Friday, 30 May 2014

மின்சார பிரச்சினைக்கு அரசு மட்டும் காரணமா ?

- 0 comments


வணக்கம் நண்பர்களே !

                          இன்றைய கால கட்டத்தில் மின்சாரம் என்பது நமது வாழ்வில் இன்றியமையாத நமது வாழ்வில் இரண்டற கலந்து விட்ட ஒன்றாகும் ! இந்த மின்சாரத்தை செலவழிப்பதில் காட்டும் அக்கறையை  சேமிப்பதில் நாம் காட்டுவத்தில்லை ! ஒரு சின்ன உதாரணம் ! பகலில் இரு சக்கர வாகனத்தில்  முகப்பு விளக்கை எரிய விட்டு செல்லக்கூடாது என்ற விழிப்புணர்வை பெற்றிருக்கும் நாம் ! வீட்டில் தேவை இல்லாமல் விரையமாகும் மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏன் பெறவில்லை ! நகரங்களில் மின்சாரத்தை  சொகுசாக செலவழித்து வாழும் நாம் கிராமங்களில் உள்ள மக்களை நினைத்து பார்க்கிறோமா?  தொடர்ந்து அரசை குறை கூறி கொண்டிருக்கும் நாம் அதை சேமிக்க நாம் என்ன முயற்சி செய்தோம் ! ஆகையால் மின் சிக்கனத்தை கடைப்பிடித்து நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேற கைகொடுப்போம் !


 மின்சாரத்தை சேமிக்கும் சில யோசனைகள் உங்களுக்காக! 


1. பகலில்  A/C போடுவதை முடிந்தவரை தவிர்க்கவும் !

2. சூரிய  ஒளி வீட்டிற்குள் விழும் பட்சத்தில் பகலில் விளக்குக்குகள் எரிய விடுவதை தவிர்க்கவும்

3.இரவு முழுக்க  அலைபேசி மற்றும்  laptop க்கு charge செய்ய வேண்டாம் ! தேவை படும்போது மட்டும் போடவும்!  அதே போல சார்ஜ்
 செய்து விட்டு தவறாமல் மின் இணைப்பை துண்டிக்கவும் !

4. தண்ணீர் இறைக்கும் பம்ப் போட்டுவிட்டு தொட்டியில்  நிறைந்து வழிந்தோட விடாமல் சரியான நேரத்தில் அணைக்கவும் ! 

5. டிவி பார்த்து முடித்து விட்டு அதில்  உள்ள ON/OFF பட்டனை மட்டும் அணைப்பதோடு மட்டும் இல்லாமல் மெயின் சுவிட்ச்சையும் சேர்த்து அணைக்கவும் !

6. வெயில் காலங்களில் Washing Machine இல்  உள்ள  Spin மற்றும்  Drier வசதியை பயன்படுத்தாமல்  வெளியில் உலர்த்தலாம் !

7. சமையல் கூடங்களில் வேலை இல்லாத நேரத்தில் Exhaust Fan ஓடுவதை நிறுத்தி வைக்கவும் !
  
8. பகலில் வீட்டிற்கு வெளியே எரியும் விளக்குகள் எரிவதை தவிர்க்கவும்  !

இது போன்ற மேலும் சில யோசனைகள்  உங்களிடம் இருந்தால் கருத்து பெட்டியில் தெரிவிக்கலாம் !






நன்றியுடன் !

இரா.மாடசாமி
[மேலும் படிக்க>>>]

Monday, 19 May 2014

வடிவேலுவும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாபும் !

- 0 comments


வணக்கம் நண்பர்களே !
        Face book ல்  எனது சுவரில் எழுதிய சில நிலைத்தகவல்கள் உங்களுக்காக !

ஒரு வேளை  மின்சார வாரியத்தை ஏர்டெல்,வோடாபோன் போன்ற கம்பனிகளின் கையில் கொடுத்திருந்தால் ,  நமது சம்பளத்தில் ஒரு பாதி கரைந்திருக்கும்.மேலும் , A/C special package , Fridge & Washing Machine Special Package, Economic pack(Fans& Light, TV),  One day validity , thirty day validity , இப்படி எல்லாத்துக்கும் கறந்து நம்ம தாலிய அத்துருப்பங்க ! 

           *************************************************************

IPL  ல்  இந்த முறை சென்னை அணி இரண்டு முறை பஞ்சாபிடம் பஞ்சரானது ! அப்போது இந்த வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வந்தது ! இந்த வீடியோவை பார்பதற்க்கு  முன்  , வடிவேலுவை MS தோனியாகவும் , எதிர்கட்சியினரை கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் ஆகவும் நினைத்து கொள்ளவும்!
உபயம் : Youtube

 

என்னா அடி !!!!!!!!!!!!!!!!!!!!!
 

********************************************************** 
 உங்கள் மொபைல் நம்பரை தமிழில் சொல்லுங்கள் என யாரேனும் கேட்கும்போது ,ஆங்கிலத்தில் சொல்வதை விட மும்மடங்கு நேரம் அதிகம் எடுத்துக்கொள்கிறது.இதை நினைக்கும்போது கொஞ்சம் தலைகுனிவாகத்தான் இருக்கிறது !

*******************************************************************

உண்மையை விட பொய் பேசுவதற்க்கே அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன்  அலை பேசி !
 
********************************************************************************



நன்றியுடன் !
இரா.மாடசாமி


[மேலும் படிக்க>>>]

Tuesday, 22 April 2014

தயவு செய்து ஓட்டுப்போடுங்கள் !!!

- 2 comments
வணக்கம் நண்பர்களே !
இந்தப்  பதிவு  எனக்கு மிகவும் பிடித்த திரு சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதப்பட்டது . இன்றைய தேதிக்கு இது கொஞ்சம் outdated ஆக  இருந்தாலும், இந்த சமயத்தில் இந்த பதிவை எழுவது பொருத்தமாக இருக்கும்.வீட்டில் படித்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது  அது  அப்படியே உங்களின் பார்வைக்கு.

 ஐ டி கார்டு இல்லை என்றாலும் வோட்டுப் போடலாம் .... போட வேண்டும் . யாருக்கு என்று என்னைக்  கேட்டால் , கீழ்காணும் காப்பி ரைட் செய்யப்பட்ட என் சொந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவலாம் .-- சுஜாதா

1. இருப்பதற்க்குள் இளைஞர் அல்லது அதிகம் படித்தவருக்கு வோட்டுப் போடுங்கள்.சாதி பார்க்காதீர்கள்.உங்கள் சாதியென்றால் ஒரு பரிவு உணர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த ஆள் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, யோசித்துப் பாருங்கள். டிவி யில் பார்த்தால் போதாது . முதலில் அவர் உங்கள் தொகுதிக்காரரா அல்லது வெளியிலிருந்து விதைக்கப்பட்டவரா என்று பாருங்கள் .


2. உங்கள் தீர்மானம் திடமாக இருந்தால் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக போடப்போகிறேன் என்பதை சுற்றுப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள் . உங்கள் மனைவி, மக்கள் , டிரைவர்,வேலைக்காரி , அல்சேஷன் என எல்லாருக்கும் சொல்லலாம் .

3.யாருக்கு என தீர்மானித்திருக்காத பட்சத்தில் உங்கள் வீட்டுக்கு முதல் முறையாக வோட்டு கேட்டு வந்தவருக்கு  போடுங்கள் ....தலையையாவது காட்டினாரே !

4. உங்கள் தொகுதியில் பெண்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு போடுங்கள் . முப்பத்துமூன்று விழுக்காடு என்று ஜல்லி அடித்துக்கொண்டிருக்கிறார்கள் . ஆணாதிக்க இந்தியாவில் அது வரவே வராது. பெண்கள் குறைந்த பட்சமாவது ஆதரிக்கப்படவேண்டியவர்கள் . மக்களவையில் கொஞ்சம் வாதிட்டு சண்டை போடும் சுஷ்மா சுவராஜ் , உமாபாரதி ,மாயாவதி போன்றவர்கள் மூலம் சலுகைகள் பெற வாய்ப்புள்ளது .அலங்காரத்திற்கு நிற்கும் சினிமா நடிகைகளை தவிர்க்கவும் .பெண் என்பதால் அனிமல் ஹஸ்பண்டரி இலாகவிலாவது டெபுடி அசிஸ்டன்ட் ஸ்டேட் மினிஸ்டர் பதவியாவது கொடுத்து தொலைப்பார்கள் .

5.இதற்க்கு முன்பு இருந்தவர் மறு தேர்தலை விரும்பினால் அவர் ஆட்சி காலத்தில் எப்போதாவது ஒரு முறையாவது உங்கள் தெருப்பக்கம் தலையைக் காட்டியிருக்கிறார் என்றால் அவருக்குப் போடலாம்.( நிலா டிவி யில் கிருஷ்ணகிரி தொகுதி மக்களை பேட்டி கண்டபோது ஒரு பெண்மணியை 'இப்ப இருக்கிற எம் பி யாருன்னாவது தெரியுமாம்மா உங்களுக்கு? என்று கேட்டதற்கு, எம். பி யா ... அப்படின்னா ?' என்று வியப்புடன் கேட்டார் .) எனவே  போடுவதற்கு முன் முகம் , அவர் கட்சி வேட்பாளராக இருந்தால் அந்த கட்சியின் சென்ற தேர்தல் வாக்குறுதிகளை ஒரு காப்பி வைத்து கொள்வது நலம். அதை காட்டி இதில் என்னென்ன நீங்கள் செய்திருக்கிறீர்கள் ? என்று கேட்டாலே பாதி பேர் மறைந்து விடுவார்கள் . அதே போல இந்த முறை கட்சி வேட்பாளர்களிடம் தேர்தல் வாக்குறுதி என்று குட்டியாக ரேஸ் புக் மாதிரி ஒரு புத்தகம் இருக்கும் அதை ஒரு பிரதி வாங்கி வைத்துகொள்ளுங்கள் . பத்து மாதத்தில் மறுபடி தேர்தல் வந்தால் கேட்பதற்கு , குறிப்பாக நிலையான ஆட்சி அமைக்க போகிறோம்' என்று யாராவது சொல்லிக்கொண்டு வந்தால் நாயை அவிழ்த்து விடுங்கள் . இந்தியாவில் நிலையான ஆட்சி இனி சாத்தியமில்லை . வரும் தேர்தலில் எந்த ஆட்சியாவது ஐந்து வருஷம் தாங்கினால் மொட்டை போட்டு கொள்கிறேன் .

6. சுயேச்சை வேட்பாளர்களுக்கு போடாதீர்கள் . வேஸ்ட் .

7. கொஞ்ச நாள் தையா தக்கா ஆட்டம் பாட்டம் , சிக்கு புக்கு , முக்காபுலா , போன்ற அறிவு சார்ந்த புரோகிராம்களை புறக்கணித்து பிரணாய் ராய் , ரபி பெர்னாட் , மாலன்  போன்றவர்கள் நடத்தும் தேர்தல் ப்ரோகிராம்களை பாருங்கள் . தூர்தர்ஷன் கூட பார்க்க்கலாம் . இருப்பதற்குள் பாத்திரத் திருடன் போல திருட்டு முழி முழிக்காதவராக , யாரைப் பார்த்தால் 'இவர் ஏதாவது செய்வார் .... முதல் நாளே உள்ளங்கை அரிக்காது ' என்று உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ அவருக்கு போடலாம் .(அமெரிக்கா இப்படித்தான் தேர்ந்தெடுக்கிறது) அல்லது  பத்து வார்த்தை கோர்வையாக பேச தெரிந்திருந்தால் போடலாம் .

இவ்வளவு செய்தும் ஒன்றுமே தீர்மானிக்க முடியவில்லை என்றால் சீட்டு எழுதி வீட்டில் யாரையாவது தேர்ந்தெடுக்க சொல்லுங்கள் . அதிர்ஷ்டமுள்ளவர்கள் வெல்லட்டும் . ஆனால் கட்டாயமாக வோட்டு போடுங்கள் . அது அவசியம். (நோட்டா பயன்பாட்டிற்கு முன் இந்த கட்டுரை வந்ததால் சாருக்கு அதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை வந்திருந்தால்  அதனை சொல்லியிருப்பார் என நினைக்கிறேன் ! )

பார்லிமென்ட்  தொங்கினாலும் முடங்கினாலும் பரவாயில்லை . சண்டை வந்தால் விட்டு கொடுப்பது இல்லை . மேலும் முதன் முதலாக இந்தக் கோமாளிகள் பரஸ்பரம் கவிழ்த்துக்கொண்டு , மர மேஜைகளைத் தட்டி வெளியேற்ற விளையாட்டு விளையாடி கொண்டிருக்கும்போது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் பத்திரமாக இருந்திருக்கிறது . அது முன்னேற்றத்திற்க்கான அறிகுறி . ஜப்பான் , பிரான்ஸ் , இத்தாலி , போன்ற நாடுகளில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அரசியல் மாற்றங்கள் இருந்தும் அந்த நாடுகளில் பொருளாதாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. நம் இந்தியப் பொருளாதாரமும் அந்த நிலைக்கு வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம்.அது இப்போது மனிதர்களை சாராமல்  பருவமழையை சார்ந்துள்ளது.பருவ மழையும் இவ்வளவு பாவாத்மாக்கள் இருந்தும் தவறில்லாமல் பெய்கிறது .

தயவு செய்து வோட்டுப்போடுங்கள் !! டாமினோ எபெக்ட் என்று ஒன்று உள்ளது.அதன் மூலம் உங்கள் ஒற்றை வோட்டை வைத்துக்கொண்டு தேசத்தின் தலைவிதியை படித்தவர்களால் மாற்ற முடியும் .


நன்றி

திரு. சுஜாதா
கற்றதும் பெற்றதும்
விசா பப்ளிகேசன்









நன்றியுடன்
இரா. மாடசாமி










[மேலும் படிக்க>>>]

Friday, 14 March 2014

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார் ?

- 0 comments
வணக்கம் நண்பர்களே !
                       இன்றைய சினிமாவில் தினமும் எவ்வளவோ விஷயங்கள் தினம் தினம்  நடந்து கொண்டிருந்தாலும் , குறிப்பிட்ட ஒரு சில நடிகர்களின்  வட்டத்துக்குள் அடுத்தது என்ன என எதிர்பார்ப்பு கூடிகொண்டே இருக்கும். இள வயது நடிகர்கள் தொடர்ந்து நடித்து  கொண்டிருக்கின்றனர். ஆனால்,சில  மூத்த நடிகர்கள் (ஹிட் நடிகர்கள்) படங்கள் சீக்கிரம் வெளிவராது குறிப்பாக சொல்லப்போனால் ரஜினி மற்றும் கமல். இதில் கமல் ஆண்டுக்கு ஒரு படம் கொடுத்து விடுகிறார். இது விஷயமாக சமீபத்தில் நடந்த ரசிகர்கள்  பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் "ஒரு வருடத்தில் மிக குறைந்த எண்ணிக்கையில் (ஒன்று அல்லது இரண்டு படங்களில்) மட்டுமே  நடிக்கிறீர்கள் . இது  எங்களுக்கு பத்தாது என  கூறினார் . அதற்கு கமல்," இது எனக்கே பத்தாது"  என  அவருக்கே உரிய நகைச்சுவையோடு கூறினார். ஆனால் ரஜினி படங்கள் கேட்கவே  வேண்டாம் . எப்போது நடிப்பார் ? யார் இசை ? யார்  கதாநாயகி ?என நாளிதழ்கள் , தொலைகாட்சிகளில்  எப்போதும் பரபரப்பு, இதை எல்லாம் விட அவரை இயக்குவது யார் என்பததுதான் உச்ச பட்ச எதிர்பார்ப்பாக இருக்கும். அதனை பற்றிய ஒரு சிறிய அலசல் தான் இந்த பதிவு .

ரஜினி என்றாலே  ரசிகர்கள் அல்லாமல் குழந்தைகள் , பெண்கள்,முதியவர், என அனைத்து தரப்பினரும் பார்ப்பார்கள் என திரை உலகில் ஒரு கருத்து உண்டு. அதே போல ரஜினியின்  படம்  மாநகரம், நகரம், கிராமம் என அனைத்து வித மக்களையும் திருப்தி படுத்தும் விதமாக இருக்கும்! படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் .ஆனால்,ரஜினி நடித்து தற்போது விரைவில் வெளிவர உள்ள கோச்சடையான்  எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்று சொல்ல முடியாது!காரணம் அவர் ஒரு மாஸ் ஹீரோ ! மாஸ் ஹீரோவின் அசல் உருவத்திற்கும்,3டி  உருவத்திற்கும்  மிகப்பெரிய வேறுபாடு  உள்ளது ! இந்த படத்தின் Making  எனப்படும்  உருவாக்கும் முறை ரஜினிக்கு முற்றிலும் புதிது.இதனை ரசிகர்கள் எந்த அளவு வரவேற்ப்பார்கள் என தெரியவில்லை ? இந்தப்படம் வெற்றி பெற்றால் பரவாயில்லை.  அப்படி வெற்றி பெறாமல் போகும் பட்சத்தில் ரஜினியின் அடுத்த படம் கட்டாய வெற்றியை நோக்கி  என ஒரு வித நெருக்கடிக்கு ஆளாகும் ! அதனால் இப்போதே  ரஜினியின் அடுத்த படத்தை பற்றிய செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன .


ரஜினியின்  அடுத்த படத்தை  இயக்குவது  யார் ?

ரஜினி எப்போதுமே வெற்றிபெறும்  குதிரையின் மீதே சவாரி செய்து பழக்கம்! ஆதலால் !புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு என்ன என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் !

 அவரை வைத்து ஏற்கனவே இரண்டு  படங்களை  இயக்கிய K  S  ரவிக்குமார்
இயக்குவாரா ? அதற்கு   25 % வாய்ப்புகள் இருந்தாலும்  அவரின்  படங்கள் இன்றைய  Corporate  உலக மக்களுக்கு பிடிக்குமா என்பது தெரியவில்லை ! ஏன் என்றால் இன்றைய நிலையில் தியேட்டரின் முதல் வார வசூல் இவர்களை நம்பியே இருக்கிறது !அதனால் ரஜினியே கொஞ்சம் யோசிப்பார் !







அடுத்தது K V  ஆனந்த் ! இவர்  இயக்குவதற்கு 75% வாய்ப்பு உள்ளது ! ஏன் என்றால் இவர் ஒரு வெற்றிப்பட இயக்குனர் !மேலும் ஷங்கரை போல  தொழில்நுட்பத்திலும் திறமைசாலி ! இவரின் அயன் மற்றும் கோ போன்ற திரைப்படங்கள்  வெற்றிப்படங்கள் !

கடைசியாக  ஷங்கர் ! படத்தின் வெற்றிக்கு 100 சதவீத உத்திரவாதம் இவர் தருகிறாரோ இல்லையோ ரசிகர்கள் தந்து விடுகிறார்கள் ! படம் எடுப்பதற்கு கொஞ்சம் முன்னோ பின்னோ ஆகலாம் ! ஆனால்  நிச்சய வெற்றி! ஏற்கனவே ரஜினியை வைத்து  இரண்டு மெகாஹிட் படத்தை  கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் அதிபர் போன்ற அனைத்து பிரிவினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுக்கும் தமிழ் சினிமாவின் ATM !    ரஜினி படத்தின் தயாரிப்பு செலவுகுகளை  மீறி லாபம் பார்க்க வேண்டுமானால்  இது போன்ற கூட்டணி வைத்தால் மட்டுமே முடியும்  என ரஜினிக்கே தெரியும் ! மேலும் தமிழ் திரை  உலகில் தனது மாஸ் ஹீரோ இமேஜை தக்க வைத்துகொள்ளவும் ரஜினிக்கு இந்த கூட்டணி அவசியம்!

இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடத்தான் போகிறது !

ரஜினி  புதிய குதிரையில் பயணித்து  வெற்றி பெற போகிறாரா ? அல்லது வெற்றி பெற்ற குதிரையில் பயணம் செய்ய போகிறாரா என்று  ? பொறுத்திருந்து பார்ப்போம் !


நன்றியுடன்
இரா.மாடசாமி

[மேலும் படிக்க>>>]
 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger