வணக்கம் நண்பர்களே !
இன்றைய உலகில் நாம் அனைவரும் எந்திரம் போல சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருக்கிறோம் . ஆனால் ஆரோக்யமாக இயங்கி கொண்டிருக்கிறோமா என்றால் மௌனம் தான் பதில். அதற்காகவே இந்த பதிவு. நண்பர் ஒருவர் துண்டு பிரசுரம் ஒன்றை என்னிடம் காண்பித்தார் . அதில் உள்ள தகவல்களை அப்படியே உங்களுக்கு அளிக்கிறேன் ! இதில் வரும் ஆலோசனைகள் எதுவும் எனது சொந்த கருத்துக்கள் கிடையாது. பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1. தியானமும் உடற்பயிற்சியும்
உங்கள் உடலும் , மனமும் ஆன்மாவும் சமநிலையில் இருப்பதற்கு இந்த பயிற்சிகள் உதவும்.
2. மிதமாக உண்ணுங்கள்
நோய்களுக்கான பல காரணிகளில் முக்கியமானது, நாம் உண்ணும் உணவின் அளவும் தரமும்தான் . இப்போது நீங்கள் உண்ணும் உணவின் அளவில் பாதி அளவு மட்டும் சாப்பிட பழகிகொள்ளுங்கள் .பசிக்கும்போது மட்டுமே உண்ணுங்கள் . ஒரே மாதத்தில் உடல் நலத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.
3. சைவ உணவுக்கு மாறவும் .
மாமிச உணவை ஜீரணிப்பதற்கு 72 மணித்துளிகள் தேவைப்படுகின்றன . அதுவும் மிக கடினமாக . பெரும்பாலான மாமிச உணவுகள் நச்சுக்களை கொண்டுள்ளன.சைவ உணவை உண்பதால் ஆரோக்கியமாகவும் நீண்ட நாளும் வாழலாம் .
4. அருந்தும் நீரின் அளவை சீராக்கவும்
நமது உடலில் 70% தண்ணீர் உள்ளது . உடலின் தண்ணீர் அளவை சமன் செய்ய நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப நீர் அருந்துங்கள் . இளநீர் மற்றும் பழசாறுகளையும் அதிகம் அருந்துங்கள் .
5. உறங்குவதற்கு 3 மணி நேரம் முன் உணவருந்துங்கள்
நாம் இரவில் தூங்கும்போது , நம் உடல் லட்சக்கணக்கான உயிரணுக்களை உருவாக்குவதற்கும் ,மீண்டும் புத்துயிர் தருவதற்கும் வேண்டிய வேலையை செய்கிறது. இந்த புதுபித்தலுக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. நாம் உணவு உண்டவுடன் தூங்க ஆரம்பித்தால் நம் பெரும்பான்மை சக்தியானது உணவு ஜீரனத்திற்காக செலவிடப்படுகிறது. அதனால் உயிரணு புதுபித்தல் தடை பெறுகிறது.
6. உங்கள் சொற்களைக் கவனிக்கவும்
நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் உறவுகளை வளர்க்கும் அல்லது துண்டிக்கும். ஆகவே பேசும்போது நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை கவனித்து பேசவும் .நம் மனம் நிகழ்காலத்தை வழிநடத்தி செல்கிறது. நம் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. அதனால் நல்ல கருத்துகளை நலம் பயக்கும் சிந்தனைகளை மனதில் வளர்த்து ஆரோக்யமாக வாழுங்கள் .
7.அன்பை வெளிபடுத்தவும்
நாம் அதிகமாக தெய்வீக அன்பை பிறருக்கு கொடுக்கும்போது நாம் பன்மடங்கு அதிகமாக தெய்வீக அன்பை பெறுகிறோம் . " நான் உன்னை நேசிக்கிறேன் " என்று உங்களுக்கே நீங்கள் சொல்லுங்கள் . " நான் உன்னை நேசிக்கிறேன்" என்று பிறரிடமும் சொல்லுங்கள் .
8. நன்றியுடன் வாழவும்
இந்த பிரபஞ்சத்தில் நன்றி உடையவர்களாக இருங்கள் . நம்முடைய வாழ்வுக்காக பல நல்ல காரியங்களைச் செய்த நம் பெற்றோருக்கும் , நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம் . அதனால் நமக்கு அனைத்து ஆசிகளும் வந்தடையும் .
9.உங்கள் மன அழுத்தத்தை சீர் நிலையில் வைக்கவும்
மன அழுத்தத்தை எப்படி கையாழ்வது என்று கற்று கொள்ளவேண்டும் .மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கு பதிலாக அதை நிர்வகிக்க தெரிந்து கொள்ளுங்கள் . உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை எதிர்க்கிறீர்களோ அது உங்களுடனே தங்கிவிடும் . நீங்கள் எதை உணர்ந்து அனுபவிக்கிறீர்களோ அது அகன்று விடும் .
10. பூமித்தாயை பாதுகாக்கவும்
நாம் பூமித்தாய்க்கு கேடு செய்தால் பன்மடங்கு நாம் கெடுதலுக்கு உள்ளாவோம் . நாம் எதை விதைக்கிறோமோ நாம் அதையே அறுவடை செய்வோம் . நாம் நம்மை காப்பாற்றி கொள்ள பூமித்தாயை பாதுகாக்க வேண்டும்
என்ன நண்பர்களே ! மேலே சொன்ன தகவல் அனைத்தும் உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும் !
நன்றி :தகவல் உதவி - உலக ஆரோக்கிய அமைப்பு (world wellness organization) email:mail@wwo.me
நன்றியுடன்
இரா.மாடசாமி
இன்றைய உலகில் நாம் அனைவரும் எந்திரம் போல சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருக்கிறோம் . ஆனால் ஆரோக்யமாக இயங்கி கொண்டிருக்கிறோமா என்றால் மௌனம் தான் பதில். அதற்காகவே இந்த பதிவு. நண்பர் ஒருவர் துண்டு பிரசுரம் ஒன்றை என்னிடம் காண்பித்தார் . அதில் உள்ள தகவல்களை அப்படியே உங்களுக்கு அளிக்கிறேன் ! இதில் வரும் ஆலோசனைகள் எதுவும் எனது சொந்த கருத்துக்கள் கிடையாது. பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மருத்துவம் ,
அன்றாட வாழ்க்கைக்கு தேவையான 10 ஆரோக்கிய கட்டளைகள்!!!
1. தியானமும் உடற்பயிற்சியும்
உங்கள் உடலும் , மனமும் ஆன்மாவும் சமநிலையில் இருப்பதற்கு இந்த பயிற்சிகள் உதவும்.
2. மிதமாக உண்ணுங்கள்
நோய்களுக்கான பல காரணிகளில் முக்கியமானது, நாம் உண்ணும் உணவின் அளவும் தரமும்தான் . இப்போது நீங்கள் உண்ணும் உணவின் அளவில் பாதி அளவு மட்டும் சாப்பிட பழகிகொள்ளுங்கள் .பசிக்கும்போது மட்டுமே உண்ணுங்கள் . ஒரே மாதத்தில் உடல் நலத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.
3. சைவ உணவுக்கு மாறவும் .
மாமிச உணவை ஜீரணிப்பதற்கு 72 மணித்துளிகள் தேவைப்படுகின்றன . அதுவும் மிக கடினமாக . பெரும்பாலான மாமிச உணவுகள் நச்சுக்களை கொண்டுள்ளன.சைவ உணவை உண்பதால் ஆரோக்கியமாகவும் நீண்ட நாளும் வாழலாம் .
4. அருந்தும் நீரின் அளவை சீராக்கவும்
நமது உடலில் 70% தண்ணீர் உள்ளது . உடலின் தண்ணீர் அளவை சமன் செய்ய நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப நீர் அருந்துங்கள் . இளநீர் மற்றும் பழசாறுகளையும் அதிகம் அருந்துங்கள் .
5. உறங்குவதற்கு 3 மணி நேரம் முன் உணவருந்துங்கள்
நாம் இரவில் தூங்கும்போது , நம் உடல் லட்சக்கணக்கான உயிரணுக்களை உருவாக்குவதற்கும் ,மீண்டும் புத்துயிர் தருவதற்கும் வேண்டிய வேலையை செய்கிறது. இந்த புதுபித்தலுக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. நாம் உணவு உண்டவுடன் தூங்க ஆரம்பித்தால் நம் பெரும்பான்மை சக்தியானது உணவு ஜீரனத்திற்காக செலவிடப்படுகிறது. அதனால் உயிரணு புதுபித்தல் தடை பெறுகிறது.
6. உங்கள் சொற்களைக் கவனிக்கவும்
நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் உறவுகளை வளர்க்கும் அல்லது துண்டிக்கும். ஆகவே பேசும்போது நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை கவனித்து பேசவும் .நம் மனம் நிகழ்காலத்தை வழிநடத்தி செல்கிறது. நம் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. அதனால் நல்ல கருத்துகளை நலம் பயக்கும் சிந்தனைகளை மனதில் வளர்த்து ஆரோக்யமாக வாழுங்கள் .
7.அன்பை வெளிபடுத்தவும்
நாம் அதிகமாக தெய்வீக அன்பை பிறருக்கு கொடுக்கும்போது நாம் பன்மடங்கு அதிகமாக தெய்வீக அன்பை பெறுகிறோம் . " நான் உன்னை நேசிக்கிறேன் " என்று உங்களுக்கே நீங்கள் சொல்லுங்கள் . " நான் உன்னை நேசிக்கிறேன்" என்று பிறரிடமும் சொல்லுங்கள் .
8. நன்றியுடன் வாழவும்
இந்த பிரபஞ்சத்தில் நன்றி உடையவர்களாக இருங்கள் . நம்முடைய வாழ்வுக்காக பல நல்ல காரியங்களைச் செய்த நம் பெற்றோருக்கும் , நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம் . அதனால் நமக்கு அனைத்து ஆசிகளும் வந்தடையும் .
9.உங்கள் மன அழுத்தத்தை சீர் நிலையில் வைக்கவும்
மன அழுத்தத்தை எப்படி கையாழ்வது என்று கற்று கொள்ளவேண்டும் .மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கு பதிலாக அதை நிர்வகிக்க தெரிந்து கொள்ளுங்கள் . உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை எதிர்க்கிறீர்களோ அது உங்களுடனே தங்கிவிடும் . நீங்கள் எதை உணர்ந்து அனுபவிக்கிறீர்களோ அது அகன்று விடும் .
10. பூமித்தாயை பாதுகாக்கவும்

என்ன நண்பர்களே ! மேலே சொன்ன தகவல் அனைத்தும் உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும் !
நன்றி :தகவல் உதவி - உலக ஆரோக்கிய அமைப்பு (world wellness organization) email:mail@wwo.me
நன்றியுடன்
இரா.மாடசாமி
Tweet | |||||

பத்தும் முத்துக்கள்...
ReplyDeleteநன்றி நண்பரே ! உங்கள் கருத்துரையும் எனக்கு முத்துக்கள் போன்றதே !
Deleteபயனுள்ள பதிவு
ReplyDeleteபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி பல.
ReplyDeleteநன்றி அய்யா! தொடர்ந்து தளத்திற்கு வருகை தரவும்
Deleteகருத்துக்கு மிக்க நன்றி நண்பரே ! தொடர்ந்து தளத்திற்கு வருகை தரவும் .
ReplyDeletetha.ma 3 இதுக்கு அர்த்தம் என்னன்னு எனக்கு தெரியவில்லை தயவு செய்து சொல்லிவிடவும் !