வணக்கம் நண்பர்களே !
இந்த பதிவில் எனது கிறுக்கல் ஒன்றினை பகிர்கிறேன் ! என்ன செய்வது ! காலத்தின் கட்டாயம் இதை எல்லாம் படித்து தொலைக்கவேண்டுமே என நீங்கள் மனதுக்குள் முனுமுனுப்பது எனக்கு புரிகிறது ! வேறு வழியே இல்லை நீங்கள் இதை படித்தே ஆகவேண்டும் ! இந்த கிறுக்கலை தமிழில் ஏதோ சொல்வார்களே ! ஆங் ! சிலேடை ! அதான் ! அதுமாதிரி முயற்சி பண்ணியிருக்கிறேன் ! பிடித்திருந்தால் கருத்தளிக்கவும் ! இன்னொரு வைரமுத்து வருவதை தடுக்காதீர்கள் ! சூ ! இந்த காக்கா வேற !
கவனிப்பு !
கோவிலில் கடவுளை
கவனிக்க மறந்த நான்
உன்னையே கவனித்தேன் !என்பதை
நீ கவனித்தாய் ! அதை நானும் கவனித்தேன் !
இருந்தும் நான் கவனித்ததை கவனித்துவிட்டு
நீ கவனிக்காதது போல காட்டிகொண்டதையும்,
யாரேனும் உன்னை கவனிக்கிறார்களா ? என
நன்கு கவனித்துவிட்டு,மீண்டும்
கவனமாக நீ என்னை கவனிப்பதையும்
நான் கவனித்தேன் !
ஒரு பெண்ணின் கவனத்தை பெறுவது என்பது
எவ்வளவு பெரிய விடயம் என
இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும் !
நம் இருவர் கவனிப்பையும் தற்செயலாக
கோவிலுக்குள் வந்த என் தந்தை
கவனித்துவிட ! அப்புறம் என்ன !!!
வீட்டில் எனக்கு செம கவனிப்புதான் !!!!
*******************************************************************************
அன்பே ! உன்னை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை !
என்று சொல்லமாட்டேன் ! ஏன் என்றால் !
அதுவும் வார்த்தைகளாவதால் !
*********************************************************************************
சாலையில் இருவரும்
எதிரெதிர் திசையில் கடந்து செல்கிறோம் !
நான் ! திரும்ப திரும்ப திரும்பி பார்க்கிறேன் !
நீ என்னை திரும்பி பார்ப்பாய் என்று !
ஆனாலும் நீ திரும்பாமல் போகிறாய் !
ஒருவேளை நீ திரும்பி பார்ப்பதை
நான் திரும்பி பார்த்துவிடுவேன் என நினைத்தாயோ !
திரும்ப எப்போது இதுபோன்று சந்தர்ப்பம் வரும்
என்று திரும்பியபடியே வீடு வந்தேன் !
**********************************************************************************
உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டாய் !
எனக்கு உன்னை பிடிக்கும் என்றேன் !
பிறகு ? என தொடங்கினாய் !
உன் புன்னகை பிடிக்கும் என்றேன்!
மெல்லிய புன்னகையோடு ! அப்புறம் என அழகாய் கேட்டாய் !
உன்னை கரம் பிடிக்க பிடிக்கும் என்றேன் !
அடுத்து என தொடர்ந்தாய் !
என் வேர்வையில் உன்னை நனைக்க பிடிக்கும் !
நாணத்துடன், கண்ணை மூடிக்கொண்டு ! அப்புறம் என்றாய் !
உன் அம்மாவை பாட்டியாக பார்க்க பிடிக்கும் என்றேன் !
சற்று நிருத்திவிட்டு ! உனக்கு என்ன பிடிக்கும் என நான் கேட்க
நிறுத்தி சொன்னாய்!
எனக்கு உன் தீராக்காதல் பிடிக்கும் என்று !
நன்றியுடன் !
இரா.மாடசாமி