வணக்கம் நண்பர்களே ,
பதிவர் சந்திப்பு முடிந்த கையுடன் இந்த பதிவை எழுதலாம் என எண்ணியிருந்தேன்!ஆனால் முடியவில்லை!
இதற்க்கு முந்தைய பதிவை படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
இந்த வரிசையில் நாம் ரசிக்கபோகும் படம் உதிரிப்பூக்கள்! தமிழ் சினிமாவை உலக சினிமாவிற்கு உயர்த்திய ஒரு உன்னத கலைஞனின் படைப்பு!
1979 ல் வெளிவந்த இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர்.திரு.மகேந்திரன். உதிரிப்பூக்கள்!தலைப்பே க(வி)தை சொல்லும்! டைட்டில் கார்டிலேயே இயக்குனர் நமக்கு கதையின் மீதான எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திவிடுகிறார். ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் பரிதாபத்துடன் எதிர்நோக்கும் காட்சி, நம்முடைய இதயத்தின் வலிமையை சோதித்து பார்க்க சொல்கிறது !
பள்ளியின் தாளாளர் மற்றும் பெரிய மனிதரான விஜயன் சொல்வதுதான் சட்டம் அந்த கிராமத்தில் ! (அஸ்வினி)மனைவியின் உடல்நிலையை காரணம் காட்டி அவரின் தங்கையை மணம்முடிக்க முயல்கிறார். இதற்க்கு அவரின் மாமனாராக வரும் சாருகாசன் மறுக்கிறார். மனைவியின் மீது பஞ்சாயத்தில் களங்கம் சுமத்தி பிரிகிறார். பின் வேறு ஒரு பெண்ணை மணக்கிறார். உடல் நிலை மோசமாகி அஸ்வினி இறந்து போக, குழந்தைகளை வளர்க்க விரும்பும் அஸ்வினியின் தங்கையை அந்த பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவர் மணம் முடிக்க விரும்புகிறார். இதை விரும்பாத விஜயன் அவரை களங்க படுத்த முயல அதுவரை பொறுத்திருந்த ஊர் மக்கள் பொங்கி எழுகிறது. அவர் என்ன ஆனார் என்பது எதிபார்க்காத கிளைமாக்ஸ் .
ஊர் பெரிய மனிதராக விஜயன் , மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். மனைவியை அடிமை போல் நடத்துவது, மனைவியின் தங்கையை அடைய முயற்சிப்பது என எதிர்மறை நாயகனுக்கான வேலையை சரியாக செய்திருக்கிறார். மனைவியின் தங்கையை பெண் கேட்டு மாமனாரிடம் பேசும் இடத்தில் மிரட்டாமல் கவர்கிறார்.
கணவனுக்கு பயந்து நடுங்கும் கதாபாத்திரத்தில் அஸ்வினி ! இவருடைய முகம் அனுதாபத்தை ஏற்படுத்துவது நம்மால் தவிர்க்க முடியவில்லை ! முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை !
முக்கியமான ஒன்று! தாயை கொடுமைபடுத்தும் தந்தையின் முன் வீர வசனம் பேசுவது , சபதம் போடுவது, உழைத்து முன்னேறுவது என எந்த மசாலா வாசனையும் இல்லாமல் இந்த படத்தில் குழந்தைகளை குழந்தைகளாகவே வலம் வர விட்டிருப்பதற்காக இயக்குனருக்கு தனியாக சபாஷ் போடலாம் ! மேலும் விஜயனின் மாமனாராக வரும் சாருஹாசனை முற்போக்கு சிந்தனைவாதியாக காட்டியிருப்பது கூடுதல் பலம் !
முக்கியமான ஒன்று! தாயை கொடுமைபடுத்தும் தந்தையின் முன் வீர வசனம் பேசுவது , சபதம் போடுவது, உழைத்து முன்னேறுவது என எந்த மசாலா வாசனையும் இல்லாமல் இந்த படத்தில் குழந்தைகளை குழந்தைகளாகவே வலம் வர விட்டிருப்பதற்காக இயக்குனருக்கு தனியாக சபாஷ் போடலாம் ! மேலும் விஜயனின் மாமனாராக வரும் சாருஹாசனை முற்போக்கு சிந்தனைவாதியாக காட்டியிருப்பது கூடுதல் பலம் !
" பஞ்சாயத்தில் மனுஷங்கதான் வர்றாங்க ! பரவாயில்லை பஞ்சாயத்தை கூட்டுங்க " என அவர் சொல்லும்போது தேர்ந்த நடிகரின் முதிர்ச்சி !
மேலும் சில கதாபத்திரங்கள் நம்மை ஈர்க்கின்றன ! சுகாதார அதிகாரியாக வரும் சரத் பாபு , ஆசிரியர் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளி படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக நாவிதர் அஸ்வினி இறக்கும் பொது பேசும் வசனம் " தம்பிக்கு முடி எடுக்கணும்னு சொல்லும் போதெல்லாம் , நேரம் வரட்டும்,நேரம் வரட்டும்னு சொல்வாங்களே!அந்த நேரம் இப்படியா வரணும்!" என கூறும்போது நம்மையும் அறியாமல் கண்கள் கலங்க செய்து விடுகிறது.
இறுதியில், குழந்தைகள் தனியாய் ஆற்றின் ஓரத்தில் உதிரிப்பூக்களாக நடந்து செல்லும் காட்சி , நம் மனதை விட்டு உதிர மறுக்கிறது !
தெளிவான கதை , நேர்த்தியான திரைக்கதை , எளிமையான வசனங்கள் என படம் மிக மிக அருமை ! பாடல்களும் , பின்னணி இசையும் இளையராஜவிற்கு உரிய முத்திரை! இயக்குனர் மகேந்திரன் தமிழ் சினிமாவின் வரலாற்றின் தவிர்க்க முடியாத இயக்குனர்.
நன்றியுடன்
இரா.மாடசாமி
Tweet | |||||
மறைக்க முடியுமா சார்... இயக்குனர் மகேந்திரன் அவர்களின் படங்களில் வைரக்கல்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
சரியாய் சொன்னீங்க சார் ! உண்மையிலேயே அவர் படங்களில் இது வைரக்கல்! அவரும் ஒரு வைரக்கல் தான் ! கருத்தளித்ததற்கு மிக்க நன்றி !
Deleteகாலத்தால் அழியாத திரைக்காவியம்...
ReplyDeleteதங்கள் விமர்சனமும் அழகு..
எமது தளத்திற்கு வந்து கருத்தளித்தற்கு மிக்க நன்றி நண்பரே!
Deleteஎனக்கு மிகவும் பிடித்த படம்..
ReplyDeleteஇந்த படத்தில் இளையராஜாவின் இசை என்றும் நெஞ்சை விட்டு அகலாதது..
தமிழில் ஒரு உலக சினிமா...
http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest_28.html
இசை ஞானி இசை ஞானிதான் ! கருத்துக்கு நன்றி நண்பரே !
Delete