இதுவரை யாருக்கும் தெரியாமல் குடித்தது இன்று மனைவிக்கு தெரிந்து விட்டது ! காலையில் படுக்கை அறையில் மறைத்து வைத்து பாட்டிலோடு குடித்ததை பார்த்து விட்டாள். என்னுடைய அப்பாவிடம், அம்மாவிடமும் சொல்லிவிடுவாளோ என பயந்தபடியே அவளிடம் ப்ளீஸ் என கெஞ்சினேன் ! ஒரு முறைப்புடன் அறையை விட்டு வெளியேறினாள்! நானும் அலுவலகம் கிளம்ப தயார் ஆனேன் ! மீண்டும் குளித்து முடித்து சாப்பாடு வைக்கும்போது பேசாமல் இருந்தாலும் கண்களால் என்னை தீயாக எரித்து விடுவது போல என்னை பார்த்தாள்.
அலுவலகம் முழுக்க இதே சிந்தனை ! ச்ச! இப்படி வசமா மாட்டிகிட்டோமே என என்னை நானே கடிந்து கொண்டேன் ! வேறு யாரிடமாவது இதை பற்றி சொல்லலாம் என எண்ணினேன் ! ஆனால் எனக்கு இருக்கும் இந்த பழக்கம் பற்றி எங்கள் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது !இதை சொல்லி , அவர்களிடம் உள்ள என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை. நேரடியாக மனைவியிடம் சாஷ்டாங்கமாக காலில் விழுந்துவிடுவதை விட வேறு வழியே இல்லை என முடிவெடுத்துவிட்டேன் . மாலை சீக்கிரமாக வீட்டுக்கு சென்று விட நினைத்தேன் !
மேலாளரிடம் அனுமதி பெற்று கிளம்பியாயிற்று ! 5 மணிவாக்கில் அம்மா , அப்பா இருவரும் கால் நடையாக வெளியே சென்று விடுவர் ! அதனால் 05.30 மணிக்கு வீட்டிற்கு சென்று விட்டால் ! இந்த சாஷ்டாங்க மன்னிப்பை கேட்டு விடலாம் என முடிவு பண்ணியோருந்தேன் !
5.30 ! உள்ளே பேச்சு சத்தம் வாசலிலேயே கேட்டதால் , மெதுவாக முன்னேறினேன் . உள்ளே எனது அப்பா மற்றும் அம்மாவுடன் எனது மனைவி பேசிக்கொண்டு இருந்தது எனது காதில் விழுந்தது . என்னை பற்றிய பேச்சுதான் என நினைக்கிறேன் ! நான் வருவதற்கு முன்பாகவே பேச ஆரம்பித்திருக்க வேண்டும் ! என் மனைவி அனைத்தையும் சொல்லிவிட்டாளா ! அடிப்பாவி ! மாட்டி விட்டுட்டாளா ! சரி என்னதான் பேசுகிறார்கள் என வெளியில் காத்திருந்து ஒட்டு கேட்டேன் .
என்னம்மா சொல்ற ! என அதிர்ச்சியுடன் கேட்டார் அப்பா .
ஆமா மாமா ! இன்னைக்கு காலைலதான் பார்த்தேன்!
நம்ம பாஸ்கரா! அவனுக்கு எப்படி இந்த பழக்கம் வந்துச்சு ! என்னால நம்ப முடியலியே ! இது அம்மா !
எதுவா இருந்தாலும் இத முதல்லையே தடுத்து நிறுத்தனும் ! என அப்பா சொல்லும்போது , நான் உள்ளே சென்றேன் !
எல்லோரும் என்னை பார்த்தவுடன் அதிர்ச்சியாயினர் !
நானே ஆரம்பித்தேன் ! என்னை எல்லாரும் மன்னிச்சுடுங்க ! இனிமே இப்படி செய்ய மாட்டேன் !
அப்பா எழுந்து வந்தார் ! என் தோளில் கைவைத்து மெதுவாக கடந்து அவரது அறைக்கு சென்று விட்டார் ! அம்மாவும் , உனக்கு என்னடா குறைவைச்சோம் ! என கேட்டுவிட்டு சென்றுவிட்டார் !
மனைவி முகத்தை திருப்பிகொண்டாள் !
அவளிடம் , அதான் மன்னிப்பு கேட்டுட்டேனே!என்றேன்
மன்னிப்பு போதாது ! என் மேலயும் குழந்தை மேலயும் சத்தியம் செய்யணும் ! என்றாள்
சரி என்றேன் !
என்ன சரி ? இப்பவே செய்யுங்க !
சரி! இனிமே நான் woodwards gripe water குடிக்க மாட்டேன் !
இதுவரை இந்த கதையை பொறுமையாக படித்து கடைசியில் காண்டாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த கதை சமர்ப்பணம் !
நன்றாக இருந்தாலும் ! மொக்கையாக இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்க !
நன்றியுடன்
இரா.மாடசாமி

Tweet | |||||

ஹா... ஹா... woodwards gripe water...!
ReplyDeleteஅப்படியே தொடருங்கள்... நல்லது... வாழ்த்துக்கள்...
நன்றி நண்பரே ! தொடர்கிறேன்!
Deleteஅய்யோ... முடியல... முடியல...
ReplyDeleteஎன்னால சிரிக்காம இருக்க முடியல...
கருத்துக்கு நன்றி நண்பரே! தளத்திற்கு தொடர்ந்து வருகை தரவும்
Deleteஹாஹா நான் வேற என்னமோ நினைத்து விட்டேன்
ReplyDeleteஅம்மாவும் , உனக்கு என்னடா குறைவைச்சோம் ! என கேட்டுவிட்டு சென்றுவிட்டார் !// ம்ம் சின்னப்புள்ளயா இருக்கும் போது குடுக்காம விட்டுருப்பாங்க ஹி ஹி ஹி!!!!
ReplyDelete
ReplyDeleteஇதுவரை இந்த கதையை பொறுமையாக படித்து கடைசியில் காண்டாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த கதை சமர்ப்பணம் !// கொலை வெறியில இருப்பவர்களை என்ன ப்ண்றதா உத்தேசம் நண்பா :-)
// கொலை வெறியில இருப்பவர்களை என்ன ப்ண்றதா உத்தேசம் நண்பா//
Deleteஒய் திஸ் கொலைவெறி ! பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் நண்பா !
சத்தியமா சார் எனக்கு இப்பவும் இந்த பழக்கம் இருக்கு,இப்போ வெளிநாட்டில் இருகின்ற காரணத்தினால் தற்காலிகமா நிறுத்தி உள்ளேன்
ReplyDeleteஅப்படியா ! ஆச்சர்யமா இருக்கே! ஆனாலும் இது ஒன்னும் பெரிய தப்பில்ல சார் !
DeleteGood One...
ReplyDeleteகருத்துக்கு நன்றி! தளத்திற்கு தொடர்ந்து வருகை தரவும் !!
Deleteஇனிமே நான் woodwards gripe water குடிக்க மாட்டேன் !\\ நான் நேரா இந்த வரியை படிச்சிட்டேன் , ஹி .........ஹி .........ஹி .........Sorry......
ReplyDeleteஅதனாலென்ன ! இன்னொரு தடவை மேலிருந்து படிங்க !
Delete