Monday 25 March 2013

நான் ரசித்த தமிழ் சினிமா!ஒரு பார்வை !!-4

 வணக்கம் நண்பர்களே!
                                                நான் ரசித்த தமிழ் சினிமா ! நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடர்கிறேன் ! இது வரை பழைய திரைப்படங்களை அதிக அளவில் குறிப்பிட்டு இருந்தேன் . இந்த முறை 2000 பின் வெளிவந்த ஒரு படத்தினை  பகிர்கிறேன் !


நான் ரசித்த தமிழ் சினிமா அனைத்து பதிவுகளும் படிக்க கீழே சொடுக்கவும் !

நான் ரசித்த தமிழ் சினிமா!ஒரு பார்வை !!-1

நான் ரசித்த தமிழ் சினிமா!ஒரு பார்வை !!-2

நான் ரசித்த தமிழ் சினிமா!ஒரு பார்வை !!-3

அழகிய தீயே !     இந்த படத்தை எத்தனை பேர் ,எத்தனை முறை பார்த்திருக்கிறீர்களோ!
நான் சுமார் பத்து முறை பார்த்திருக்கிறேன் ! முதலில்  இந்த படத்தை தயாரித்ததற்க்காக திரு.பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு   நன்றியும் , வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன் ! இவர் நடிக்கும் அத்தனை திரைப்படங்களும் மசாலா வாசனை. ஆனாலும் இவர் தயாரிப்பது  யதார்த்த திரைப்படங்களை மட்டுமே ! தரமான படங்களை மட்டுமே கொடுப்பேன் என கங்கணம் கட்டிக்கொண்டு  எவ்வித மசாலா சமரசமும் செய்து கொள்ளாமல் படம் தயாரிப்பது இவரது தைரியத்தின் உச்சம் .அதற்காகவே தனியாக ஒரு சல்யூட் !

 கதையின் கரு

சினிமாவில் சாதிக்க துடிக்கும்  நாயகன் மற்றும் அவன் நண்பர்களுக்கும்  , வாழ்க்கையில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாகவும்  சுதந்திரமாகவும்  முன்னேற துடிக்கும்  நாயகிக்கு இடையிலான ஒரு கதை .


சாதாரண கதைதான்  ஆனாலும் , அதை அருமையாக  திரைக்கதை அமைத்து  கொஞ்சம் காதல் , நகைச்சுவை, செண்டிமெண்ட்  என  கோர்வையாக படமாக்கியிருக்கும் திரு. ராதா மோகனுக்கு பூச்செண்டு அல்ல பூந்தொட்டமே கொடுக்கலாம் ! பூம்!  என்ற  ஒரு வார்த்தை எப்படி காதலின் முகவரி ஆகிறது என்பதை சொன்ன விதம் அருமை !. முக்கியமாக படத்தில் துளியிலும் ஆபாசம் இல்லை என்பது கூடுதல் சிறப்பு!

சினிமாவில் பெரிய இயக்குனாராக வர நினைக்கும் பிரசன்னா திரைத்துறையின் திடீர் வேலை நிறுத்தத்தால் கஷ்டப்படுகிறார் . நண்பனின் உதவியால்  கிடைத்த சின்ன சின்ன வேலையை செய்கிறார்.அப்போது, கல்யாணம் மூலம் தனக்கு பிரச்சினை வருவதை தனது தோழியின் அண்ணன் மூலம்  பிரசன்னாவிடம் கூறி  நாயகி நவ்யா நாயர் அறிமுகமாகிறார் .பிரசன்னாவும் உதவ முன்வறுகிறார் .ஒரு கட்டத்தில் கல்யாண மாப்பிள்ளையாக வரும் பிரகாஷ் ராஜிடம் பிரசன்னா தானும் நவ்யா நாயரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக பொய் சொல்கிறார்.இதை அறிந்த நவ்யா நாயர் பிரசன்னா மீது கோபம் கொள்கிறார் . இதற்கிடையில்  இதை உண்மை என நம்பி அவர்கள் இருவருக்கும் திருமணம் முடித்து வைக்கிறார் பிரகாஷ்ராஜ் . இதற்க்கு பின் இருவருக்கும் ஒரு வீடு ஒன்றை பரிசளித்து வாழ்த்திவிட்டு செல்கிறார் . அதன்பின் அவர்களுக்குள் இருந்த மோதல் எப்படி காதலாக மாறுகிறது ! அவர்கள் எப்படி இணைந்தார்கள்  என்பது மீதி கதை .


நாயகனாக வரும் பிரசன்னாவிற்கு இந்த படம் ஒரு திருப்புமுனை என்ற சொல்லலாம் ! நண்பர்களுடனான காட்சியில்   சிரிக்க வைக்கிறார். குறிப்பாக   நாய் வாங்க போகும் இடத்தில் இடம் மாறி விபசார விடுதிக்கு செல்லும் காட்சி! வயிறு வலிக்கும் சிரிப்பு! உங்களுக்காக அந்த வீடியோவை இணைத்துள்ளேன் ! கண்டு ரசிக்கவும்! நவ்யா நாயருடனான காதலை சொல்ல போகும் கடைசி கிளைமாக்ஸ் காட்சியிலும் , நண்பன் இறந்தவுடன் அழும் காட்சியிலும் நம்மை  நெகிழ வைக்கிறார் !




நவ்யா நாயர் ! தோற்றத்தில் மட்டுமல்ல நடிப்பிலும்  அழகு ! பிரசன்னா உடனான மோதல் பின் சமரசம் என நடிப்புக்கு வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார் ! அமெரிக்கா return மாப்பிளையாக பிரகாஷ் ராஜ் பின்னி எடுத்திருக்கிறார். பிரசன்னாவின் நண்பர்களாக வரும் குமாரவேல், திலீபன் , மற்றுமொரு நண்பர் !அண்ணாச்சியாக வரும் MS பாஸ்கர் (மனுஷன் ஆஸ்பத்திரி காட்சியில் அழ வைத்துவிடுகிறார் )

இந்த படத்தில் மற்றுமொரு கதாநாயகன்! வசனகர்த்தா  விஜி! இவருடைய  வசனங்கள் படத்திற்கு வலு சேர்க்கிறது ! குறிப்பாகஹோட்டல் விருந்து நிகழ்ச்சியில் பிரசன்னா தனது காதலியை வர்ணிக்கும் இடம் .

எனக்கு பிடித்த மேலும்  சில வசனங்கள்


*  தன் தாய் கர்ப்பானவள் அப்படின்னு நீ  எந்த அளவுக்கு நம்புறியோ அந்த அளவுக்கு என்னை  நம்பலாம் !

* இந்த உலகமே அழிஞ்சு போயி , உலகத்துல இருக்குற கடைசி பொண்ணு நீயா இருந்தா கூட நான் உன்னை திரும்பி பார்க்கமாட்டேன் !

இப்படி படம் முழுக்க ரசிக்க வைக்கும் வசனங்களுடன் காட்சிகள் !

படத்திற்கு இசை ரமேஷ் விநாயகம் ! அனைத்து பாடல்களும் சூப்பர் ! விழிகளின் அருகில் வானம் காலம் கடந்து நிற்கும் !

இந்த படத்தை பற்றி இரண்டு விடயங்கள் சொல்லியே ஆகவேண்டும்

1. சினிமாவிற்குள் சினிமாவின் கதையை எடுத்தால் வெற்றி பெறாது என்ற செண்டிமெண்டை உடைத்த படம்

2. சமூக ஆர்வலர் , ஆசிரியர்  திரு . தமிழருவி மணியன் அவர்கள்  அவருடைய  ஊருக்கு நல்லது சொல்வேன்  என்ற புத்தகத்தில்  இந்த படத்திற்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார் !



உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது  அவசியம் இந்த படத்தை பார்க்கவும் !


நன்றியுடன் !
இரா. மாடசாமி


    
Related Posts Plugin for WordPress, Blogger...

4 comments :

  1. பார்த்துள்ளேன்... உங்களின் ரசனையையும் ரசித்தேன்...

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி நண்பரே ! தொடர்ந்து தளத்திற்கு வருகை தரவும் !

      Delete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger