Wednesday 10 July 2013

நாட்டாமை ! தீர்ப்பை மாத்தி சொல்லு !லொள்ளு சபா!!

வணக்கம் நண்பர்களே!
                                                 விஜய் டிவியில எல்லாரும் லொள்ளு சபா
பார்த்திருப்பீங்க! அது  மாதிரி நானும் ஒரு script  ரெடி பண்ணியிருக்கேன்! என்ன படம் எழுதலாம்னு   யோசிச்சப்போ நம்ம சரத்குமார் நடிச்சு  கே.எஸ் ரவிக்குமார் இயக்குன  நாட்டாமை படம்தான் ஞாபகம் வந்துச்சு!அதுல இருந்து ஒரே ஒரு சீன் மட்டும் என் கற்பனைக்கு எட்டிய வரைக்கும் மாத்தி எழுதியிருக்கேன் !படிச்சு ரசிங்க!!



இந்த கதையும் ,வசனங்களும் முழுக்க முழுக்க  நகைச்சுவைக்காக மட்டுமே  எழுதப்பட்டுள்ளது . படத்தின் ரசிகர்கள்  மற்றும் நடிகரின்  ரசிகர்கள் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் !


முதல்ல டைட்டில் சாங் !


நாட்டமை பாதம் பட்டா !(வெளங்கிரும்)

நேரத்த வீணாக்காம நேரா  விஜயகுமார் தீர்ப்பு சொல்ற சீனுக்கு போயிருவோம் !


வி.குமார்: என்றா இன்னைக்கு பஞ்சாயத்து !

பாண்டு  : அய்யா உங்க தங்கச்சி பையன் ...... என இழுக்கிறார்.

வி.குமார்: யார்ரா ! 'பிரா' கொடுத்தது !

பாண்டு : அய்யா 'து' வ விட்டுடீங்க !

உடனே  பக்கத்தில இருந்த எச்சி துப்புர கிண்ணத்துல "து  "அப்படின்னு வெத்தலைய துப்பிட்டு ,

 வி.குமார்: இப்ப சரியா போச்சுல்ல !

பாண்டு : சரிதானுங்க !  பஞ்சாயத்த ஆரம்பிக்கலாம் !


ஒரு வயசான பெரியவர் அழுதுகொண்டே வருகிறார் !

வி.குமார்:  ஏன்டா ஊலு ஊலுனு அழுவுற ! விசயத்த சொல்லுறா !

வயசான பெரியவர்:அய்யா உங்க தங்கச்சி பையனோட நாயி ! எங்க பொண்ணோட நாய ! அப்படீன்னு சொல்லி அழுவுறார் !

வி.குமார்: யே அழுவாத! நேர்ல பாத்த சாட்சி யாராச்சும் இருக்காங்களா ?

ஒருவர்:  அய்யா நான் பாத்தேனுங்க !

வி.குமார்:என்றா பாத்த!

 ஒருவர்:அந்த நாயி இவர் நாய கூட்டிகிட்டு போச்சுங்க !

 வி.குமார்:  அந்த நாயிக்கு நீ என்ன உறவு ?

 ஒருவர்: நாந்தாங்க அந்த நாயிக்கு பிஸ்கட் போடுவேன் !

 வி.குமார்: ஆங் ! செல்லாது ! செல்லாது !

 மற்றொருவர்: அய்யா நான் பாத்தேனுங்க !

வி.குமார்:என்றா பாத்த!


ஒருவர்:அந்த நாயி இவர் நாய தள்ளிகிட்டு  போச்சுங்க !

 வி.குமார்: அந்த நாயிக்கு நீ என்ன உறவு ?

 ஒருவர்: நாந்தாங்க அதுக்கு Bun  போடுவேன் 

 வி.குமார்: ஆங் ! செல்லாது ! செல்லாது !

 சிறுவன் : தாத்தா ! நான் பாத்தேன் !

 வி.குமார்:என்றா கண்ணு பாத்த!

 சிறுவன் : இந்த மாமாவோட நாயி ! இந்த அக்காவோட நாயை கூட்டிக்கிட்டு ஒரு ரூமுக்குள்ள போச்சா ! அந்த அக்காவோட நாயி! லொள் லொள்னு ரொம்ப நேரம் குரச்சுகிட்டே இருந்துச்சு ! அப்புறம் ..ஒரு மாதிரி ..முனகிகிட்டே வெளிய வந்துச்சு ....

வி.குமார்: நிறுத்து கண்ணு ! இதல்லாம் பாக்குறியே ஸ்கூல்க்கு எல்லாம் போறதில்லையா கண்ணு !

 சிறுவன் :இது எல்லாம் நடந்ததே எங்க ஸ்கூல் பக்கத்துலதான் !

 வி.குமார்: (ஆவேசமாக ) ஏண்டா நாயே ! நாயை வளர்த்தா மட்டும் போதாது ! அதை கண்டபடி ஊர்மேயாம பாத்துக்கோணும் ! இனிமே இந்த நாயிக்கு உன் நாயிதான் துணை ! இதுதான் என் தீர்ப்பு !


வி.குமார் மச்சான் : பெரிய இடத்து நாயிங்க, தெரு நாய்களோட அப்படி இப்படி இருக்கிறது சகஜம் தானய்யா !நாட்டாமை ! தீர்ப்பை மாத்தி சொல்லு !


வி.குமார்: இனிமே இந்த நாயிக்கு உன் நாயிதான் துணை !அதை கண்டபடி ஊர்மேயாம பாத்துக்கோணும் ! நாயை வளர்த்தா மட்டும் போதாது !
ஏண்டா நாயே ! சொல்லிட்டேன்!!!!


வி.குமார் மச்சான் : மாத்தி சொல்ல சொன்னா ! திருப்பி சொல்றியா ! நீ எல்லாம் என்னய்யா  நாட்டமை ! உன்னை!! என கோபத்தோடு ,  உண்டிகோலை எடுத்து குறி பார்த்து அடிக்கிறார் !

வி.குமார்:  ஆஆஆ !( என நெஞ்சை பிடித்தபடியே )இனிமே இவன் வீட்டு  நாயிகூட எந்த நாயும் பழககூடாது !அந்த நாய ஊற விட்டு ஒதுக்கி வைக்கிறேன்! அது கூட ஆறும் அண்ணன் தம்பி பழங்க கூடாது !

பாண்டு : அய்யா அண்ணன் தம்பி இல்லைங்க ! அன்னம் தண்ணி ! மாத்தி சொல்லிட்டீங்க !


வி.குமார்: ஆங்! அன்னம் தண்ணி!அப்புறம் அவன் நாயிக்கு பொறை ,பண்ணு , பிஸ்கட்டு , எதுவும் குடுக்க கூடாது ! அப்படி கொடுத்தா அவங்க நாயையும் ஊறவிட்டு ஒதுக்கி வைக்கணும் ! இதுதான் இந்த நாட்டமையோட கடைசி தீர்ப்பு !



அப்படியே BGM வாசிச்சு அந்த சீன் முடியுது !


ஹலோ ! அவ்வளவுதாங்க ! படம் முடிஞ்சுது ! முழு படத்தையும் போட முடியாது ! நல்லா  இருந்தா கருத்து போடுங்க !



நன்றியுடன்
இரா.மாடசாமி






Related Posts Plugin for WordPress, Blogger...

3 comments :

  1. என்னுடைய இந்த இடுகையை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை ! வருந்துகிறேன் !

    ReplyDelete
  2. என்னால் இணைக்க முடிகிறதே... த.ம.2

    ReplyDelete
  3. நல்ல ஸ்பூப். லொள்ளு சபா படிச்ச மாதிரி இருந்தது. பதிவு திரைமணத்தில் இணைத்து விட்டது. அதன் முலம் தான் நான் இங்க வந்தேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger