Thursday 25 October 2012

ஆரோக்கிய பழக்கங்கள் தொடர்பதிவு -2

வணக்கம் நண்பர்களே !
                                                  ஆரோக்கிய பழக்கங்கள் தொடர்பதிவு  அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும் என நினைக்கிறேன் . இந்த பதிவில் அதையே தொடர்கிறேன் .

ஆரோக்கிய பழக்கங்கள் தொடர்பதிவு-1 படிக்க இங்கே கிளிக் செய்யவும் .




1.உணவு உட்கொண்டபிறகு நடக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்:

 உணவு உட்கொண்டபிறகு ,உண்ட உணவை ஜீரணிப்பதற்க்கு  உடலுக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது .நாம் நடக்கும்போதோ அல்லது உடலை பயன்படுத்தி வேறு கடுமையான வேலை செய்யும்போதோ ஜீரணிப்பதற்கு தேவையான சக்தி வேறு வழியில் செலுத்தப்படுகிறது .இதனால் ஜீரணம் தாமதமாக அரைகுறையாக நடக்கிறது . 


2.காரத்தன்மையுள்ள (Alkaline )உணவு உண்ணுங்கள் 

 நோயற்ற வாழ்க்கை வாழ எப்போதும் நாம் நமது உடலை காரத்தன்மை  என்ற நிலையில் வைத்திருக்க வேண்டும் .நமது உடல்நிலை அமிலத்தன்மை
 (Acidic ) ஆக இருக்கும்போது அது நோய்கள்  வர ஏதுவாகிறது . ரத்தத்தின் அசிடிக் நிலையில் சிவப்பு ரத்த அணுக்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்கின்றன  இதன்மூலம்  குறைவான ஆக்ஸிஜன் உயிரணுக்களுக்கு எடுத்து செல்கின்றது. ரத்தத்தின் ஆல்கலைன் நிலையில் ரத்த சிவப்பணுக்கள் தடையின்றி மிதக்கின்றன .இப்போது அதிக ஆக்ஸிஜன் உயிரணுக்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. ஆதலால் உங்கள் உடலை அதிக ஆல்கலைன் நிலையில் இருக்கும்படி உங்கள் உணவை தேர்ந்தெடுங்கள் .

3.நடைபயிற்சி செய்யும்போது கைகளை வீசி நடந்து செல்லுங்கள் .

 

கைகளின் அசைவு உங்கள் மூளையை இயக்குகிறது . இதனால் மூளை கவனமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது . சிறு குழந்தைகள் இரண்டு கைகளாலும் ,கால்களாலும்  தவழ்ந்து  செல்வதை பார்த்திருப்பீர்கள் .இது இயற்க்கை உருவாக்கியது . நீங்களும் இயற்கையின் ஆரோக்கியத்தை பின்பற்றி வாழுங்கள் . 

4.உணவு உட்கொள்வதற்கு முன்பும் பின்பும் உங்கள் வாய் , பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தமாக்குங்கள்.

நம்முடைய வாய் கேடுவிளைவிக்கும் பல கிருமிகளை கொண்டுள்ளது . இந்தக்கிருமிகள் வயிற்றுக்குள்   குடலின் உள்ளும் ,இரத்தத்தின்  உள்ளும் போய் சேர்ந்து உயிருக்கு ஆபத்தான பல நோய்களை உருவாக்குகின்றன . உங்கள் வாயையும் பற்களையும் சுத்தமாக்க சிறந்த முறை மற்றும் உங்கள் ஈறுகளை உறுதியாக்க நல்ல வழி உங்கள் விரல்களை பயன்படுத்தி ஈறுகளை மசாஜ் செய்தல் . கெடுதல் தரும் பற்பசைகளை புறக்கணியுங்கள் . அவை கால்சியம்  ப்ளோரைடு போன்ற ரசாயன பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளன .பற்பசையை உபயோகிப்பதற்கு முன்பாக அதில் எழுதி இருக்கும் மூலக்கூறுகளை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் . 


5.ஆழமான வயிற்றுப்பகுதி சுவாசத்தை பின்பற்றுங்கள் 

நாம் நம்முடைய நுரையீரல் சக்தியில் 25% கூட உபயோகிப்பதில்லை . மேலெழுந்தவாரியான ஆழமற்ற சுவாசத்திற்கு நம்மை நாமே பழக்கிவிட்டோம் .இது ஆரோக்கியமற்ற பழக்கம் . ஆரோக்கிய சுவாசத்தை மேற்கொள்ளுங்கள் . இதில் மூச்சை உள்ளே இழுக்கும்போது உங்கள் வயிறு முன் தள்ளும்படியாக  உங்கள் நெஞ்சு பகுதியில் அதிக வெற்றிடம் வந்து உங்கள் நுரையீரல் முழுமையாக விரிவடையும் விகிதத்தில் அதன் மூலம் நம் உடலின் ஒவ்வொரு உயிரணுவுக்கும் தேவையான பிராணவாயு  கிடைக்கும் . அதுபோலவே நாம் சுவாசத்தை வெளியேற்றும்போது நம் வயிறு உள்நோக்கி போகும்படியாக அதன் மூலம் பயன்படுத்தப்பட்ட கரியமில வாயுவை முற்றிலும் வெளியேற்றும் விதத்தில் நுரையீரலை சுருக்கி ஆரோக்கிய சுவாசத்தை பயிற்சி செய்ய வேண்டும் . ஒரு ஆரோக்கிய சுவாசத்தை நடைமுறைபடுத்த முயற்சி செய்யுங்கள் .

 நன்றி : 
தகவல் உதவி : World Wellness Organization  Email:mail @ wwo.me
படங்கள் உதவி : Google images


அடுத்த பதிவில் தவிர்க்கப்படவேண்டிய நோய் தன்மையுடைய 10 உணவுகள்   
 ---------------------------------- தொடரும் ---------------------------------------------------------------



நன்றியுடன்
இரா.மாடசாமி



Related Posts Plugin for WordPress, Blogger...

2 comments :

  1. மிக மிக நல்ல தகவல்கள்... என் ஸ்கோர் : 4/5

    மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் முதலில் கருத்தளிக்கும் உங்களுக்கு எனது பணிவான நன்றிகள் !

      Delete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger