Tuesday, 24 July 2012

சுஜாதா - தொடர் பதிவு-2


                                                                       


வணக்கம் நண்பர்களே ,
                                              தனது சுய சரிதை, வாசகர்களுக்கு  ஒரு பயனுள்ள படைப்பாக  அமைய வேண்டும் என தான் கடந்து வந்த பாதயை  கூட  அறிவியல் தகவல்கள் ,சந்தித்த பிரச்சினைகள் , படித்த புத்தகங்கள் , என பலவற்றையும் அழகாக தொட்டு சென்றிருப்பார்.  உதாரணத்திற்கு,1953ல்   முதன் முறையாக  ஒரு  சிறுகதை  எழுதி  அனுப்பினார் .அது சிவாஜி என்ற புத்தகத்தில் வெளி  வந்தது. அதை இப்படி எழுதி இருந்தார்,



"கதை வெளிவந்த போது திருச்சி நகரமே அளம்பி   விட்டாற் போல இருந்தது.அந்த வட்டத்தில், சிவாஜி இதழின் அனைத்து காப்பிகளும் விற்று தீர்ந்தன , எல்லாவற்றையும் நானே வாங்கி விட்டதால்"

 சுஜாதா - தொடர் பதிவு-1-ல்  அவருடைய பிறப்பு , கல்வி மற்றும் பணியாற்றிய துறைகள் பற்றி அறிந்தோம் . இந்த பதிவில் அவர் எப்படி எழுத்துலகுக்கு வந்தார் என்பதை பார்போம் .


அவர் சென்னை மீனம்பாக்க்கத்தில் ஏர்  டிராபிக் கன்ட்ரோலராக , வேலை பார்த்து கொண்டிருக்கும் போதே டெக்னிகல் ஆபீசராக  டெல்லிக்கு மாற்றலாகி சென்றார். இந்த சமயத்தில் தான்  அவர் அடிக்கடி வெளியூர் செல்ல  ஆரம்பித்தார் .  இதனால் அவர்  பயண நேரங்களில்  நிறைய படிக்க நேரம் கிடைத்தது . தனது நண்பர் ஸ்ரீனிவாசனின் ,சுஷ்மா எங்கே ? என்ற க்ரைம் கதையை திருத்தி சரி கொடுக்க அது குமுதத்தில் வந்தது. அதயே  தனது படைப்புக்கான அங்கீகாரமாக  கருதி, சிறு கதைகள்  எழுத ஆரம்பித்தார்.


ரங்கராஜன் எப்படி சுஜாதாவாக மாறினார்?

சுஜாதா அவர்கள்  சிறுகதைகள் எழுதி அனுப்பிய அந்த  காலத்தில் , குமுதத்தில் ரா.கி. என அழைக்க படும்  ரங்கராஜன் அவர்கள் எழுதி கொண்டிருந்தார்.  ஆதலால் ,  இவரை வேறு ஒரு புனை  பெயரில்   எழுத  சொன்னார்கள் . அன்றிலிருந்து திரு .ரங்கராஜன்  - தனது மனைவியின்  பெயரான சுஜாதா எனும்  பெயரில் எழுத ஆரம்பித்தார்.


டெல்லியில்  பதினான்கு ஆண்டுகள் வேலை பார்த்த பின்பு பெங்களூருவில் உள்ள  BEL ல்  Deputy manager  ஆக  பணியில் சேர்ந்தார் . இங்கு தான் ,   வாக்களிக்கும் இயந்திரத்தை  தயாரிக்கும் ஆராய்ச்சி குழுவின்  Chief ஆக பணியாற்றினார். 


திரைத்துறையில் சுஜாதா
                                                            கதை, கட்டுரை,புதினம்,நாவல், நாடகம் என  எழுத்துலகில்  முன்னணியில் இருந்த சுஜாதா  , திரைத்துறையிலும் தனது வெற்றி கொடியை நாட்டினார் . இவர்  வசனம் எழுதிய முதல் திரைப்படம், இயக்குனர் சிகரம். கே. பாலச்சந்தரின்  நினைத்தாலே இனிக்கும் .   திரை துறையில்  இவர் பங்களிப்பு  கீழே  வரிசை படுத்த பட்டுள்ளது.

திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்

பணியாற்றிய திரைப்படங்கள்

                     
நன்றி :தகவல் : விக்கிபீடியா
                               
தொடரும் !


நன்றியுடன் !
இரா.மாடசாமி





Related Posts Plugin for WordPress, Blogger...

2 comments :

  1. சுஜாதா மீது தாங்கள் கொண்டிருக்கும் நேசம் அறிந்து மிக்க மகிழ்ச்சி. என்னுடைய தளத்தில் சுஜாதா-கமல் சந்திப்பு குறித்த பதிவு ஒன்று எழுதியிருக்கிறேன். பாருங்கள். மேலும் உங்கள் குறிப்புக்களில் பெங்களூரில் அவர் பணியாற்றிய நிறுவனம் BHEL என்று குறித்திருக்கிறீர்கள். தவறு. அவர் பணியாற்றிய நிறுவனம் BEL அதாவது பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இதில்தான் அவர் துணை மானேஜராகச் சேர்ந்து ஜெனரல் மேனேஜர் மற்றும் இயக்குநர் ஆகிய பதவிகளை வகித்து ஓய்வு பெற்று அதன் பின்னர்தான் குமுதம் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ,
      தளத்துக்கு வந்து கருத்தளித்து , தவறை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி ! தவறுக்கு மன்னிக்கவும்! தவறை சரி செய்துவிட்டேன்! தொடர்ந்து வருகை தரவும்!

      Delete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger