வணக்கம் நண்பர்களே !
இன்றைய கால கட்டத்தில் மின்சாரம் என்பது நமது வாழ்வில் இன்றியமையாத நமது வாழ்வில் இரண்டற கலந்து விட்ட ஒன்றாகும் ! இந்த மின்சாரத்தை செலவழிப்பதில் காட்டும் அக்கறையை சேமிப்பதில் நாம் காட்டுவத்தில்லை ! ஒரு சின்ன உதாரணம் ! பகலில் இரு சக்கர வாகனத்தில் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்லக்கூடாது என்ற விழிப்புணர்வை பெற்றிருக்கும் நாம் ! வீட்டில் தேவை இல்லாமல் விரையமாகும் மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏன் பெறவில்லை ! நகரங்களில் மின்சாரத்தை சொகுசாக செலவழித்து வாழும் நாம் கிராமங்களில் உள்ள மக்களை நினைத்து பார்க்கிறோமா? தொடர்ந்து அரசை குறை கூறி கொண்டிருக்கும் நாம் அதை சேமிக்க நாம் என்ன முயற்சி செய்தோம் ! ஆகையால் மின் சிக்கனத்தை கடைப்பிடித்து நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேற கைகொடுப்போம் !
மின்சாரத்தை சேமிக்கும் சில யோசனைகள் உங்களுக்காக!
1. பகலில் A/C போடுவதை முடிந்தவரை தவிர்க்கவும் !
2. சூரிய ஒளி வீட்டிற்குள் விழும் பட்சத்தில் பகலில் விளக்குக்குகள் எரிய விடுவதை தவிர்க்கவும்
3.இரவு முழுக்க அலைபேசி மற்றும் laptop க்கு charge செய்ய வேண்டாம் ! தேவை படும்போது மட்டும் போடவும்! அதே போல சார்ஜ்
செய்து விட்டு தவறாமல் மின் இணைப்பை துண்டிக்கவும் !
4. தண்ணீர் இறைக்கும் பம்ப் போட்டுவிட்டு தொட்டியில் நிறைந்து வழிந்தோட விடாமல் சரியான நேரத்தில் அணைக்கவும் !
5. டிவி பார்த்து முடித்து விட்டு அதில் உள்ள ON/OFF பட்டனை மட்டும் அணைப்பதோடு மட்டும் இல்லாமல் மெயின் சுவிட்ச்சையும் சேர்த்து அணைக்கவும் !
6. வெயில் காலங்களில் Washing Machine இல் உள்ள Spin மற்றும் Drier வசதியை பயன்படுத்தாமல் வெளியில் உலர்த்தலாம் !
7. சமையல் கூடங்களில் வேலை இல்லாத நேரத்தில் Exhaust Fan ஓடுவதை நிறுத்தி வைக்கவும் !
8. பகலில் வீட்டிற்கு வெளியே எரியும் விளக்குகள் எரிவதை தவிர்க்கவும் !
இது போன்ற மேலும் சில யோசனைகள் உங்களிடம் இருந்தால் கருத்து பெட்டியில் தெரிவிக்கலாம் !
நன்றியுடன் !
இரா.மாடசாமி
Tweet | |||||

0 comments :
Post a Comment
உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!