Wednesday, 17 October 2012

ஆரோக்கிய பழக்கங்கள் 10 !!! தொடர்பதிவு -1


வணக்கம் நண்பர்களே ,
                                                   சென்ற பதிவில் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான 10 ஆரோக்கிய கட்டளைகள்  பற்றி தெரிந்து கொண்டீர்களா ! இப்போது ஆரோக்கிய பழக்கங்களை பற்றி தெரிந்து கொள்வோம் .



ஆரோக்கிய பழக்கங்கள் 

1.உணவுக்கு முன்னதாக பழம் சாப்பிடுதல் :

                                                                                               சாதாரணமாக உணவிற்கு பிறகு பழம் சாப்பிடுவது பலரின் வழக்கம் . இது ஒரு நோய் உருவாக்கும் பழக்கம் . பழங்கள் இயற்கையிலேயே முன் ஜீரணம் ஆனவை. ஜீரணத்திற்க்காக, பழங்களுக்கு அதிக சக்தி தேவையில்லை . நாம் உண்ணும் உணவு ஜீரணமாவதற்கு மூன்று மணி நேரத்திற்கு மேலாகிறது . உணவு உண்ட பிறகு பழம் சாப்பிட்டால் , அவை ஜீரணத்திற்க்காக காத்திருக்கின்றன . இந்த நேரத்தில் பழங்கள் வேதியல் மாற்றத்திற்கு உள்ளாகி கேட்டுபோகின்றன . அவை வயிற்றில் வாயு உபத்திரவத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் ஜீரணம் ஆகிகொண்டிருக்கும் உணவை  கெட்டுபோன பழங்கள் கெடுத்துவிடுகின்றன. அதனால் உணவுக்கு முன்னாள் பழங்கள்  சாப்பிடுவது ஒரு நல்ல பழக்கம் . 

2.உணவு உண்ணும்போது நீர் அருந்தாமல் இருப்பது ஒரு ஆரோக்கிய பழக்கம் .

உணவு வாய்க்குள் செல்லும்போது நமது உடலால் உணவின் தரம் உணரப்படுகிறது . உடனே வாயில் அதற்க்கு சம்பந்தமான ஜீரண அமிலங்கள் சுரக்கின்றன . நாம் தண்ணீர் குடிக்கும்போது ஜீரண அமிலங்கள் அந்த தண்ணீரில் கரைந்து விடுகின்றது. சரியான ஜீரணத்தை தடுத்துவிடுகிறது. ஜீரணமாகாத உணவு குடலுக்குள் செல்லும்போது அவை கேடுவிளைவிக்கும் வாயுக்களை உற்பத்தி செய்கின்றன. அதன் காரணமாக நோய் உருவாகின்றது. ஆகவே உணவு உண்பதற்கு குறைந்தது அரைமணி நேரம் முன்னதாக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான பழக்கம் . 

3. பதப்படுத்திய நீரை (RO Water) தவிர்த்தல் ஆரோக்கியமான பழக்கம். 

ரீவர்ஸ்  ஆஸ்மாசிஸ் பில்டரிங் (Reverse osmosis Filtering) மூலம் தண்ணீரில் உள்ள அனைத்து தாது உப்புக்களும் நீக்கபடுகின்றன . அந்த நீர் உயிரற்ற நீராக மாறுகிறது . இந்த உயிரற்ற நீரை நாம் பருகும்போது  நம் உடலின் தாதுக்களை அது வெளியேற்றுகிறது. எனவே ஊற்று தண்ணீரை குடிப்பது அல்லது UV Treated தண்ணீர் குடிப்பது நல்லது. 

4. ஒரு நாளில் மூன்று முறை நம் குடலை சுத்தம் செய்யவேண்டும். 

ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு உண்கிறோமோ அத்தனை முறையும் நாம் நம் குடலை சுத்தம் செய்ய வேண்டும் . இந்த விஷயத்தில் நாம் குழந்தைகளிடமிருந்து இயற்கையான முறையில் உணவுக்குடல் எத்தனை முறை சுத்தம் செய்யவேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் . தாய்ப்பாலை குழந்தைகள் எத்தனை முறை குடிக்கின்றனவோ அத்தனை முறை உணவு குடலை சுத்தம் செய்கின்றது. இயற்க்கை வழியை பின்பற்றுங்கள் .24 மணி நேரம் உங்கள் நச்சுக்களை தேக்கிவைப்பதை தவிர்த்துவிடுங்கள் . குடலை ஒரு நாளைக்கு 3 முறை சுத்தம் செய்வதற்கு  உங்கள் மனதை தயார் படுத்துங்கள் .

5. சமைக்காத பச்சை உணவுகளை அதிகமாக உண்ண  வேண்டும் .

சமைத்து சாப்பிடுவது கடந்த 1000 வருடங்களாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது அனைத்து நோய்களும் மனிதன் சமைத்து சாப்பிட ஆரம்பித்த பிறகே மனிதர்களை பாதிக்க ஆரம்பித்தன . சமையல் செய்யும்போது உணவில் உள்ள சத்துக்கள் மறைந்து விடுகிறது. Phyto chemicals அனைத்தும்   toxic chemicals ஆக மாறிவிடுகிறது. பழங்கள், காய்கறிகளின் தோலையும், விதைகளையும் நீக்கிவிட்டால் 80% உணவுச்சத்துக்கள் நீங்கிவிடுகின்றன. காய்கறிகளை சமைக்கும்போது மீதமுள்ள 20% உணவுச்சத்துக்களில் 80% நீங்கி விடுகின்றது. அதாவது நாம் செலவு செய்யும் பணத்தில் 4% பணத்திற்குரிய மதிப்பைத்தான் பெறுகிறோம் . பச்சை உணவுகளை படிப்படியாக அதிகரித்து உண்ணும் ஆரோக்கிய பழக்கத்தை ஆரம்பியுங்கள் .

 --தொடரும் ---

நன்றி :
 தகவல் உதவி :- World Wellness Organization 
 படங்கள் உதவி :- Google images 


நன்றியுடன்
இரா. மாடசாமி

               

 

 

 

Related Posts Plugin for WordPress, Blogger...

3 comments :

  1. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்...

    நன்றி...

    tm3

    ReplyDelete
  2. ஒன்றிரண்டை கடைபிடித்து வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார் !

      Delete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger