Tuesday, 31 July 2012

நான் ரசித்த தமிழ் சினிமா ! ஒரு பார்வை !!!!

வணக்கம் நண்பர்களே,
                                                 பொதுவாக சினிமா விமர்சனங்களை நான் எழுதுவதில்லை, சினிமாவின் ரசிகனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். ஏன் எனில் , சினிமா விமர்சனம் எழுதுவது என்பது சாதரணமான ஒன்று அல்ல.அதற்க்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
இன்றைய திரை உலகில் பல கிளைத்துறைகள்  உள்ளன . நடிப்பு, இயக்கம்,ஒளிப்பதிவு, இசை,எடிட்டிங்  இன்னும் பல. இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்துதான் விமர்சனம் செய்ய வேண்டும். பல பதிவர்கள் விமர்சனம் எழுதி வருகிரார்கள் அவர்களை  நான் குற்றம் சொல்ல வில்லை. அவர்களுக்கு விஷயம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை, அனைத்தும் தெரிந்த ஒரு இயக்குனரின் படங்களை போகிற போக்கில் JUST LIKE THAT மொக்கை படம், டப்பா படம் ,சப்பை படம், என்று சொல்ல முடியாது. அப்படி சொல்வது,  நமக்கு நன்கு தெரிந்த அல்லது expert ஆன துறையை பற்றி, நமது துறையில் சிறிதும் அனுபவம் இல்லாத  ஒருவர் நம்மிடம் வந்து , "உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை" என்று கூறுவது போலத்தான் ?ஆனால் நான் ரசித்த படங்களையும்  காட்சிகளையும் நினைவு கூர்ந்து அதை இன்னொருவரிடம் பகிரலாம்.  எனவே  இந்த பதிவை எழுதுகிறேன்.  இதில் பழைய படங்களும் வரும், புதிய படங்களும் வரும்.அந்த வரிசையில் இந்த பதிவில் முதலில் பார்க்க போகும் படம்  "சுமை தாங்கி "


கதையின் கரு :
                               சுதந்திரமாக சுற்றி திரியும் ஒரு வாலிபனின் வாழ்க்கையில் , திடீரென சுமத்தப்படும் குடும்ப சுமைகள்  அவனை எந்த நிலைக்கு இழுத்து செல்கிறது என்பது தான் கதை.

 இந்த படத்திற்கு இயக்கம் திரு.ஸ்ரீதர்(நெஞ்சம் மறப்பதில்லை, கல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை படங்களை இயக்கியவர் )அவர்கள் . ஒரு அழகான கதையை , மிக நேர்த்தியோடு படமாக்கியிருப்பார். ஒரு நடுத்தர மிக்க  குடும்பத்தில் பிறந்த ஒரு  இளைஞனை  எப்படி காட்ட வேண்டுமோ  அப்படி செதுக்கி இருப்பார். எனக்கு பிடித்த இயக்குனர்களில் இவருக்கு தனி இடம்  உண்டு !


 இயக்குனருக்கு ஈடு கொடுக்கும் வகையில் திரு.ஜெமினி கணேசனும் மிக அருமையாகவும் ,  அழகாக நடித்திருப்பார். இந்த கதைக்கு இவரை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை. திரை உலகம் தான் இவரை காதல் மன்னன் என்று  சொல்கிறதே தவிர, சோகம்,கோபம், சாந்தம்  என நவ ரசங்களையும் இந்த படத்தில்  அள்ளி  தெளித்து இருப்பார். அருமையான  நடிகர். கதாநாயகியாக தேவிகா ஆசிரியரின் மகளாக நடித்திருப்பார்! அவரும் தன்  பங்கிற்கு அருமையாக  நடித்திருப்பார்.

சரி கதைக்கு வருவோம்,  ஆரம்பத்தில் சொன்னது போல படத்தின் நாயகன் கதை என்றால் வில்லன் யார்?  இருக்கிறார் , ஆனால்  இந்த படத்தில் வில்லனுக்கு வசனம் , சண்டை , கடத்தல், கார் ஓட்டுவது , எதுவுமே கிடையாது. ஆனால் படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை   ஹீரோவுடன் இவர் பயணிப்பார்! என்னங்க குழ்ம்பிடீங்களா ? சூழ்நிலை தான் இந்த படத்திற்கு வில்லன் ! நாயகனின் வாழ்க்கையில் இந்த சூழ்நிலை தான் எதிரி.

ஒரு நடுத்தர குடும்பம்.அதில், ஓய்வுபெற்ற தந்தை,பணிக்கு செல்லும்  அண்ணன், குடும்பத்தை கவனிக்கும் அண்ணி ,தங்கை,மற்றும் கதையின் நாயகன்  என அழகான  குடும்பம். கல்லூரிக்கு சென்று வருவது, சினிமா செல்வது , காதலிப்பது என ஜாலியாக சுற்றிகொண்டிருப்பவரின் வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பம். குடும்பத்திற்கு வருவாய் ஈட்டி தரும் ஒரே  நபரான  அண்ணனாகிய  முத்துராமனுக்கு  வேலை பொய் விடுகிறது . அன்று முதல் குடும்ப பாரம் அத்தனையும்  ஜெமினி கணேசன் தலையில் விழுகிறது .படிப்பை பாதியில் விட்டு விட்டு வேலைக்கு செல்கிறார். இதற்கிடையில் பழைய நண்பன் மூலமாக நல்ல வேலை ஒன்று வர , அதை அண்ணனுக்காக  விட்டுகொடுக்கிறார். வேலை செய்து சம்பாதித்த பணத்தை தங்கையுடைய  காதலனின்  வேலைக்காக கொடுக்கிறார். பின்னர், தான் காதலித்த பெண்ணை அவர் தந்தை கேட்டுகொண்டதர்க்கிணங்க காதலயும் விட்டு கொடுக்கிறார்.அனைத்தையும் இழந்து வீட்டிற்கு வந்தால் , தன் அண்ணனே தன்னை உதவாக்கரை என்று சொல்வதை  தாங்க முடியாமல் வீட்டை விட்டு செல்கிறார். அவர் என்ன ஆனார் என்பது தான் படத்தின் முடிவு . படம் முழுக்க  சூழ்நிலையானது  எந்த அளவுக்கு அவரது வாழ்வில் விளையாடுகிறது என்பதை அழகாக சொல்லி இருப்பார்கள். சிவாஜி/MGR படங்களை தவிர இந்த படத்திலும் MSV /கண்ணதாசன் கூட்டணியில்  தன்னம்பிக்கை பாடல்கள் அருமையாக இருக்கும்(மனிதன் என்பவன் தெய்வமாகலாம், மயக்கமா கலக்கமா ).

குடும்ப சுமை ஒரு இளைஞனை எவ்வளவு  கஷ்டபடுத்துகிறது என  அருமயாக எடுத்து காட்டிய படம். இந்த  படத்தை எப்போதெல்லாம் டிவி யில் போடுவார்களோ, அப்போதெல்லாம்  தவறாது பார்த்து விடுவேன் . நீங்களும் நேரம் கிடைத்தால் பார்த்துவிட்டு சொல்லுங்கள். மறக்காமல் கமெண்ட்  போடவும்.

   
நன்றியுடன்


இரா.மாடசாமி.
Related Posts Plugin for WordPress, Blogger...

2 comments :

  1. That cinema is a very nice one.I had also seen that film.Anna madasamy I am also nearer to your town .MELAVARAGUNARAMAPURAM.,neare to MUHAVUR .
    by DK., (D.Karuppasamy)

    ReplyDelete
  2. Dear Brother,
    Thank you very much for the visit & comment.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger