Tuesday 10 September 2013

பதிவர் சந்திப்பில் சிறப்பு அழைப்பாளர்கள் நடிகர் கமல் மற்றும் ரஜினி !!!!

வணக்கம் நண்பர்களே !
                               பதிவர் சந்திப்பு தொடர்பாக நிறைய கருத்துகளும், சர்ச்சைகளும் இன்னும் பதிவுலகில் ஓய்ந்த பாடில்லை ! இதை  பற்றிய சிறு அபிப்ராயம் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன் !



பதிவர் சந்திப்பில் சிலருக்கு குறைகள் இருப்பதாக நினைக்கலாம் ! குறைகள் இருந்தாலும்  அதை இப்படி பொதுவாக பதிவில் போட்டு சொல்லி இருக்க வேண்டாம் ! விழா அமைப்பினரிடம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அவர்களிடம் தனியாக நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாக  சொல்லி அடுத்த சந்திப்பில் இந்த தவறுகள் நடக்காதவாறு அறிவுறுத்தி இருக்கலாம்.


இப்படி பொதுவாக அனைவர் தெரியும் படி பதிவிடுவதால் அடுத்த வருடம் புதிதாக வர நினைப்பவர்களுக்கு அது எதிர் மறை எண்ணங்களை உருவாக்கி அவர்களை  வர முடியாத நிலைமையை ஏற்படுத்தும் ! எனக்கு தெரிந்த சிறிய உதாரணத்தை இங்கு சொல்கிறேன் ! ஒரு சில உணவகங்களில் இப்படி எழுதி வைத்திருப்பார்கள் !அதை இங்கே சொல்கிறேன் !


                       குறைகளை எங்களிடம் சொல்லுங்கள் !
                        நிறைகளை வெளியில் சொல்லுங்கள் !

அதுபோல நிறைகளை நம் பதிவில் போட்டு வர இயலாதவர்களை அடுத்த முறை வர தூண்டும்படி செய்வதே நமக்கு அழகு! நாம் குறை சொல்வதானால்
இதற்க்கு பின்னால் வேலை செய்தவர்களுக்கும் மனதில் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும் ! இவ்வளவு உழைத்தும் நமக்கு இப்படி ஒரு பெயர் கிடைத்து விட்டதே  என்று ! இருந்தாலும் கருத்து கூறியது சக பதிவர்கள்தான் , அதனால் அவர்கள்  கூறிய சிலவற்றை விழா குழுவினர் , இதை எல்லாம் மனத்தில்  கொண்டு , முடிந்தவரை குறைகள் களைந்து இன்னும் அதிக உத்வேகத்துடன்  அடுத்த பதிவர் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்வார்கள் என நம்பிக்கை கொள்கிறேன் ! மேலே கூறிய அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள்தான் ! மாற்று கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன !


சரி இங்க எங்க ரஜினி கமல் வர்றாங்க அப்படின்னு நினைக்கிறீங்களா ! கொஞ்சம் கீழ படிங்க !

 நம்ம இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசனும் , நடிகர் ரஜினி காந்தும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசி இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை பதிவு இது !

குறிப்பு ! இது கற்பனை மட்டுமே !பிடிக்காதவர்கள் இதற்க்கு மேல் படிப்பதை தவிர்க்கலாம் ! மேலும் பதிவு , யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல ! இதனால் ஏற்ப்படும் மன உளைச்சலுக்கு விஜய் டிவி ச்ச ! வானவில் தளம் பொறுப்பு ஏற்காது !

ரஜினியின் உரை :
                                     அன்புடைய பெரியோர்களே ! தாய்மார்களே ! ஆன்றோர்களே ! சான்றோர்களே மற்றும் என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தமிழ் ரசிக பெருமக்களே !( அரங்கு நிறைந்த கரவொலி) உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள் ! இந்த பதிவர் திருவிழா அழைப்பிதல எடுத்துட்டு வந்து என் கிட்ட கொடுத்து நீங்க அவசியம் வருனும்  அப்டியன்னு சொன்னங்க ! அப்போ நான் சொன்னேன் , அவங்ககிட்ட , இல்லிங்க எனக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கப்புறம் நான் பொது நிகழ்சிகள்ள அவ்வளவா கலந்துகுறது கொறச்சி கிட்டேன்னு ! அப்போ இவங்க சொன்னங்க , இல்ல சார் நீங்க வரலைனா கூட பரவ இல்ல  உங்க வாழ்த்து செய்தி மட்டும் அனுப்பி வைங்க போதும்  அப்புறம் உங்க நண்பர் கமல் சார் கிட்டயும் அழைப்பிதழ்  கொடுத்துருக்கோம் அவரும் வர்றேன்னுட்டு  ப்ராமிஸ்  பண்ணிருக்காரு  அப்டியன்னு சொன்னங்க ! சரின்னுட்டு நானும் அனுப்பி வைக்கிறதா சொன்னேன் ! அப்புறம் இவங்க போனதுகப்புறம்  நான் உட்கார்ந்து யோசிச்சேன் ! எவ்ளோ வெளி நிகழ்ச்சிக்கு போறோம்! நாம  ஏன் இதுக்கு போக கூடாதுன்னு ! அப்போ முடிவு பண்ணதுதான் ! நாம போறோம் , கலந்துக்குறோம் , (இதை சொன்னவுடன் அரங்கு நிறைந்த கரவொலி  )ஹா!  ஹா ! ஆகவே நண்பர்களே ! பதிவு எழுதுரதுங்க்றது சாதாரண விஷயம் இல்ல! அது எல்லாருக்கும் வராது ! இங்கே உட்கார்ந்திருக்கிற எனது அருமை நண்பர் கமல்  நல்ல எழுத்தாளர் , இலக்கியவாதி ! அவர் மாதிரி நண்பர் கிடைக்குரதுக்கு கொடுத்து வச்சிருக்கணும் !  அப்புறம் இன்னைக்கு இருக்குற இந்த இண்டநெட் வோர்ல்ட்ல நிறைய நல்ல விஷயங்களும் நடக்குது ! கேட்ட விஷயங்களும் நடக்குது ! அதனால மக்களுக்கு நல்லத மட்டும்  எழுதுங்க  ! நீங்களும்  நல்லது  மட்டும்  படிங்க ! அப்ப்டின்னுட்டு  சொல்லி ! விடை பெறுகிறேன் நன்றி வணக்கம் !


கமல்ஹாசன் உரை ::

அனைவர்க்கும் இனிய வணக்கம் ! இதற்கு முன் பேசிவிட்டு சென்ற நண்பர் ரஜினி சொன்னார்  , நான் ஒரு நல்ல இலக்கிய வாதி என்று ! அப்படீல்லாம் கெடயாது ! நான் ஒரு சாதாரணமான எழுத்தாளன்தான் ! சொல்ல போனா ! நான்  எழுதுறது இலக்கியமானு கூட எனக்கு தெரியாது ! இருந்தாலும் இதை சொல்ல நல்ல மனசு வேணும் அது நண்பர் ரஜினிகிட்ட இருக்கு !இந்த விழாவை சேர்ந்த குழுவினர் என்னை அழைத்தபோது ! நான் மறுக்காமல் ஒப்புக்கொண்டேன் ! ஏன் என்றால் , இது என் குடும்ப விழா ! சினிமா எனக்கு எப்படியோ அதைப்போலவே இலக்கியமும் , சினிமாவை விட எனக்கு புத்தகங்கள் எனக்கு அதிகம் கற்று தந்திருக்கிறது ! நான் எழுத ஆரம்பித்த கால கட்டத்தில்  இது போன்ற வசதிகள் இல்லை ! அதை இந்த தலைமுறையினர் நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் ! பயன்படுத்துகிறார்கள் என்றே நினைக்கிறேன் ! நான் முன்பே சொன்னது போல அறிவியலின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது ! அதை தடுத்து நிறுத்துவதற்கு பதில் நாமும் அதனுடனே பயணிக்கத்தான் வேண்டும் !   இதை பயன்படுத்தி நாம் நமது மொழியையும் , தேசத்தையும் வளர்ப்போம் என்று கூறி விடை பெறுகின்றேன் நன்றி வணக்கம் !





நன்றியுடன் !

இரா.மாடசாமி
                                                 
Related Posts Plugin for WordPress, Blogger...

3 comments :

  1. // இதற்கு பின்னால் வேலை செய்தவர்களுக்கும் மனதில் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும்...! //

    சிறப்பாக நடத்தியதால் கண்டிப்பாக இருக்காது...

    ஹா... ஹா... கற்பனையை ரசித்தேன்...

    ReplyDelete
  2. நல்ல கற்பனை.... இரண்டு பேரின் பேச்சையும் ரசித்தேன்...

    ReplyDelete
  3. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோததரே! நல்ல கற்பனை ரசிக்கும் படியாக இருந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger