Showing posts with label திரைப்பட பாடல்கள். Show all posts
Showing posts with label திரைப்பட பாடல்கள். Show all posts

Wednesday, 12 September 2012

புரியாத பாடல்வரிகளும் ! அதன் அர்த்தங்களும் !

- 12 comments
வணக்கம் நண்பர்களே !
                                                 இன்றைய காலங்களில்   நல்ல திரைப்பட பாடல்கள்  வந்தாலும், வார்த்தைகள்  புரிவதில்லை.அதற்காகவே மிக அரும்பாடுபட்டு அந்த பாடல் வரிகளின் அர்த்தம் கண்டுபிடிக்கும் முனைப்பில் இறங்கி சிலவற்றை மட்டும் கண்டுபிடித்துள்ளேன். இது யூகத்தின் அடிப்படையில் கண்டுபிடிக்க பட்டது . பாடலாசிரியர்  என்ன நினைத்து எழுதினாரோ எனக்கு தெரியாது !


முதலில் இப்போது திரை அரங்குகளில் ஓடிகொண்டிருக்கும் "நான்" திரைப்படத்தில் வரும் " மாக்க ஏல, மாக்க ஏல, காயகவுவா " அதாவது திருநெல்வேலியை மற்றும் தூத்துக்குடி பகுதியை சார்ந்த மக்கள் தமக்கு  நெருக்கமானவர்களை "ஏலே மக்கா" என அன்போடு அழைப்பர்கள். அதனை அடிப்படையாக கொண்டு  பாடலாசிரியரும் இசை அமைப்பாளரும் அதை மாற்றி போட்டு "மாக்க ஏல" என  வரிகளை அமைத்துள்ளனர். மேலும்  "கையை கழுவ வா " என்பதன் சுருக்கமே "காயா கவு வா" என்பதாகும் . இப்போது படியுங்கள்  ஏலே மக்கா,ஏலே மக்கா,சாப்பிட்டு விட்டு கையை கழுவ வா என்பதே இதன் பொருளாகும் .

அடுத்து , காக்க காக்க படத்தில் வரும் "ஓமகா சீயா மாகியாஹா ,ஹீமோ மகாசகியா " இந்த பாடல் படமாக்க பட்டிருக்கும் இடம் கடற் பகுதி  அதை உணர்த்தவே  இந்த வரிகள் (மகா- பெரிய ,"SEA"yaa   - கடலே )  (மாகியாகா- யாதுமான) (ஹீமோ - மானிடன் ) (மகா- பெரிய )( சகியா -தோழியா)
ஓமகா சீயா -ஒ  பெருங்கடலை போன்றவளே !
மாகியாஹா-எல்லாமாகிய !
ஹீமோ மகாசகியா -  மானுடத்தில் பெரிய தோழியே

அடுத்து , காதலில்  விழுந்தேன் திரைப்படத்தில் வரும் அட்ரா  அட்ரா நாக்க முக்க என்ற  பாடல். குத்து சண்டையில் நாக் அவுட்   என்று அழைக்கப்படும் ஒரு முறையாகும் . அதாவது மூக்கில் அடித்து  நாக் அவுட் செய் என்பதே இதன் விளக்கம் விரிவாக சொல்ல போனால் அடிடா! அடிடா! மூக்கில் அடித்து நாக் அவுட் செய்  என்பதாகும்

அடுத்து ஒரு பழைய பாடல் ! சூரியன் படத்தில் வரும் லாலாக்கு டோல் டப்பிமா ! லா - விதி , லாக்கு-பூட்டு , டோலு - சுங்க சாவடி , டப்பி,டப்பு- காசு
அதாவது  பூட்டியிருக்கும் சுங்க சாவடியில்  விதிப்படி காசு கட்டிவிட்டு செல்லுங்கள் என்று பாடலாசிரியர் கூறுகிறார்.

நண்பர்களே ! இந்த பாடல்களின்  ரசிகர்கள் கோபம் கொள்ள கூடாது!  புரியாத வரிகளை அர்த்தம் கண்டுபிடிக்கும் ஒரு சிறு முயற்சியே . இது ஒரு வானவில்லின்  இலக்கிய ஆராய்ச்சியின்  படைப்பு ! இந்த படைப்பிற்கு விழும் ஓட்டுக்களின் எண்ணிக்கையை பொறுத்து அடுத்த ஆராய்ச்சி தொடங்கும் !


நன்றியுடன் !
இரா.மாடசாமி




[மேலும் படிக்க>>>]
 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger