Friday 3 August 2012

நான் ரசித்த தமிழ் சினிமா! ஒரு பார்வை!!-2

வணக்கம் நண்பர்களே,

                                               சென்ற இடுகையில் நான் எழுதிய   நான் ரசித்த தமிழ் சினிமா ! ஒரு பார்வை !!!!  அதிக வாசகர்களால் பார்க்கப்பட்ட இடுகையாக  என்னுடைய  VIEW STATUS காட்டியது. மேலும்  என்னுடைய இடுகைகளிலேயே அதிக பட்ச ஓட்டுக்கள் விழுந்ததும் இந்த இடுகைக்குதான். வாசித்த அனைத்து நண்பர்களுக்கும், ஓட்டுபோட்டு, பரிந்துரைத்த நண்பர்களுக்கும் மிக்க நன்றி. ஒரு பதிவர்  என்கிற முறையில்  மகிழ்ச்சியுடனும் , எனக்கு நீங்கள் அளித்த  அங்கீகாரமாகவும்  எடுத்துகொள்கிறேன்.

இந்த வரிசையில் அடுத்து நாம் பார்க்க போகும் படம் ரத்தக்கண்ணீர். 1954ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் திரு.M .R .இராதா , திரு S .S . இராஜேந்திரன் .திரு.சந்திரபாபு , திருமதி. M .N ராஜம்  போன்றவர்கள் நடித்திருப்பார்கள். இயக்கம் திரு. கிருஷ்ணன் & பஞ்சு, இசை-சிதம்பரம் திரு.ஜெயராமன் .கதை -திருவாரூர் திரு.தங்க ராசு.



கதையின் கரு:
                             பன்னாட்டு மோகம் கொண்ட ஒருவன் , தாயையும்  மனைவியையும்  மதிக்காமல் , தீய மற்றும் கூடாத சகவாசங்களால்  எவ்வாறு  சீரழிகிறான் என்பதுதான் படத்தில் oneline .


கதை சுருக்கம் :
மேல்நாட்டில் படித்து ஊர் திரும்பும் M .R .இராதாவிற்கு  அதே ஊரில் நாட்டியம் ஆடும் ஒரு நாட்டியக்கரியுடன் தொடர்பு.அடிக்கடி அங்கு போய்வருவது, குடிப்பது, கூத்தாடுவது என ஆனந்தமாக வாழ்கையை கழிக்கிறார். இந்த நேரத்தில் இவருடைய அம்மா இவருக்கு கல்யாணம் செய்வதற்கு இவரிடம் கேட்கிறார். இவரும் விருப்பமில்லாமல் மணக்கிறார்.இவருடைய ரசனையும் ,நடவடிக்கையும் கல்யாணம் பண்ணிய பெண்ணுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.ரசனைக்கு இணங்காத மனைவியை கொடுமை படுத்துகிறார். இதற்கிடையில் , மாமனாரை அவமானபடுத்துவது,நண்பனையும் மனைவியையும் சந்தேகப்படுவது,  தாயின் சாவுக்கு கூட போகாமல்  நாட்டியக்காரியின் வீடே கதி என கிடப்பது என பாவங்களை அரங்கேற்றுவார். சிறிது நாளில், இவருக்கு வரக்கூடாத வியாதி வந்து நாட்டியக்காரி இவரை வீட்டை விட்டு துரத்துகிறார். தெருவுக்கு வரும் M .R .இராதா.வியாதி முற்றி முகம் அகோரமாக மாறி, நடக்க கூட முடியாமல் போகிறது. இந்த நிலையில் தன்  பழைய நண்பனையும் மனைவியையும் சந்தித்து அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறார்.இறுதியாக தனது வாழ்க்கை அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும் என,  தான் இப்போது எந்த நிலையில் உள்ளேனோ அந்த  நிலையிலேயே ஒரு சிலையை வைக்குமாறு தன் நண்பனிடம் வேண்டுகோள் விடுத்து இறந்து போகிறார்.  


M .R .இராதா, என்ன ஒரு அற்புதமான ஒரு நடிகர். நடிக வேள் என்ற பட்டம்  அத்தனை பொருத்தம் இந்த கலை அரசனுக்கு. ஒரு மேல் நாட்டு மோகம் கொண்ட இளைஞன் எவ்வாறு நடந்து கொள்வான் என்பதை தத்ரூபமாக நடித்திருப்பார். அந்த நடை, உடை, பாவனை, ஸ்டைல் என அந்த காலத்திலேய பின்னி எடுத்திருப்பார்.எனக்கு தெரிந்த வரையில் தமிழ் சினிமாவின் ஸ்டைலுக்கு முன்னோடி என்றால் அது MRR  மட்டுமே. படத்தில் இவர் பேசும் நக்கல் பேச்சும் , பகுத்தறிவு வசனமும் ரசிக்க வைக்கும். நான் ரசித்த வசனங்கள் கீழே !

தன்  அம்மாவிடம்,

MRR: எத்தனைவாட்டி சொல்றது உனக்கு!மோகன்னு கூப்பிடாதே என்று!
அம்மா: பின்ன எப்படிப்பா கூப்பிடுறது ?
MRR: (இங்கிலீஷ்)துரைன்னு கூப்பிடு !

MRR:  புடவை எல்லாம் கட்டிக்கிட்டு என் முன்னாலே வராதே ?
கவுன் போட்டுக்கோ !  foreign  ல அப்படித்தான் போட்டுக்குறாங்க

MRR: " கண்ட கழுத பயலுகளா எல்லாம் உள்ள விட்டுகிட்டு !  பாரு அவன குரோட்டன் செடிய பிச்சு போட்டுக்கிட்டு . யார் அவன்?
அம்மா: அவங்கல்லாம் நம்ம சொந்தக்காரங்கப்பா!

மாமனார்: சாந்தி முஹுர்த்தம் கல்யாணத்தன்னிக்கு தான் வைக்கணும், தவறி போச்சுனா  குரு , சந்திரன்  எல்லாம் போய்டும்
MRR:  நோ! நோ ! எனக்கு நிறைய appointment இருக்கு ! அந்த குரு , சந்திரன்   இவங்க ரெண்டு பேரையும் நாளைக்கு வரசொல்லுங்க!
மாமனார்: மாப்ளே,அதெல்லாம் கிரகங்கள் மாப்ளே, 
MRR:  Oh ! Planets !ஓகே carry on ! 10 மணிக்கு  டான்னு ஆரம்பிக்கணும் !

இன்னொரு காட்சியில்
மாமனார்:  எனக்கு கேட்க உரிமை இருக்கிறது ! நான் உங்க மாமனார்!
MRR : எந்த நாரா  இருந்தாலும் எனக்கு கவலை இல்லை!போ வெளியே !


இன்னும் சில,

சாலையோர கல்லில் தடுக்கி விழும்போது, " அடப்பாவிகளா  ! ரோடு போட ஆறுமாசம் ஆவுது ! ஆனா கல்ல மட்டும் இன்னைக்கே கொட்டிவைக்கிறாங்க ! (அப்பவே நம்ம அரசியல் வாதிகளின் நிலைமையை குத்தி  காட்டியிருப்பார்)

SSR  : நாங்க ஜீவ காருண்ய கட்சியில இருக்கோம் ! உயிர்களை கொல்ல மாட்டோம் !
MRR : மூட்டை பூச்சி கடிச்சா என்னடா செய்வீங்க யப்பா  ?

அந்த காலத்திலேயே  பகுத்தறிவு, மறுமணம், பெண்ணாசையினால்  வரும்கேடு  என ஒரு சமுதாயத்திற்கு தேவையான் சமூக விழிப்புணர்வுள்ள   திரைப்படமாகவே இதை பார்க்கிறேன்.இது போன்ற படங்களை எல்லாம் இப்போது டிவி யில் போடுவதில்லை. இதன் Cd யை வாங்க நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்!நீங்களும் ஒரு முறை பாருங்கள் !
பதிவை படித்து விட்டு பிடித்திருந்தால் comment  போடவும் .

பட உதவி : Google images

நன்றியுடன்
இரா.மாடசாமி

Related Posts Plugin for WordPress, Blogger...

1 comments :

  1. படம் வெளிவந்த ஆண்டு இன்னும் எனக்கு ஆச்சிரியம். அப்ப ராதா பேசுன வசனங்கள் இன்னைக்கு தான் சூட் ஆகும். அல்டிமேட் படம் பாஸ்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger