  7. சுருக்கமாகவும் அருமையாகவும்
    நிகழ்வினை பதிவு செய்து தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களை சந்திததில் மிக்க மகிழ்ச்சி அய்யா ! கருத்துக்கு நன்றி !

      Delete
  8. நாம் சந்தித்தோமா?
    இல்லையெனில் அடுத்த சந்திப்பில்!

    ReplyDelete
    Replies
    1. நாம் இருவரும் சந்தித்தோம் இருவருமே அறிமுகபடுத்தி கொண்டோம் அய்யா ! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ! கருத்துரைக்கு மிக்க நன்றி !

      Delete
  9. சுருக்கமாக அழகாக தங்கள் கண் முன் நடந்ததை சொல்லியிருக்கிறீர்கள்.... நான்தான் உங்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தேன் என்று நினைக்கிறேன்.... நல்வரவுக்கு நன்றி....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ! மிக்க நன்றி ! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி !

      Delete
  10. தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டதை மனநிறைவோடு பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ! தளத்திற்கு தொடர்ந்து வருகை தரவும் !

      Delete
  11. பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ! தளத்திற்கு தொடர்ந்து வருகை தரவும் !

      Delete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger