Tuesday, 30 October 2012

தவிர்க்கப்பட வேண்டிய நோய்த்தன்மை உடைய 10 உணவுகள் !!!

வணக்கம்  நண்பர்களே ,
                                                 ஆரோக்கிய வாழ்க்கை என்பது நீங்கள் தேர்வு செய்வது .நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவை சார்ந்திருக்கிறது . நம் சொந்த ஆரோக்கியமானது ஆழ்ந்த தாக்கம் உடையது . உணவு ,உயிர்ச்சத்து இவற்றின் அடிப்படடைக் கொள்கைகளை  புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கிய வாழ்வின் உச்ச சக்தியை பெறமுடியும் . ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நம் உணவு பழக்கத்திலுள்ள நோய்த்தன்மை உள்ள உணவுகளை சிறிது கவனத்திற்கு கொண்டுவருவோம் .  முதல் நோய்தன்மையுடைய உணவு : பால் 


                                                         பூமியில் பால் அருந்துவதிலிருந்து பிரிக்க முடியாத ஒரு உயிர் ஜீவி இருக்கிறது என்றால் அது மனிதன்தான் .எந்த ஒரு உயிரினமும் தனது இனத்து பாலை தவிர மற்ற இனத்தின் பாலை குடிப்பதில்லை. பசுவின் பாலின் இரசாயன அமைப்பு மனித இன பாலின உள்ளமைப்பிலிருந்து வேறுபட்டது . அது இலகுவாக ஜீரணம் ஆகாத ஒன்று. நமது உடலின் மீது மிகப்பெரிய சுமையை ஏற்றுகிற உணவு. ஆராய்ச்சி முடிவுகளின்படி , பால்  பலவித நோய்களுக்கு உதாரணமாக தைராய்டு பிரச்சினைகள் ,இதயநோய்கள், புற்றுநோய்,மூட்டுவலி, கை, கால் நடுக்கம் ,ஒற்றை தலைவலி , தலைவலி பிரச்சினை ,எதிர்வினைகள் , காது சம்பந்தமான தொற்றுநோய்கள் , காச நோய்கள் மேலும் உடல் சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு காரணமாக செயல்படுகிறது .பசும்பாலில் உள்ள கால்சியம் மிகவும் தரம் குறைந்தது. மனித உடல் ஏற்றுகொள்ள முடியாத நிலையில் உள்ளது . நாம் இரத்த சோகையினால் பாதிக்கப்படக்கூடும். ஏனெனில் பால் உணவுகளில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது .மிருகப்பால் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல .

இரண்டாவது ஆரோக்கியமற்ற உணவு : சர்க்கரை

                                                                                       சர்க்கரை உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை கட்டுப்படுத்துகிறது . மேலும் உடலின் தாது சமன்பாட்டை  நிலைகுலைய செய்கிறது. நீரிழிவு நோய்க்கு காரணமாகிறது .மேலும் உடலில் உருவாகும் உட்சுரப்பு திரவத்தின் சமநிலைக்கேடுக்கு காரணமாகிறது .சர்க்கரை டால்டா , ஆல்பா , பீட்டா , என்ற மூளை அலைகளின் வளர்ச்சிக்கு காரணமாகிறது . அதிக எண்ணிக்கையையும் உருவாக்குகிறது. இதன்மூலம் தெளிவாக சிந்திக்ககூடிய மனித மூளையின் திறமையை குறைக்கிறது.

மூன்றாவது ஆரோக்கியமற்ற உணவு :கடல் உப்பு 

 

 
                                                            அதிக உப்பு அதிக இரத்த அழுத்தத்தையும்  நரம்பியல் பிரச்சினைகளையும் உருவாக்குகிறது. அதிக உப்பு கலந்த உணவு, எலும்பு அடர்த்தியை குறைக்கிறது. உப்பு அதிகமாவது  இடது வேன்ரிகுலர்  ஹைபர்டிரபி( Left ventricular hypertrophy ) இதயம் அளவில் பெரியதாவது , இதய நோய் வருவதற்க்கான பிரச்சினைகளுக்கு காரணமாகிறது . மூளைத்திசுவிற்கு உப்பு உகந்ததல்ல . இதன் மூலம் சிறிய தாக்குதல்களுக்கு காரணியாகிறது. 

நான்காவது ஆரோக்கியமற்ற உணவு : பாலிஸ் செய்யப்பட்ட அரிசி

 

மேன்மைபடுத்தப்பட்ட வெள்ளை அரிசியை உட்கொள்ளுவதால் வயிற்று குடல் பிரச்சினைகளும்  இதய நோய்களும் வரும் சூழ்நிலை உருவாகிறது. ஏனென்றால் நார்ச்சத்து மற்றும் மிக அத்தியாவசியமான எண்ணைகளை கொண்டிருக்கும் தவிடு ( நோய்களை தடுக்கும் பணியை செய்யும் ) அரிசியை மேன்மைபடுத்தும்போது  அது முற்றிலும் நீக்கபடுகிறது.  மேன்மைபடுத்திய அல்லது வெள்ளை அரிசி கோலோஸ்டிராலுக்கு காரணமாகிறது. ஏனென்றால் உடலுக்கு உதவும் எல்லா நல்ல எண்ணெய்களும் இந்த அரிசியிலிருந்து நீக்கபடுகிறது . இதை தவிர்த்து  உங்கள் உடலில் உள்ள உயிர்ச்சத்துக்கள் வெள்ளை அரிசி தன்வயபடுத்துகிறது .அதிகபடியான கார்போஹைட்ரேட்  உணவு உட்கொள்ளுவதால் சர்க்கரையின் சமன்பாடு சீர்குலைகிறது . இது நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கிறது. மேலும் இது உடலிலுள்ள சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் உள்ளமைப்பின்மீது அதிக அழுத்தத்தை செலுத்தி சீர்குலைக்கிறது 

ஐந்தாவது ஆரோக்கியமற்ற உணவு : வெள்ளை மாவு

வெள்ளை மாவு கணையத்தின் பீட்டா செல்களை அழித்துவிடும் . நீரிழிவு நோய்களை உருவாக்கும் ரசாயன பொருளான அல்லோக்சனை கொண்டிருக்கிறது. ஒருவர் மேன்மைபடுத்தபட்ட உணவை அதிகமாக உட்கொண்டால் அதை சமாளிக்க அதிகமான அளவில் இன்சுலின் சுரக்க வேண்டும் . வெள்ளை மாவில் உள்ள செயற்கையான B -வைட்டமின்கள் நிலக்கரி தாரிலிருந்து (Coalter ) உருவாக்கபடுகிறது. இது உடலின் உள்ளமைப்பில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது . கடைகளில் விற்கப்படும் வெள்ளை மாவு அதிக நாள் கடை அலமாரிகளில் வைப்பதற்காக கலக்கப்பட்ட ரசாயன பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது . பொட்டாசியம் bromat  போன்ற இந்த வேதியல் கலவை புற்று நோயை உருவாக்கும் தன்மை உடையவை . வெள்ளை மாவில் உள்ள குளுடன் (Gluten ) என்ற பொருள், குளுடன்  ஏற்று  கொள்ளாதவர்களுக்கு குடல் நோயை ஏற்படுத்துகிறது. மேலும் இது எரிச்சல் ஊட்டக்கூடிய bowel  syndromes , crohns disease , dermatitis herpetifornus (autism ) cerate colitis   என்ற பலநோய்களை உருவாக்குகிறது .--- தொடரும்---

நண்பர்களே!  மேலே கூறிய கருத்துக்கள் அனைத்தும் எனது  சொந்த கருத்துக்கள் அல்ல . World Wellness  Organanization என்ற விழிப்புணர்வு இயக்கம்  மூலமாக வெளிவந்துள்ள  ஒரு புத்தகத்தில் உள்ளவை. மாற்று கருத்துக்களை தெரிவிக்க விரும்புவோர் மற்றும் மேலும் விபரங்களை பெற விரும்புவோர்   கீழே உள்ள முகவரிக்கு  மின்னஞ்சல் அனுப்பலாம் .  

உலக ஆரோக்கிய அமைப்பு 
27, ராஜீவ் காந்தி காந்தி சாலை ,சென்னை -600096
Email:mail@wwo.me


நன்றியுடன்
இரா.மாடசாமி 

Related Posts Plugin for WordPress, Blogger...

5 comments :

 1. அருமையான பதிவு. பால், அதுவும் பசுவின் பால் காலம் காலமாக வெருமனேயும், தயிர், மோர், வெண்ணெய், நெய் வடிவிலும் உட்கொள்ளப் பட்டு வந்துள்ளது. இவற்றை உட்கொண்ட மக்கள் நூறாண்டுகளுக்கும் மேல் மக்கள் வாழ்ந்து காண்பித்திருக்கிறார்கள். வெள்ளைக்காரன் சில சமயம் காசை குடுத்தா எதை வேண்டுமானாலும் நல்லதும்பான், எதையும் கெட்டதும்பான். ஆல்கஹால் கூட நல்லதுன்னு எவனோ போட்டான்..... அதனால அவன் சொல்வதை அப்படியே ஏத்துக்க வேண்டியதில்லை.

  வெள்ளை மாவு என்பது மைதாவைச் சொல்றீங்களா? அருமையான பதிவை மேலும் தொடருங்கள்........

  ReplyDelete
 2. உங்கள் கருத்துக்களை நான் மதிக்கிறேன் நண்பரே !

  ReplyDelete
 3. ஆம் மைதா மாவுதான்

  ReplyDelete
 4. நல்லதொரு பகிர்வு...

  தொடர்ந்து வருகிறேன்...

  நன்றி...
  tm3

  ReplyDelete
 5. எதைச் சாப்பிடுவது என்று பார்த்தால் கடைசியில் வெறு வயிறுடன் கிடந்து சாகவேண்டியதுதான். அதனால் எவ்வளவு சாப்பிடவேண்டும். என அறிந்து அதன்படி உண்டு வாழ்வதே மேல்.
  உடல் பயிற்சி மிக முக்கியம்.
  என் வைத்தியர் கூறினார். ஒரு நாளைக்கு 6- 8 கிராம் உப்பு மனித உடலுக்குத் தேவை.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger