Tuesday 14 August 2012

எது சுதந்திரம்?

வணக்கம் நண்பர்களே! 
                                              அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ! சுதந்திர தினத்தை ஒட்டி  இந்த பதிவு வெளி வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது! 


நாளை நாம் 66 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம் ! ஆனால் இன்று வரை முழுமையான சுந்தந்திரம் பெற்று விட்டோமா?அதை பற்றிய ஒரு சிறிய அலசல் தான் இந்த கட்டுரை! 

எத்தனையோ தேசிய தலைவர்களால் போராடி கிடைக்கப்பெற்ற சுதந்திர இந்தியா, இன்று அரசியலில் சீர்கெட்டு,சீரழிந்து கிடப்பது தேசத்தின் அவமானம்! அஹிம்சையின் அடையாளமாக இருந்த நம் நாடு ஊழலின் அடையாளமாக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமை !

எது சுதந்திர அரசியல் ?

மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ,எல்லோரும்  இந்நாட்டு மன்னராக வேண்டும் என்பதுதான் அரசியல் சுதந்திரம் ! ஆனால் நேரு குடும்பத்தில் ஆரம்பித்த வாரிசு அரசியல் புற்றீசல் போல மெல்ல மெல்ல வளர்ந்து நாட்டின் அத்தனை மாநிலங்களுக்கும் வேரூன்றியது ! ஆம் ! இன்று அரசியலும்  வழி வழியாக செய்யும் குலத்தொழில் பட்டியலில் சேர்ந்து விட்டது!அதானால் தான் வட்டம், மாவட்டம், கிளை, ஒன்றியம், போன்ற கடை நிலை பதவிக்கும் கடும் போட்டியிட்டு தனது வாரிசுகளை களம் இறக்குகின்றனர்.அந்த வாரிசுகளும் லட்சம் கோடி வருமானத்தை நஷ்டபடுத்திவிட்டு இன்று சுதந்திரமாக வெளியில் வந்து நம்முடன் சுதந்திர தினம் கொண்டாடும் நிலைமை! 
இது போன்ற சுதந்திரத்தை எந்த நாடும் தராதது ஆச்சர்யமே ?   

அரசியல் வாதிகள்தான் இப்படி என்றால் ! பொது மக்கள் எப்படி?  
 
சாலையோரம் சிறுநீர் கழிப்பதும் சுதந்திரம்!
சாலையிலே எச்சில் துப்புவதும்  சுதந்திரம்!
பொது இடத்தில் புகை பிடிப்பதும் சுதந்திரம் !
திறந்த வெளியில் மது அருந்துவதும் சுதந்திரம் !
பெண்களை கிண்டல் செய்வதும் சுதந்திரம் !

குறுக்கு வழியிலும் சுதந்திரம் !

எல்லாம் கிடைக்க வேண்டும் ! அதுவும் சீக்கிரம் கிடைக்க வேண்டும் ! அதற்காக சுதந்திரமாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ! முறையாக நமக்கு முன்னால் இருப்பவருக்கு கிடைக்க வேண்டிய வேலையை  குறுக்கு வழியில் தமக்கு கிடைக்குமாறு செய்ய எடுக்கப்பட்ட முயற்சிதான் குரூப்-2 தேர்வு வினாத்தாள் முயற்சி! திரு. சுஜாதா அவர்கள் இந்தியன் படத்தில் சொல்வதை போல " இங்கு எல்லா வழிகளும் குறுக்கு வழியாகிவிட்டது"



பொதுவாக மக்கள் சுதந்திர தினத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்றால்,

பதறாமல் பதினொரு மணிக்கு எழுந்து
புது முக நடிகையின் பேட்டியில் ஆரம்பித்து  
திரைக்கு வந்து சில மாதங்களான  
திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு!
செல்பேசியில்,மின்னஞ்சலிலும் வாழ்த்து அனுப்பி 
என்றைக்கும் போல் அல்லாமல் 
பீசாவும்,பிரியாணியும்  சாப்பிட்டு 
இனிதாய் முடிகிறது நம் சுதந்திர தினம் !


நம் பாரத தாய்க்கு பொறுமை அதிகம்தான்!











நன்றியுடன்
இரா.மாடசாமி 


Related Posts Plugin for WordPress, Blogger...

2 comments :

  1. அரசு என்பது வரி வசூலிப்பது மட்டுமல்ல
    போதிய கழிப்பிடம் கட்டித் தர வேண்டும்
    இல்லையென்றால் பொது இடமே கழிப்பிடம்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி தோழர் அவர்களே!

      Delete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger