Monday, 27 August 2012

வரலாற்றில் இடம் பிடித்த தமிழ் பதிவர் சந்திப்பு!

வணக்கம் நண்பர்களே ,
                               பதிவர் மாநாடு   
 
பதிவர் சந்திப்பு பற்றிய சில  குறிப்புகளை எடுத்துக்கொண்டு  காலையில்  கிளம்பிகொண்டுருக்கையில்  என் மனைவி " எங்கே போறீங்க?" என கேட்டார். இணைய  எழுத்தாளர்கள்  சந்திப்பிற்கு  என்றேன். சரிங்க ! நீங்க ஏன் போறீங்க? அதுக்கு எழுத்தாளர்கள் தானே போகணும்  என்றார் . இந்த அவமானம் தேவயா ? என வடிவேல் போல மனதுக்குள் கேட்டுக்கொண்டு , பின்  சுதாரித்து கொண்டு  இதுதான் சந்தர்ப்பம் என்று கல்யாண பரிசு தங்கவேல் மாதிரி  பீலாவிட்டேன் ! (உங்களுக்கு  அந்த படத்தில் வரும் வைரவன் எழுத்தாளர்  ஜோக்  நினைவில் இருக்கும் என நினைக்கிறேன் )நான் பெரிய எழுத்தாளன் போலவும்,பிரபல எழுத்தாளர்கள் எனக்கு நண்பர்கள் எனவும் இஷ்ட்டத்துக்கு அள்ளி விட்டேன் !  உடனேயே  நானும் வருகிறேன் என அடம் பிடித்தார் ! அதற்கு அனுமதி கிடையாது என்றும்  அங்கு எழுத்தாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறி  சமாளித்து  பேருந்து நிலையம் வந்தேன். ஞாயிற்று கிழமை  என்பதால் கூட்டம் அதிகம் இல்லை !  மண்டபம் வந்தடைந்தேன் !  நிறைய பேர் வந்திருந்தாலும் புதிய பதிவரான எனக்கு பரிச்சயம் இல்லா முகங்களாகவே இருந்தது!  

சிறிது நேரம் கழித்து , வீடு  திரும்பல் திரு.மோகன் குமாரிடம்  நானாகவே அறிமுகம் செய்து கொண்து இருக்கையில் அமர்ந்தேன். மூத்த பதிவர்களை சந்தித்தது மனதிற்கு  மகிழ்ச்சியாக இருந்தது ! பெண் பதிவர்கள் வந்தது  விழாவிற்கு கூடுதல் பலம் ! பின் விழா தொடங்கி அனைவரும் சுய அறிமுகம் செய்து கொண்டனர் ! நானும் தான் ! மதியம் வரை தனிமையிலே இருந்தேன்!  மதிய உணவு இடைவெளிக்கு  பின் சில  நண்பர்கள்  அறிமுகமானார்கள் ஒருவர்  வேல்வெற்றி    இன்னொருவர்  ஈகைவேந்தன்   சமூகத்தின் மீதும் தமிழ் மீதும்  மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என அவர்கள் பேசும் பேச்சிலேயே தெரிந்தது.  திரு.பட்டுக்கோட்டை பிரபாகர்  வந்து மூத்த பதிவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தது நெகிழ செய்தது .  பின் கவிதை வெளியீட்டு விழாவும்  நடைபெற்றது. விழாவிற்கு புதிய தலைமுறை செய்தி பிரிவிலிருந்து வந்தது புருவத்தை மேலே உயர்த்தியது!மண்டபம் முழுவதும்  கேமராக்களின் மின்னல் ஒளி  மின்னி கொண்டிருந்தது!எனக்கு புகைப்படம்  எடுக்கும்  எண்ணம்  இல்லாததால் கம் மென்று இருந்து விட்டேன்!பின்னர், வீட்டிலிருந்து அவசர அழைப்பு வர, கிளம்பி விட்டேன். வழி நெடுகிலும்  ஒரே சிந்தனை! அது என்னவென்றால், கோவில் படத்தில் வரும் வடிவேல் போல காசியப்பன் பாத்திரகடைக்கு சென்று ஒரு பரிசும் , பின்னர் ஒரு  சின்ன  மாலையும்  வாங்கி செல்ல வேண்டும் மனைவியை ஏமாற்ற! 


  இந்த நாள் வரலாற்றில் இடம் பெரும் நாளாக  போவது வீட்டிற்கு வந்த பின்தான் தெரிந்தது. ஆம் ! நமது இந்திய இளைஞர் கிரிக்கெட் அணியினர் உலக  கோப்பையை  வென்று  உற்சாகமளித்தனர். இப்போது   உங்களுக்கு புரிந்திருக்கும் தலைப்பின் பொருள் ! 

இந்த பதிவு மொக்கையாக இருந்தாலும்  மன நிறைவுக்காக எழுதியது! நன்றியுடன் ,

இரா.மாடசாமி. 

  Related Posts Plugin for WordPress, Blogger...

16 comments :

 1. தங்கள் சுய அறிமுகத்தை வீடியோவில் பார்த்தேன் நண்பரே! மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. முன்னணி வலைபதிவரான நீங்கள், என்னுடைய தளத்திற்கு வந்து கருத்தளித்ததற்கு மிக்க நன்றி ! தொடர்ந்து தளத்திற்கு வருகை தந்து என்னை போன்ற புதிய பதிவருக்கு ஊக்கமளிக்கவும் !

   Delete
 2. ஹா ஹா முதல் பகுதி எல்லா வீட்டிலும் நடக்கிறது தான். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸில் நடக்கும் பதிவர் (குட்டி சந்திப்புகளுக்கு) வர முயலுங்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய அழைப்புக்கு மிக்க நன்றி ! கண்டிப்பாக வருகிறேன் ! பதிவிற்கு கருத்து தெரிவித்தமைக்காக கூடுதல் நன்றி!அடிக்கடி தளத்திற்கு வருகை தரவும் !

   Delete
 3. பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

  மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

  http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் இந்த சந்திப்பு புதிய அனுபவத்தை கொடுத்தது ! தளத்திற்கு வந்து கருத்தளித்த உங்களுக்கு நன்றி நண்பரே!

   Delete
 4. பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே !தொடர்ந்து தளத்திற்கு வருகை தரவும் !

   Delete
 5. இந்த நாள் வரலாற்றில் இடம் பெரும் நாளாக போவது வீட்டிற்கு வந்த பின்தான் தெரிந்தது

  வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. சகோதரி ! கருத்தளித்ததிர்க்கு மிக்க நன்றி ! தளத்திற்கு தொடர்ந்து வருகை தரவும் !

   Delete
 6. இனிய சந்திப்பு
  பதிவர் விழாவில்

  தங்கள் தளத்தில்
  எனது தளத்தை
  அறிமுகபடுத்தியதற்கு

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. நண்பரே ! தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ! தங்களின் தளம் எனது தளத்தில் அறிமுகப்படுத்துவதில் எனக்கும் மகிழ்ச்சியே ! தளத்திற்கு தொடர்ந்து வருகை தரவும் !

   Delete
 7. பதிவு அருமை... சந்திப்பில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காது போனாலும் உங்கே சந்தித்தது மகிழ்ச்சி

  ReplyDelete
 8. @சீனு,
  நண்பரே ! நான் உங்களை சந்தித்து பேசியிருக்கிறேன் ! விழா ஏற்பாட்டில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தீர்கள் ! விழாவின் வெற்றியில் உங்களுக்கும் பங்குண்டு !

  ReplyDelete
 9. பதிவர் விழாவிற்கு நானும் வந்திருந்தேன். நிறையப்பேர்களுடன் பேச முடியவில்லை.
  உங்கள் தளத்திற்கு மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். உங்களின் இந்தப் பதிவு எனக்கு பதிவர் விழாவின் நினைவுகளை மறுபடி நினைவூட்டியது.

  பாராட்டுகள், வாழ்த்துகள்!

  எனது வலைத்தளம்: ranjaninarayanan.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்மா !தங்களை போன்ற மூத்த பதிவர் எனது தளத்திற்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது ! தொடர்ந்து தளத்திற்கு வருகை தந்து என்னை போன்ற புதிய பதிவினருக்கு ஆலோசனைகளை வழங்கி தளத்தினை சிறப்பிக்க வேண்டுகிறேன் ! நன்றி !

   Delete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger