Friday, 14 February 2014

பாட்டி சுட்ட வடையை காக்கா சுட்டது சரியா? தவறா ? விவாத மேடை !

வணக்கம் நண்பர்களே !
      எனது கற்பனையில் உதித்த மற்றுமொரு படைப்பு ! இந்த படைப்புக்கு தூண்டுதல் இமயம் தொலைகாட்சியில் வரும் காமெடி பஜார் ! அவர்களுக்கு எனது நன்றிகள் ! சரி ! என்ன படைப்பு ? நாம் தினந்தோறும் செய்தி சேனல்களில் காணும் விவாத மேடையே !அதை நமது பழங்கதையுடன் இணைத்துள்ளேன் ! பிடித்திருந்தால் கருத்துரைக்கவும் !
                                                            


நிருபர் :வணக்கம் நேயர்களே  ! இது   எதிர்பட பேசு ! விவாதமேடை ! இன்றைய விவாத மேடையின் தலைப்பு , இன்று காலை கடற்கரை அருகே ஒரு பாட்டி வடை சுட்டுகொண்டிருக்கும் போது  அடையாளம் தெரியாத ஒரு காக்கை அவர் சுட்டு கொண்டிருந்த வடையை சுட்டு  கொண்டு போய் விட்டது ! இதை பற்றி விவாதிக்க நமது அரங்கிற்கு வந்துள்ள  எதிர்கட்சியை சேர்ந்த திரு W,ஆளுங்கட்சியை சேர்ந்த திரு X , மற்றும் சமூக ஆர்வலர் திரு Y, மற்றும் ப்ளூ க்ராஸ்அமைப்பை சேர்ந்த Z  வந்திருக்கின்றனர். அவர்களுக்கு நிலையத்தின் சார்பில் வணக்கத்தை தெரிவித்து கொண்டு விவாதத்தை தொடங்கலாம் ! முதலில் எதிர்கட்சியை சேர்ந்த W ! சொல்லுங்க இந்த நிகழ்வ நீங்க எப்படி பார்க்குறீங்க !

W  :அதாவது இந்த நிகழ்வை பார்த்தோமேயானால் தமிழகத்தில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கின் நிலைமையை காண்பிக்கிறது ! அந்த பாட்டிக்கு உளுந்து மற்றும் அரிசி கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட இலவச  விநியோக திட்டத்தில்  கொடுக்கப்பட்டது ! அதன் மூலம் அவர் சுயமாக சம்பாத்தித்து வந்துள்ளார் . இன்று அதற்க்கு முட்டு கட்டை போடும் விதமாக திருடர்கள் நகரத்தில் பெருகி விட்டார்கள் என்பதை இது காட்டுகிறது.

நிருபர்: திரு X  இதற்கு உங்கள் பதில் என்ன ?

X  : நண்பர் W  சொன்னார் உளுந்து மற்றும் அரிசி அவர்கள் ஆட்சியில் கொடுத்தது என்று ! அதை மட்டும் கொடுத்துவிட்டால் தீர்ந்து  விடாது பிரச்சினை ! அவர்களுக்கு எங்களது ஆட்சியிலே தான் வடைக்கு மாவரைக்க இலவச கிரைண்டர் , மிக்ஸ்சி கொடுக்கப்பட்டுள்ளது என்று கூற கடமைபட்டுள்ளேன் .

நிருபர் : இல்லங்க சட்டம் ஒழுங்க பத்தி என்ன சொல்ல வரீங்க ?


X  : தற்போதய நிலவரப்படி அந்த காக்கையை பிடிக்க ஏழு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது ! மேலும் கலங்கரை விளக்கம் அருகே ஒருவர் அந்த காக்கையை பார்த்துள்ளார் ! அவர்  கொடுத்த அடையாளங்களுடன் கணினி உதவியோடு அதன் உருவத்தை வரைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அடுத்தபடியாக காக்கையின் கால் தடம் வடை வைத்திருந்த தட்டிலே உள்ளது . அதை தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள் . இதை எல்லாம் நான் எதற்கு சொல்கிறேன் என்றால் . இவ்வளவு நடவடிக்கை எடுத்தபின்பும் எதிர் கட்சியினர் குறை கூறுகிறார்கள் என்றால் , அது காழ்ப்புணர்ச்சியே அன்றி அந்த பாட்டியின்  மீது உள்ள  அனுதாபத்தில் அல்ல!


நிருபர் : நீங்க சொல்லுங்க சார்! மனித ஆர்வலராக நீங்க எப்படி பார்க்குறீங்க ?

Y : இது ஒரு தனி மனிதனுக்கு ஏற்ப்பட்ட வாழ்வாதார பிரச்சினயாகத்தான் பாக்கறேன் . ஏன்னா ? அந்த பாட்டி சுட்டது ஒரு வடை !அந்த வடையும் ஒரு காக்கா  தூக்கி கிட்டு போச்சுனா அந்த பாட்டி என்ன செய்வாங்க பாவம் ! இந்த ஜனநாயகத்திலே தொழில் செய்யும் உரிமையை அதன் சங்கை நெரிப்பது போல் உள்ளது!  இது முழுக்க முழுக்க மனித உரிமை மீறல் மட்டுமே ! ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இப்படி சண்டை போடுறத விட்டுட்டு அந்த பாட்டிக்கு தேவையான உதவிகள் செய்யணும் !

ஆளுங்கட்சி Y : உதவிகள் செய்யாம இல்லைங்க சார் ! இப்ப கூட அந்த அம்மாவுக்கு முதல்வர் நிவாரண நிதியில்  இருந்து 5000 கொடுக்கப்பட்டிருக்கு! சும்மா தெரியாம பேசக்கூடாது !

நிருபர்:  திரு .Z  இந்த சம்பவம் பத்தி நீங்க என்ன சொல்ல வரீங்க ?

 Z : இது கண்டிக்கப்பட வேண்டிய செய்தியே அல்ல ! அந்த காக்கை திருடியது சாதாரண வடை !
 
X : சாதாரண வடை என்று திருட்டை நியாயபடுத்தாதீர்கள் !அந்த காக்கை சட்டத்தின் முன் நிறுத்த படவேண்டும் !
 
Z :அப்படி என்றால் , உங்கள் ஆட்சியை சேர்ந்தவர்களும் , கடந்த ஆட்சியை சேர்ந்தவர்களையும் தான் சட்டத்தின் முன் நிறுத்தத் வேண்டும் !

நிருபர் : எப்படி சொல்றீங்க ?

Z : ஆமாங்க !திருடுவதற்கு காரணமானவர்கள்  யார் ? தற்போது ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற , கடந்த முறை ஆட்சி செய்த மத்திய மாநில அரசுகள் தான்!
 
நிருபர் : புரியவில்லை ? 

Z : இன்றைக்கு இருக்கின்ற விலைவாசி ஏற்றத்திலே  யாருமே காக்கைக்கு சோறு வைப்பதே இல்லை, அப்புறம் அந்த காக்கா  எங்க போய்  சாப்பிடும் சொல்லுங்க!  நான் மக்களை குறை சொல்ல வில்லை ! விலை வாசி ஏற்றத்துக்கு காரனமனவர்களைத்தான் குறை  சொல்கிறேன் ! அதனால இது முழுக்க முழுக்க ஆட்சி செய்து கொண்டிருக்கிற மற்றும் ஆண்ட  மத்திய மாநில  அரசுகளையே சாரும்! 

ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும்  இணைவோம் ! எதிர் பட பேசு !

--------------------------------------------------------------------------------  


 நண்பர்களே ! இடைவேளை  நிகழ்ச்சிக்கு மட்டும் இல்ல ! இந்த பதிவுக்கும் தான் !  அடுத்த பகுதிக்கு கொஞ்சம் காத்திருக்கவும் !

பிடித்திருந்தால் வாக்களித்து  கருத்துரைக்கவும் !

நன்றியுடன் !

இரா.மாடசாமி

 
Related Posts Plugin for WordPress, Blogger...

4 comments :

  1. நல்ல கற்பனை சக்தி. உளுந்து, எண்ணேய், அரிசி கொடுத்த ஆட்சியும், மிக்சி, கிரண்டர் கொடுத்த ஆட்சியும் அடிச்சுக்கிட்டது ச்ச்ச்ச்ச்ச்ச்சூப்பர். கிழி கிழி கிழின்னு கிழிச்சுட்டீங்க(நாங்களும் டிவி பார்க்குறோமுங்க).

    ReplyDelete
  2. என்ன சொல்ல நினைத்தீர்களோ, உரையாடல் மூலம் சொல்லி விட்டீர்கள்...

    இன்னும் இருக்கிறதா...? நல்லது.. சுவாரஸ்யம் தான்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  4. பாட்டி சுட்ட வடையில் நூல் வந்திடுச்சே ,சீக்கிரம் அடுத்த வடையைப் போடுங்க மாடசாமி !
    த ம 3

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger