Wednesday, 7 November 2012

தவிர்க்கப்படவேண்டிய நோய்த்தன்மை உடைய 10 உணவுகள் -பகுதி -2

 வணக்கம் நண்பர்களே !
                                                  தவிர்க்கப்படவேண்டிய நோய்த்தன்மை  உடைய 10 உணவுகளில் , சென்ற பதிவில் ஐந்தை பார்த்தோம் . இந்த பதிவில் மீதி ஐந்தை பார்ப்போம் .
தவிர்க்கப்படவேண்டிய நோய்த்தன்மை உடைய 10 உணவுகள் -பகுதி -1படிக்க தலைப்பில் கிளிக் செய்யவும் .

ஆறாவது ஆரோக்கியமற்ற உணவு : சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்


                                               Hydrogenation  என்ற முறையின்  மூலம் பல முக்கியமான உயிர்ச்சத்துக்கள் நீக்கப்படுகின்றன .இது மொத்த கொலஸ்ட்ரால் வரம்புகளை அதிகமாக்குகிறது . HDL கொலஸ்ட்ராலை  குறைக்கிறது . LDL கொலஸ்ட்ராலை உயர்த்துகிறது.இந்த எண்ணெய்களை உட்கொள்ளுவதால் Breast ,Pastorate and coloncancers இந்த வகையான புற்று நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் அதிகமாகிறது.Toxins and carcinogens என்ற கேடுகளை தவிர்க்ககூடிய உடலின் உள்ளார்ந்த சக்தியை இது குறைக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இது உடலில் சுரக்கும் சில திரவங்களிடம் குறுக்கிடுகிறது.


ஏழாவது ஆரோக்கியமற்ற உணவு: குளிர்பானங்கள்


வாயு கலந்த குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் கார்பன் -டை -ஆக்சைடு மிகவும் ஆபத்தானது . இதன் காரணமாக குளிர்பானங்கள் அசிடிக் ஆகின்றன . இது நமது உடலில் உள்ள நமக்கு பயன் தரக்கூடிய நுண்ணுயிர்களை பெரும்பான்மையான உயிரிகளை கொன்றுவிடும் அளவுக்கு அசிடிக் குணம் உடையதாகிறது. குளிர்பானங்களை குடிப்பது ஜீரண வழிமுறைகளை தாமதமாக்குகிறது . குளிர்பானங்களில் அதிகமான சர்க்கரை அளவு மிக அதிகமான கலோரி உள்வாங்குவதால்  பற்சிதைவு ,அதிகமான உடல் எடை என்ற சங்கடங்களையும் கஷ்டங்களையும் ஏற்படுத்துகிறது. இரத்தத்தில் கலந்துள்ள பாஸ்பரஸ் மூலத்தன்மையை நீக்குவதற்கு (இது குளிர்பானத்தில் கலக்கபடுகிறது) எலும்புகளில் இருந்து கால்சியத்தை அப்போபடுத்தி பின்னர் இரத்த ஓட்டத்துடன் கலக்க செய்து osteoporosis என்ற ஒரு நோயை உருவாக்குகிறது. குளிர்பானங்களில் உள்ள carbolic Acid எலும்புகளை சிதைப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.


எட்டாவது ஆரோக்கியமற்ற உணவு காபி மற்றும் தேனீர்இது பலருக்கும் தவிர்க்கமுடியாத பழக்கம் . மிக ஆபத்தான பொருட்களின்  கூட்டு சிக்கலான கூட்டுசேர்க்கையான நியாசின் ,cafin ,டிரைகொநெல்லின் ,டேனிக்  அமிலம் என்ற பல பொருட்களின் மொத்த வடிவம் .kafin  நமது உடலில் உள்ள மொத்த நரம்பு  தூண்டிவிட்டு சுறுசுறுப்பாக்குகிறது .அதிக சக்தி என்ற ஒரு கற்பனை தோற்றத்தை உருவாக்குகிறது. இதன் அடுத்தகட்டமாக நமது பசியுணர்வை கட்டுப்படுத்துகிறது .

உண்மையில் ,உடல் 24 மனித்துளிகளுக்கும் மேலாக ஒரு கப் காபியின் விளைவுகளைப் போக்குவதற்கு எடுத்துக்கொள்கிறது. காபியின் நீண்ட நாள் விளைவுகள் என்னவென்றால் அடிக்கடி தலைவலி ,ஆங்காங்கே சிவப்பான தோல் திரட்டு ,இதயத்தின் வேகத்துடிப்பு , மலச்சிக்கல் , அதிக தளர்ச்சி , மனநிலையில் ஏற்ற தாழ்வுகள் , மனதை ஒருமுகபடுத்த முடியாமை போன்ற பல விளைவுகளே .

இந்த பானங்கள் உடலின் ஈரப்பசையை நீர்த்தன்மையை நீக்குகின்றது . மேலும் நமது தூக்கத்தை கட்டுபடுத்துகிறது .

ஒன்பதாவது ஆரோக்கியமற்ற உணவு: ஐஸ் கிரீம் 
 செயற்கையான மணங்களும் ,சுவைகளும் மிகவும் பலம் வாய்ந்த சீர்கேடு உணவுகள் .இதன்மூலம் கல்லீரல் , சிறுநீரகம் ,மேலும் இதயம் இவற்றில் நோய்கள் உருவாக வாய்ப்புண்டு . இதில் பயன்படுத்தப்படும் பெப்ரோணல் என்ற மணமூட்டும் ஒரு பொருள் பேன்களை கொல்ல  பயன்படும் ஒரு வேதியல் சாதனம் . அன்னாசிப்பழ ஐஸ் கிரீமில் உபயோகிக்கப்படும் எதில் அசிட்டேட் (Ethyl acetate ) தோல் சம்பந்தமான தொழிலிலும் ,துணி ஆலைத் தொழிலிலும் பயன்படுத்தப்படும் ஒரு வேதியல் பொருள் .இது அந்த தொழில்களில் சுத்திகரிப்புக்கு பயன்படுகிறது . அதிலிருந்து வரும் ஆவிக்காற்று ,தீவிரமான நுரையீரல் , கல்லீரல் இதய பாதிப்புகளை உருவாக்கும் . வாழைப்பழ மணத்திற்காக பயன்படும் amyl butyrate  ஆயில் பெயின்ட் சால்வன்ட்டாக (oil paint solvent ) உபயோகப்படுகிறது. aldehydec 17 செர்ரி flavour ஐஸ் கிரீமில் உபயோக்கிக்கபடுகிறது .இது எளிதில் எரியக்கூடிய ஒரு திரவம் .Plastic மற்றும் ருபபேர் தயாரிப்பு தொழிலில் aniline dyes ஆகப்பயன்படுகிறது 

பத்தாவது ஆரோக்கியமற்ற உணவு : மாமிச உணவு 


புரதச்சத்து அதிக அளவில் இருப்பதால் அசைவ உணவு சிறுநீரகங்களை அதிக வேளையில் ஆழ்த்துகிறது .இதனால் உடல் உறுப்புகளில் இயக்கத்திரன் குறைகிறது. இது ஆரோக்கியத்தை உருக்குலைக்கும் கோளாறுகளை நம் உடலில் ஏற்ப்படுத்தும் .அசைவ உணவுகள் அதில் உள்ள கொழுப்பு சக்தியால் கலோரிகளை அதிகப்படுத்துகின்றன .இது உடல் பருமன் ,நீரிழிவு ,உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய கேடுகலுக்கு வழிவகுக்கிறது . ஏல்லா மிருகங்களின் திசுக்களும் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளன .மாமிச உணவை உட்கொள்ளும்போது ,உடல் அமைப்பில் உள்ள விஷத்தன்மையின் எல்லைகள் வரம்பு மீறுகின்றன .அசைவ உணவில் நார்த்தன்மை (Fiber content ) குறைவாக உள்ளதால் குடல் பகுதியில்  உணவின்
இயக்கம் குறைந்து colon புற்று நோய்க்கு காரணமாகிறது .அதாவது குடல் வாயிலிருந்து    மலக்குடல் வரை உள்ள பெருங்குடலின் பகுதியில் புற்று நோயின் பாதிப்பு  வரக்கூடும் . அசைவ  உணவின் விளைவான அதிக அளவு யூரிக் அமிலம் (Uric Acid ) பல நோய்களை  வாதரோகம் ,பிளைட் நோய் (blights disease ) சிறுநீரகக் கற்கள் , கீழ்  வாதம்( முழங்காலில் வீக்கம் ) பித்தப்பை கற்கள் போன்ற பல உடல் நலக் கேடுகளை உருவாக்கும் .

  ---------------------------------------------------------------------------------------------------------------

நண்பர்களே!  மேலே கூறிய கருத்துக்கள் அனைத்தும் எனது  சொந்த கருத்துக்கள் அல்ல . World Wellness  Organanization என்ற விழிப்புணர்வு இயக்கம்  மூலமாக வெளிவந்துள்ள  ஒரு புத்தகத்தில் உள்ளவை. மாற்று கருத்துக்களை தெரிவிக்க விரும்புவோர் மற்றும் மேலும் விபரங்களை பெற விரும்புவோர்   கீழே உள்ள முகவரிக்கு  மின்னஞ்சல் அனுப்பலாம் .  

உலக ஆரோக்கிய அமைப்பு 
27, ராஜீவ் காந்தி காந்தி சாலை ,சென்னை -600096
Email:mail@wwo.me


நன்றியுடன்
இரா.மாடசாமிRelated Posts Plugin for WordPress, Blogger...

16 comments :

 1. அருமையான பதிவு, இந்தக் கருத்துக்கள் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தெரிந்திருக்க வேண்டிய, வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய கருத்துகளாகும்.

  கிரிக்கெட் ஆட்டக்காரனுங்க சினிமாவில் ஆட்டம் போடும் கூத்தாடிகள் குளிர் பானங்களை பணத்துக்காக விளம்பரப் படுத்துவது துரதிர்ஷ்டமாகும். அவனுங்கள் நம்பி மக்கள் செம்மறியாட்டுக் கூட்டமாய் இருப்பது வெட்கக் கேடு.

  முக்கியமாக ரிஃபைனுடு [Refined Oil] எவ்வளவு கேடு விளைவிக்கக் கூடியது என்று தெரிந்திருந்தும் அதை தடுக்க நமது அரசு, மற்ற சமூக அமைப்புகளோ குரல் கொடுக்காதது நாம் செய்த பாவம் தான். எல்லோரும் நம்பி ஏமாறுகிறார்கள். ஏன் புற்று நோய் இந்த அளவுக்கு புழுத்துப் போய்விட்டத் உஎன்ற ரகசியம் பலருக்கும் புரிவதில்லை.

  நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே...........

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே !

   Delete
 2. //பெப்ரோணல் என்ற மணமூட்டும் ஒரு பொருள் பெண்களை கொள்ள பயன்படும் ஒரு வேதியல் சாதனம் //

  என்ன? சொல்ல முயல்கிறீர்கள் புரியவில்லையே!

  ReplyDelete
  Replies
  1. எழுத்து பிழைக்கு மன்னிக்கவும் ! அது பெண்களை கொள்ள அல்ல ! பேன்களை கொல்ல! கருத்துக்கும் சுட்டிக்கட்டியமைக்கும் மிக்க நன்றி !

   Delete
 3. இன்று இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்தல் என்பது, எவராலும் இலகுவில் முடியாது. காட்டில் வாழ்ந்தாலும் தவிர்க்கமுடியுமோ தெரியாது.
  அதனால் இயன்ற அளவு குறைத்து, வாழ்வதே! மேல். எதைப் பார்த்தாலும் இதனால் பாதிப்பு வந்து விடுமோ எனும் பயமே ஒரு வியாதியாகி நம்மைக் கொன்று விடும்.

  ReplyDelete
  Replies
  1. மைதா மாவு, அதனால் தயாரிக்கப் படும் உணவுகள், ஐஸ் கிரீம், கோலாக்கள், வெள்ளைச் சர்க்காரை, ரிபைனுடு எண்ணைகள் நிச்சயம் தவிர்க்கக் கூடிய உணவுகளே.

   Delete
  2. சரியாக சொன்னீர்கள் ! மைதா மாவு எனக்கு நிறைய இன்னல்களை கொடுத்திருக்கிறது ! அதனால் நான் அதனிடமிருந்து ஒதுங்கியே இருக்கிறேன் !

   Delete
 4. உடல் நலனில் அக்கறை காட்டும் நல்ல பகிர்வு. பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி நன்றி நண்பரே !

   Delete
 5. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...

  நன்றி...
  tm3

  பகிர்கிறேன்...

  ReplyDelete
 6. பட்டியலை பார்த்தா எதை சாப்பிடறது எதை விடறதுன்னு ஒரே குழப்பம்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே ! எனக்கும் தான் ! மைதா மாவு மட்டும் சிறு வயதிலிருந்தே விட்டு விட்டேன் !

   Delete
 7. திட்டம் போட்டு இயற்கையான உணவுகளை முடிந்தவரை உண்டுவாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆலோசனைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

   Delete
 8. நன்றி நண்பரே....

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger