Monday, 15 July 2013

தேமுதிக அதிருப்தி MLA க்கள் செய்தது சரியா? ஒரு அலசல்!

 வணக்கம் நண்பர்களே !
                                                   இன்றைய தமிழக அரசியலில் மிகவும்  சூடான செய்தி  தேமுதிக அதிருப்தி M L A க்கள் கட்சி மாறி வாக்களித்தது பற்றித்தான்.அதைபற்றிய அலசல்தான் இந்த பதிவு !
2002-2003 கால கட்டத்தில் , பாபா படம் மூலம் தான் அரசியலுக்கு வருவேன் என மறைமுகமாகவோ நேரடியாகவோ ரஜினிகாந்த் சொல்லிவிட்டார் . ஆனால் நீங்கள் இன்னும் ஒரு தெளிவான முடிவு எடுக்கவிலையே என ஒரு பத்திரிக்கை நிருபர் இவரிடம் கேட்டதற்கு , நான்  கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் , நம் மக்களுக்கு நல்லது செய்வேன் என சூளுரைத்தார் . யார் வருவார் என எதிர்பார்த்தார்களோ அவர் கடைசிவரை வரவே இல்லை . ஆனால் யாரை எதிர்பார்க்கவில்லையோ அவர்தான் எந்த ஒரு கட்சியுடனும்  கூட்டணி இல்லாமல்   தனிநபராக  2006 சட்டமன்ற தேர்தலில்,களம் இறங்கி ,  ஒரு  சட்ட மன்ற உறுப்பினர் பதவியையும் பெற்று ஜம்மென்று கோட்டைக்கு சென்றார்.

அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் , அனைவர் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் அதிமுக வுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களை பிடித்தது மட்டுமில்லாமல் எதிர் கட்சி அந்தஸ்த்தையும் பெற்று  ஆச்சர்யபடுத்தினார் ,

இவ்வாறு வீறு நடை போட்டு கொண்டிருந்த அவர் கட்சி , அதிமுக வின் ஆட்சி தொடங்கி சில மாதங்களிலேயே சருக்க தொடங்கியது. சட்டசபையில் MLA சஸ்பென்ட் , நாக்கை துருத்தி அவை மரபுகளை மீறியது , கட்சி MLA க்கள் எதிரணியுடன் சந்திப்பு , என தொடர்ச்சியாக நடுநிலையாளர்கள் மற்றும் பத்திரிக்கைகளிடையே விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதற்க்கு யார் காரணம் ? முதலில் அவர் பக்கத்த்தில் உள்ள குறைகளை பார்ப்போம் . 

1. சட்டசபை என்பது ஒரு மரபு ரீதியான இடம் , இன்று அவர் இருந்த இடத்தில் காமராஜர்,அண்ணா மற்றும் இவர் போற்றி வணங்குகிற MGR போன்ற தலைவர்கள் வந்து சென்ற இடம். இந்த இடத்தில் சினிமாவில் வருவது போல ஏய் ! ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெய்ட்டு என்பதுபோல  நாக்கை துருத்துவதும் , அடிக்க வருவது போல முறைப்பது என இதுபோன்ற நடவடிக்கைகள் மக்கள் மத்தியில்   இவரும் சராசரி MLA என மக்களுக்கு உணர வைத்துவிட்டது

2. சட்டசபைக்கு தொடர்ந்து வருகை தராமல் குறை சொல்லி பேட்டி மட்டுமே கொடுத்துகொண்டிருப்பது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கியது .எதிர் கட்சி என்பது ஆளுங்கட்சியின் நிறை குறைகளை மக்களுக்கு எடுத்து செல்லுவதில் பெரும் பங்கு இருக்கிறது .அதை அவர் உணர தவறி விட்டார்.

3. இவரிடம் சொல்லாமல் , இவரது கட்சி  MLA க்கள் முதல்வரை சந்தித்ததனர் ,  என்ற செய்தி வந்ததும் இவர் என்ன செய்திருக்க வேண்டும் ? முதலில் அவர்கள் என்ன காரணத்துக்காக பார்த்தார்கள் என்பதை அவர்களை அழைத்து விசாரித்து இருக்க வேண்டும் . அவருடைய  MLA க்களின்  கூற்றுப்படி மக்களின் நலனுக்காக என்ற பட்சத்தில் அதில் தவறே இல்லை . இதற்க்கு  அவர்களை தட்டி கொடுத்து பாராட்டி இருக்க வேண்டும் . ஏன் என்றால் , அந்த தொகுதி மக்களுக்கு அந்த MLA க்கள் தான் பதில் சொல்ல வேண்டும் . இல்லை என்றால் நாளை வாக்கு இழப்பு அந்த MLA க்கு மட்டுமில்லை தேமுதிக வுக்கும்தான் .அதை மீறி  ஏதோ உள்நோக்கத்துடன் செல்கிறார்கள் என்றால் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

4.   இன்றைய சூழலில்  கட்சி நடவடிக்கைகளுக்கு அவர்கள் கட்டுப்படாமைக்கு  இரண்டு காரணம் உண்டு ஒன்று ஆளும்கட்சியின் அரவணைப்பு , மற்றொன்று  தேமுதிக உட்கட்சி கட்டமைப்பு சரியில்லாதது .நீ சொல்லி நான் என்ன கேட்பது போன்ற நிலைமை . இதை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டியது மிக முக்கியம் . இல்லாவிடில் அனைத்து MLA க்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று விடுவர்.


அடுத்துஅதிருப்தி MLA க்களுக்கு வருவோம் . இன்றைய  அரசியலில் எந்த கட்சியாக  இருந்தாலும் சாதாரண ஒரு வார்டு செயலாளர் ஆவதற்கே எவ்வளவு  செலவு செய்யவேண்டி இருக்கும் என்பது பாமரனுக்கு கூட தெரிந்திருக்கும் .அதற்க்கு பயங்கர போட்டி வேறு . அந்த போட்டியை சமாளிக்க காசு செலவு செய்து கடைசியில் அந்த பதவியை பெறுவார்கள் . பிற கட்சிகளில் இந்த வார்டு செயலாளர் பதவி பெறவே 5 அல்லது 6 வருடம் ஆகிவிடும் . ஆனால் , தேமுதிக கட்சியில் சேர்ந்து  குறுகிய காலத்திலேயே   இவர்களுக்கு MLA என்ற முகவரியை கொடுத்தது அதன் கட்சி. அதை அதிருப்தி MLA க்கள் மறக்க கூடாது . MLA வேட்பாளர் தேர்வின் பொது இவர்கள் கட்சியை சேர்ந்த எத்தனையோ தொண்டர்களை கழித்து விட்டுதான்  இவர்களை தேமுதிக தேர்ந்தேடுத்திருகிறது.அதே போல  இவர்கள் தேர்தல்  வெற்றிக்குப்பின் எத்தனையோ ஆயிரம் தேமுதிக தொண்டர்களின் உழைப்பு  அடங்கியிருக்கிறது . இப்படியிருக்க, ஏறி வந்த ஏணியை  எட்டி உதைப்பது போல  இவர்களை  வளர்த்து விட்ட கட்சிக்கு இவர்களே  ஓட்டுபோடவில்லை என்றால் நாளை இவர்களை நம்பி எந்த கட்சி சீட் கொடுக்கும் ?

 இவர்களிடம்  கேட்க விரும்பும் மேலும் சில கேள்விகள்

1. தேமுதிகவை விட்டு வெளியே சென்றுவிட்டீர்கள் , இன்னும் மூன்று வருடம் MLA வாக இருக்க முடியும் . அடுத்த தேர்தலில் உங்களால் சுயேச்சையாக நிற்க முடியுமா ?

2. அதிமுக அடுத்த தேர்தலில் உங்களுக்கு சீட் கொடுப்பார்களா ? அல்லது கொடுப்பதாக  வாக்கு அளித்துள்ளதா ?

3. உண்மையிலேயே தேமுதிக உங்களை மதிக்கவில்லை எனில் MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுக ஆதரவில் இடைத்தேர்தலில் வெற்றி பெறலாமே ?

நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது? காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும் ! காட்சிகள் மாறும் ! அப்போதுதான் உங்களுடைய நிலைமை என்னவென்று தெரியும் !

  .

நன்றியுடன்
இரா.மாடசாமி
Related Posts Plugin for WordPress, Blogger...

2 comments :

  1. எழுப்பிய வினாக்கள் சரியானவைதான். கேட்ட இடம்தான் சரியில்லை. கிடைத்ததை அனுபவித்துவிடலாம் என்ற நோக்குடையோரிடமிருந்து நியாயத்தை எப்படி எதிர்பார்க்க இயலும். தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்கள் கூட்டாகக் குரலெழுப்பி இத்தகைய எம்.எல்.ஏ.-க்களை இராஜினாமா செய்யவைத்திடல் வேண்டும். அப்போதுதான் இதற்கோர் விடிவு பிறக்கும். மெலும் கூட்டணிக்கு வெட்டு வைக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் தெர்தல் நடத்தப்பட்டால் இதுபோன்ற நிலைமையே ஏற்படாது.

    ReplyDelete
  2. எழுப்பிய வினாக்கள் சரியானவைதான். கேட்ட இடம்தான் சரியில்லை. கிடைத்ததை அனுபவித்துவிடலாம் என்ற நோக்குடையோரிடமிருந்து நியாயத்தை எப்படி எதிர்பார்க்க இயலும். தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்கள் கூட்டாகக் குரலெழுப்பி இத்தகைய எம்.எல்.ஏ.-க்களை இராஜினாமா செய்யவைத்திடல் வேண்டும். அப்போதுதான் இதற்கோர் விடிவு பிறக்கும். மெலும் கூட்டணிக்கு வெட்டு வைக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் தெர்தல் நடத்தப்பட்டால் இதுபோன்ற நிலைமையே ஏற்படாது.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger