Monday 13 August 2012

சுஜாதா - தொடர் பதிவு-3

வணக்கம் நண்பர்களே!
                                                   
திரு.சுஜாதா அவர்களை  பற்றிய  முந்தைய பதிவை படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்  .

சுஜாதா - தொடர் பதிவு -1

சுஜாதா - தொடர் பதிவு - 2

 
 "Electronic voting machine ஐ  எங்கள் குழு கண்டுபிடித்து அதை செயல் படுத்த முனைந்த சமயம் நிறைய விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தது. அது என்னவென்றால் ,  முன்னேற்ற நாடான அமெரிக்கா,ஜப்பான் போன்ற நாடுகளிலேயே இந்த voting machine முறை பயன்படுத்தவில்லை ! நாம் மட்டும் ஏன் பயன்படுத்த வேண்டும்?! 

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை! அனைத்து  Electronic கண்டுபிடிப்புகளும் ஐரோப்பிய மேலை நாடுகள் தான்  கண்டுபிடிக்க வேண்டுமா? நம்மால் முடியாதா? ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை நம்மிடம்? "
                                                                                          -திரு.சுஜாதா (கற்றதும் பெற்றதும்)


உண்மை ! நம் நாட்டில் இந்த தாழ்வு மனப்பான்மை நம் அரசியல்வாதிகளிடையே மட்டுமின்றி நம்மிடமும் ஒளிந்து கொண்டு இருக்கிறது !அதுதான் நம்மை முன்னேற விடாமல் பின்னோக்கி இழுத்து செல்கிறது .



திரு.சுஜாதா அவர்கள் , திரைத்துறையில் கதை வசனம் எழுதியது மட்டுமின்றி காலத்தால் அழியாத வரலாற்று சிறப்புமிக்க "பாரதி" எனும் தமிழ் திரைப்படத்தை தனது நண்பருடன் மீடியா ட்ரீம்ஸ்  நிறுவனத்தின் பேரில் தயாரித்து வழங்கினார் என்பது உபரி தகவல்

இவரின் இந்தியன் படத்தில் வரும் லஞ்சம் பற்றிய வசனம் Master  Piece.

   " சுஜாதா  என்கிற  தனி ஒரு மனிதர்  இல்லாததால் அந்த இடத்தை நிரப்ப எனக்கு பத்து பேர் தேவைபட்டர்கள்"
           ----- எந்திரன் பற்றிய பேட்டியில் ஆனந்தவிகடனில் டைரக்டர் ஷங்கர்---

இந்த எளிமையான மனிதனை பற்றி பிரம்மாண்ட இயக்குனர்  ஷங்கர்  கூறிய மேலும் சில தகவல்கள் வீடியோவாக  கீழே கொடுக்க பட்டுள்ளது( நன்றி:-Youtube)




இவர் எழுதிய  ஏன் ? எதற்கு ? எப்படி ? என்கின்ற படைப்பு வாசகர்களிடையே  மிகுந்த வரவேற்பை பெற்றது! இதில்  ஏற்கனவே ஜூனியர் விகடனில் வெளிவந்த அதிசய உலகம் என்ற வாசகர்கள் கேள்வி பதிலும் இடம் பெற்றிருந்தது. அறிவியலின் கண்டுபிடிப்புகள் , ஆராய்ச்சிகள் , கண்டுபிடித்த வரலாறு , என அனைத்து தகவல்களும் எளிய தமிழில் ஆங்காங்கே  நகைச்சுவையுடனும் சொல்லி இருப்பார். இதை படித்து ரசித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், நீங்களும் இந்த புத்தகத்தை படித்து உங்களின் பொது அறிவை வளர்த்துகொள்ளுங்கள்! 


இவர் மேலும் எழுதிய கட்டுரைகள்


கணையாழியின் கடைசி பக்கங்கள்
கற்றதும் பெற்றதும் [பகுதி 1-5]
கடவுள் இருக்கிறாரா
தலைமை செயலகம்
எழுத்தும் வாழ்க்கையும்
ஏன் ? எதற்கு ? எப்படி ?
சுஜாதாட்ஸ்
இன்னும் சில சிந்தனைகள்
தமிழ் அன்றும் இன்றும்
உயிரின் ரகசியம்
நானோ டெக்னாலஜி
கடவுள்களின் பள்ளத்தாக்கு
ஜீனோம்
திரைக்கதை எழுதுவது எப்படி?                                                                                                                                                                                                                                                                          
இவர்,  100 க்கும் மேற்பட்ட நாவல்கள் ,200  க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளும், புதினங்களும் எழுதி உள்ளார்.கிட்டத்தட்ட  40 ஆண்டு காலத்திற்கும் மேலாக எழுத்துலகில் இருந்திருக்கிறார். "இவர் எழுதினால் லாண்டரி பில்லை கூட பப்ளிஷ் செய்வார்கள் " என்று சுஜாதா காது படவே சொல்லி அதை அவருடைய நினைவுகளின் தொகுப்பான கற்றதும் பெற்றதும் கட்டுரையில் எழுதி இருக்கிறார். அந்த அளவுக்கு இவருடைய நாவல்களிடையே மக்களுக்கு ஆர்வமும் ரசனையும் இருந்தது.

 விருதுகளும் பதவிகளும்:
                                                      அறிவியலை எழுத்து மூலமாக எளிமையாக எடுத்து கூறியமைக்காக இவருக்கு தேசிய அறிவியல்  தொழில் நுட்ப கழகம் 1993 ம் ஆண்டு இவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. மேலும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கண்டுபிடித்தமைக்காக வாஸ்விக் விருதும் வழங்கப்பட்டன. தமிழக அரசு இவருடைய எழுத்துப்பணியை பாராட்டி கலைமாமணி விருதும், தமிழ் ஆராய்ச்சி மையத்தில் உறுப்பினர் பதவியும் தந்து இவரை கௌரவித்தது.


 ஏற்கனவே இருமுறை  ஆஞ்சியோ மற்றும்  BYE -PASS operation  செய்த இவர், 2008 பிப்ரவரி 27 ஆம் தேதி  இந்த மண்ணுலகை விட்டு பிரிந்த நாள் , இலக்கிய உலகில் கருப்பு நாள் என்று தான் சொல்ல வேண்டும். திரு.ரங்கராஜன் -சுஜாதா தம்பதியருக்கு  ரங்கபிரசாத், கேசவ பிரசாத் என  இரண்டு மகன்கள்  உள்ளனர்.                   
                                                                                                               
அரசு இவருக்கு பத்ம விருது தராதது இலக்கியத்துறைக்கு மிகப்பெரிய இழுக்கு! இவருடைய மறைவுக்கு பிறகு, உயிர்மை பதிப்பகம் இவரின் நினைவாக ஒவ்வொரு வருடமும்  சுஜாதா விருதுகள் வழங்கிவருவது ஆறுதல் தரும் செய்தி .


இந்த தொடர் பதிவு இத்துடன் முடிவடைகிறது. இவரை பற்றி எனக்கு தெரிந்த அளவுக்கு எழுதி இருக்கிறேன் ! இன்னும் பல தகவல்களையும் , படைப்புகளையும்  என்னால் தரமுடியாமல் போயிருக்கலாம்! மன்னிக்கவும் ! இவரை பற்றி, உங்களுக்கு  தெரிந்த தகவல்கள் மற்றும் இடுகை பற்றிய உங்கள் கருத்துக்களை கருத்துரை பெட்டியில் போடவும்.



தகவல் உதவி -விக்கி பீடியா


  

நன்றியுடன் !
இரா.மாடசாமி.




                                
Related Posts Plugin for WordPress, Blogger...

6 comments :

  1. சுஜாதா அவர்கள் தன்னுடைய கதைகளில்
    10
    9
    8
    7
    6
    5
    4
    3
    2
    1 என படிக்கட்டில் ஏறுவதை இப்படித்தான் முதன்முதலில் எழுதினார்.
    வோட்டிங் எந்திரத்தை கண்டுபிடித்து அதை சோதனை
    முயற்சியாக கேரளாவில் ஒரு ஊரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பயன்படுத்தினார்கள்.
    அதை இயக்கி வோட்டிங் முடியும் வரை அந்த ஊரில் இருப்பதற்காக சென்றார்.அங்கு சென்று வந்ததைப் பற்றி ஒரு அனுபவகட்டுரை எழுதினார்.அதில் ஒரு ஊரில் இருந்து 50 மைல் தொலைவிற்கு பசுமை போர்வை விரித்திருந்ததை பார்த்து ரசித்தபடி தேர்தல் நடக்கும் இடத்திற்குச் சென்றோம்.என எழுதி இருந்தார்.இதெல்லாம் அவருடைய எழுத்து நடையில் கொண்டு வந்த புதுமைகள்.
    வாழ்க வளமுடன்.
    கொச்சி தேவதாஸ்
    1

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ! கூடுதல் தகவலுக்கு நன்றி ! தொடர்ந்து தளத்திற்கு வருகை தந்து தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும் !

      Delete
  2. சுஜாதா அவர்களின் புத்தகங்களின் எனது மின்னூல் தொகுப்பு https://docs.google.com/folder/d/0B6TytEc02MF9M1kyMTdXQTJwd28/edit

    http://logintome2.blogspot.in/p/bookshelf.html

    http://logintome2.blogspot.in/2011/08/tamil-novels-written-by-writer-sujatha.html

    ReplyDelete
  3. @ sri ram raja ,
    கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே !

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger