வணக்கம் நண்பர்களே !
Face book ல் எனது சுவரில் எழுதிய சில நிலைத்தகவல்கள் உங்களுக்காக !
ஒரு வேளை மின்சார வாரியத்தை ஏர்டெல்,வோடாபோன் போன்ற கம்பனிகளின் கையில் கொடுத்திருந்தால் , நமது சம்பளத்தில் ஒரு பாதி கரைந்திருக்கும்.மேலும் , A/C special package , Fridge & Washing Machine Special Package, Economic pack(Fans& Light, TV), One day validity , thirty day validity , இப்படி எல்லாத்துக்கும் கறந்து நம்ம தாலிய அத்துருப்பங்க !
*************************************************************
IPL ல் இந்த முறை சென்னை அணி இரண்டு முறை பஞ்சாபிடம் பஞ்சரானது ! அப்போது இந்த வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வந்தது ! இந்த வீடியோவை பார்பதற்க்கு முன் , வடிவேலுவை MS தோனியாகவும் , எதிர்கட்சியினரை கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் ஆகவும் நினைத்து கொள்ளவும்!
உபயம் : Youtube
என்னா அடி !!!!!!!!!!!!!!!!!!!!!
**********************************************************
உங்கள்
மொபைல் நம்பரை தமிழில் சொல்லுங்கள் என யாரேனும் கேட்கும்போது
,ஆங்கிலத்தில் சொல்வதை விட மும்மடங்கு நேரம் அதிகம் எடுத்துக்கொள்கிறது.இதை
நினைக்கும்போது கொஞ்சம் தலைகுனிவாகத்தான் இருக்கிறது !
*******************************************************************
உண்மையை விட பொய் பேசுவதற்க்கே அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன் அலை பேசி !
நன்றியுடன் !
இரா.மாடசாமி
Tweet | |||||

0 comments :
Post a Comment
உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!