Wednesday, 3 October 2012

தொலைந்து போன விளையாட்டுக்கள் !

வணக்கம் நண்பர்களே!
                                          ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு ஊரிலிருந்து ஒரு உறவினர் வந்திருந்தார் !  அவர்  ஒரு ஆசிரியர் ! எனது மகனை  பார்த்து உன்  பெயர் என்ன? என்ன படிக்கிறாய்?  என கேட்டார் ! அவனும் பதில் சொல்லிவிட்டு !  தொலைகாட்சியில்  சிறுவருக்கான அந்த அலைவரிசையை பார்ப்பதில் ஆர்வம் காட்டிகொண்டிருந்தான் ! அவர் என்னை பார்த்து , பையன  வெளியில கூட்டிட்டு போறதில்லையா ? என கேட்டார் ! நான் இல்லை என்பது போல் தலை அசைத்தேன் ! அவர், நம்ம ஊர்னா தெருவில இருக்குற பசங்க கூட விளையாடலாம். இங்க எங்க முடியுது. பூட்டி வச்ச இரும்பு கம்பிக்கு உள்ளதான் இருக்க வேண்டி இருக்கு என சொல்லி பின் சிறிது நேரத்தில் சென்று விட்டார் ! அவர் சென்றவுடன் எனது சிறுவயது ஞாபகங்கள் என்னை என் ஊருக்கு அழைத்து சென்றது ! அதை பற்றிய ஒரு பதிவு இது !


கிராமத்தில் நான் சிறுவனாக இருந்த பொது பள்ளியில் இருந்து நேராக வீட்டுக்கு வந்த உடன் பையை  ஒரு மூலையில் போட்டுவிட்டு தோப்பிற்கு விளையாட சென்று விடுவேன் !  நிறைய  விளையாட்டுக்கள்  விளையாடுவோம் ! ஓடிபிடிப்பது, மறைந்து விளையாடுவது , உப்புமூட்டை , மணலில் வீடு கட்டுவது ,  கோலி , பல்லாங்குழி, திருடன் -போலீஸ் ,பரம பதம், கண்ணாமூச்சி ,  சிறிய சாமான்களை வைத்து  சோறு பொங்குதல் , போன்ற பல விளையாட்டுக்கள் விளையாடுவோம். இதில் ஒவ்வொரு  விளையாட்டும்  நம் வாழ்க்கையின் ஒரு உணர்வை வெளிபடுத்தும் .  ஓடிபிடிப்பது -  ஓட்ட பயிற்சி , உப்புமூட்டை - வலிமை சேர்க்கும் , மணல் வீடு - சோறு பொங்குதல்  போன்றவை  சிறுவர்களுக்குள்ள ஒற்றுமையை  உணர்த்தும், பல்லாங்குழி - சேமிப்பு மற்றும் எண் கணக்கின் அவசியத்தை உணர்த்தும் , . மேலும்  இரவில் ஒரு விளையாட்டு விளையாடுவோம்  அதன் பெயர்  கூட்டாஞ்சோறு   அதாவது ஒவ்வொருவரும் தத்தம் அவரது வீட்டில் செய்த  உணவை, அனைவரும் எடுத்துகொண்டு யாருடைய  வீட்டிலாவது  வைத்து பகிர்ந்து உண்ண வேண்டும் !  தினம் ஒரு வீடு வீதம் , ஒவ்வொரு வீடாக சென்று சாப்பிட வேண்டும் ! இந்த விளையாட்டில்   விட்டுகொடுத்தல் , சகோதரத்துவம் , போன்ற பண்புகளை  வளர்க்கும் ! 
இன்னொரு விளையாட்டு உங்களுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியாது ! அதன் பெயர் படப்பெட்டி ! அதாவது ஒரு கட்டத்தில் தமிழ் படங்களை எழுதி அதை கோடு  போட்டு பிரித்து அதில் சுமார் 30  முதல் 40 படங்கள் எழுதி வைத்திருப்பார்கள் . பைனான்சியர் ஒருவர் இருப்பார் , அவரிடம் காசு கொடுத்து ஒரு படம் வாங்கி கொள்ளவேண்டியது ! பரம பதம் போல கட்டையை உருட்ட வேண்டும் . நான்கு பேர் விளையாடும் அந்த ஆட்டத்தில், காசு கொடுத்து வாங்கிய உங்கள் படத்தின்  கட்டத்தில் மேல் நின்று விட்டால்  அதற்க்கு காசு கொடுக்க வேண்டும் !  பணத்திற்காக  சிகரெட் அட்டைகள் பயன்படுத்துவோம். இதைத்தான் பேங்க் கேம் என சீனாகாரன் நம்மை ஏமாற்றுகிறான்!


இவ்வாரான விளையாட்டுக்கள்  இப்போது அழிய காரணம்  புத்தகசுமை,நேரமின்மை , நகரமயமாதல், சிறுவர்களுக்கான தொலைக்காட்சி அலைவரிசை என நிறைய  வந்தபின் தான் !  இப்போது  எனது மகன் பள்ளி விட்டவுடன்   குழந்தைகளுக்கான  அலைவரிசை , வீட்டு பாடம் , சாப்பாடு , தூக்கம்  என அவன் வாழ்க்கையே மாறிக்கிடக்கிறது ! இதற்க்கு பின்னால் வரும் தலைமுறையை நினைத்தால் இன்னும் பயமாக இருக்கிறது. 


Related Posts Plugin for WordPress, Blogger...

9 comments :

  1. நீங்கள் சொன்னது போல் பல விளையாட்டுக்கள் முழுவதுமாகவே மறைந்து போய் விட்டன...

    தனிக் குடித்தனமும் ஒரு முக்கிய காரணம்....

    ReplyDelete
  2. நீங்கள் சொன்னது போல் பல விளையாட்டுக்கள் முழுவதுமாகவே மறைந்து போய் விட்டன...

    தனிக் குடித்தனமும் ஒரு முக்கிய காரணம்....

    இப்போது தான் கருத்திட்டேன்... மறுபடியும் இந்தப் பகிர்வு dashboard-ல் வருகிறதே...!!!

    இதுவும் (Google செய்யும்) விளையாட்டோ...?

    ReplyDelete
    Replies
    1. தனிக்குடித்தனம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது!கருத்துக்கு நன்றி நண்பரே!

      Delete
  3. கால மாற்றம்...


    விளையாட்டுகள் கூ்ட தற்போது எல்லாம் கணினியோடு முடிந்துவிடுகிறது...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி நண்பரே!

      Delete
  4. பகிர்வு அருமை... எனக்கும் இந்த அனுபவங்கள் உண்டு... நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ! தொடர்ந்து தளத்திற்கு வருகை தரவும் !

      Delete
  5. //இதைத்தான் பேங்க் கேம் என சீனாகாரன் நம்மை ஏமாற்றுகிறான்!//
    உண்மையான வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. நட்பில் இணைந்தமைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி நண்பரே !

      Delete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger