Monday, 20 August 2012

அரசியல் தலைவர்களுக்கு பிடித்த திரைப்படங்கள்!


வணக்கம் நண்பர்களே,
                     சென்ற வார இடுகையில்  சுஜாதா - தொடர் பதிவு  மிகுந்த வரவேற்ப்பை பெற்றது மிக்க மகிழ்ச்சி, ஓட்டு போட்டு கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!


இந்த வாரம் ஒரு நகைச்சுவை பதிவு (புரியுது நீங்க கேட்கிறது! 
பதிவை படிச்சப்புறம்தான் அது நகைச்சுவயா இல்ல மொக்கயானு தெறியும்). என்னை பொருத்தவரை இது நகைச்சுவைதான்! 

பொதுவாகவே நமது அரசியல் தலைவர்களுக்கு மிகுந்த பணிச்சுமை! இந்த இடயறாத பணிகளுக்கிடயே அவர்கள் பொழுதுபோக்க திரைப்படத்திற்கு செல்கிறார்கள்! அவர்கள் பார்க்க விரும்பும் படம் என்ன? அவர்களுக்கு என்ன திரைப்படங்கள் பிடிக்கும்? ஒரு சிறு கற்பனை என் மனதில் உருவாகியது. அதன் அடிப்படையில் இந்த இடுகையை எழுதி இருக்கிறேன். தமிழ் திரைப்படத்தில் கதாநாயகன் வில்லனை பிடிக்க மாறு வேஷத்தில் வருவாரே ! அது போல தலைவர்கள் பெயரும் மறைமுகமாக!!!!!! குறித்து இருக்கிறேன்!

முதலாவதாக,  

கஞர்: இவருக்கு பிடித்த படம் மொழி- மொழியை காப்பாத்த இவர் பட்ட பாடு இருக்கே ! அடேங்கப்பா ! ஹலோ ! நான் தமிழ் மொழிய பத்தி சொல்லிட்டு இருக்கேன்! நீங்க எந்த மொழிய பத்தி நெனைக்கிறீங்க!  

அமா:  மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி இந்த படம் இவங்களுக்கு  ரொம்ப பிடிக்கும் ! காரணம் சொல்லனுமா என்ன ?

 ஸ்லின்: ரொம்ப நாளா இவருக்கு இந்த படத்து மேல ஒரு கண்ணு! தலைநகரம் !

அகிரி: தர்ம துரை! அண்ணன் என்ன?தம்பி என்ன? சொந்தம் என்ன பந்தம் என்ன?அண்ணனை ஏமாற்றிய தம்பி படம்!  

கமொழி,ஆசா:-இவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச படம் ஜி
நீங்க என்ன கேக்குறீங்கன்னு தெரியுது 2ஜியா 3ஜியா ! எனக்கு  தெரியாதுங்க!

ராதாஸ்:- கவரி மான் ! ரொம்ப தன்மானமுள்ள தலைவர் ! மான் அப்படீன்னாலே தாவத்தான் செய்யும் !

வைகே: வைதேகி காத்திருந்தாள்! காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி! I am Paavam !   

வியகாந்த்: அண்ணாமலை! நண்பன் தன்னை ஏமாத்தி தன்னோட வீட்டை இடிச்சுடுவாரு! உடனே இவர் நண்பனுக்கு போட்டியா அதே தொழில்ல நேரடியா இறங்கி அவங்கள விட ஒரு படி மேல போய் நிற்ப்பார்! 

சானியா! பொம்மலாட்டம்! நாலு பேரு நடுவிலே! நூலு ஒருத்தன் கையிலே!

மமோன்சிங்: சுமைதாங்கி! யார் பெத்த பிள்ளையோ இப்படி எல்லார் பாவத்தயும் தூக்கி தோள் மேல போட்டுகிட்டு அலயுது!

 சரி வெள்ளை கொடிய தூக்குற நேரம் வந்தாச்சு! இது முழுக்க முழுக்க கற்பனை மற்றும் நகைச்சுவை சார்ந்த பதிவு. இந்த இடுகை யாருடய மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்!  

என்ன பண்ண சொல்றீங்க உங்க விதி! இதெல்லாம் படிக்கணும்னு! பிடித்திருந்தால் கருத்திடவும்! இல்லையென்றால், படித்தவுடன் கிழித்துவிடவும்! ச்ச! படித்தவுடன் வின்டோவை க்ளோஸ் செய்யவும். 

நன்றியுடன் 
இரா.மாடசாமி 

Related Posts Plugin for WordPress, Blogger...

4 comments :

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger