Wednesday, 1 August 2012

அறநெறிகளை பின்பற்றுகிறதா பள்ளிக்கூடங்கள்?

வணக்கம் நண்பர்களே,


இந்த வார பதிவு எழுதும் முன், அண்மையில்  பள்ளி வாகனத்தில் இருந்து , கீழே விழுந்து இறந்த குழந்தையின்ஆன்மா சாந்தி பெற வேண்டியும் அந்த  பெற்றோற்க்கு ஆழ்ந்த இரங்கலையும்  தெரிவித்து கொள்கிறேன்.




 நமது  முன்னோர்கள், நாம் நன்றாக கல்வி கற்கிறோமோ  இலையோ, நல்ல பண்புகளை கற்றிருக்க வேண்டும் என விரும்பினார்கள்.அதனால் தான், பொய் சொல்ல கூடாது, திருடகூடாது,பேராசை கொள்ளுதல் கூடாது,பொறாமை கொள்ள கூடாது, உதவி புரிதல், மனிதாபிமானம் , பணிவு மற்றும் தன்னடக்கத்துடன் நடந்து கொள்ளுதல் போன்ற நல்ல பண்புகளை சொல்லி வளர்த்தார்கள்,மேலும் அதை கற்றுத்தரும் ஒரே இடம் பள்ளி மட்டுமே என நம்மை அனுப்பினார்கள் .

ஆனால் இந்த பண்புகள் அனைத்தையும்  இன்றைய  கல்விக்கூடங்கள் பின்பற்றுகிறதா? 




அரசு விதித்த கட்டணம் போதவில்லை என்பதற்காக  அதிகமாக பணம் வாங்கிகொண்டு,  ஏழை பெற்றோரை ஏமாற்றி ,வருமான வரிக்கு கணக்கு காட்டாமல் அருமையாக  தப்பிக்கிறார்கள். பொய்  சொல்ல கூடாது, திருட கூடாது என்று போதிக்கும் இவர்களே இந்த கேவலமான செயலை செய்யும்போது,இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது  பொய் சொல்ல கூடாது என சொல்ல ?

மற்றொன்று ,  கல்வியானது  சேவை என்பதில் இருந்து  வியாபாரமாக மாறிவிட்டது என சொல்கிறார்கள். வியாபாரத்தில் கூட ஒரு கண்ணியம் இருக்கும். அவர்கள் பணம் இல்லாத சில நேரங்களில் நம் மேல் இரக்கபட்டு , புரிந்து கொண்டு கடன் கொடுப்பார்கள். ஆனால் இவர்கள் அப்படியா செய்கிறார்கள்? LKG என்றாலும் பணம் கட்ட வில்லை என்றால் , அடுத்த நாளே பள்ளிக்கு வர கூடாது என தடை போடுகின்றனர்.அந்த பிஞ்சு மனதில் எதற்காக நம்மை வரவேண்டாம் என ஆசிரியர் சொல்கிறார்  என்பது கூட தெரிவதில்லை .  இவர்களிடம் தான்  நமது குழந்தைகள் மனிதாபிமானம்  கற்றுக்கொள்ள போகிறார்களா ? .

இவர்களின் பேராசையினாலும்,அலட்சியத்தினாலும்  ஒரு குழந்தையின் உயிர் பலியான போதும், அதற்கும் எங்களுக்கும் எந்த  தொடர்பும் இல்லை என்றார்களே ! இவர்கள் தான் , நமது குழந்தைகளுக்கு தைரியத்தையும், RESPONSIBILITY யும்  கற்று கொடுக்க போகிறார்களா ?

பாகுபாடு என்பது ஜாதியில் மட்டுமல்ல ! கல்வியிலும் பார்க்க படுகிறது இவர்களால்! ஆம் ! நன்றாக படிக்கும் மாணவர்களை ஒரு வகுப்பிலும் , சுமாராக படிக்கும்  மாணவர்களை இன்னொரு வகுப்பிலும் பிரித்து வைக்கிறார்கள் . என்ன ஒரு இரக்கமற்ற எண்ணம் இவர்களுக்கு!

இன்றைய கல்விக்கூடங்கள் நன்னெறியை போதிக்க வேண்டும், நமது பிள்ளைகள் நல்ல மனிதனாக வரவேண்டும் என பெற்றோர்கள் கேட்பதில்லை!  பணம் சம்பாதிப்பது எப்படி ? வாழ்க்கையில் செட்டில் ஆவது  எப்படி ? என்று தான் சொல்லி கொடுக்க சொல்கிறார்கள் . அந்த பெற்றோரின் விருப்பம் மாறாதவரை  பள்ளிகூடங்களும் மாறப்போவதில்லை!!!! அவர்களிடம் நன்நெறிகளையும் எதிர்பார்ப்பது முட்டாள் தனமானது !


பின் குறிப்பு:
மேலே சொன்ன  கருத்துக்கள்  நான் கேள்விப்பட்ட , செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டதன் அடிப்படையில் சில பள்ளிகளை மட்டுமே சாடி   எழுதப்பட்டது. இன்றும் சில பள்ளிகூடங்கள் சிறப்பாகவும் , இலவசமாகவும் சேவையாற்றி வருகின்றன.அவற்றில் படித்தவன் தான் நான். அவர்களுக்கு நான் என்றும் தலை வணங்குகிறேன் !!!!!



Related Posts Plugin for WordPress, Blogger...

0 comments :

Post a Comment

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger