Tuesday, 30 October 2012

தவிர்க்கப்பட வேண்டிய நோய்த்தன்மை உடைய 10 உணவுகள் !!!

- 5 comments
வணக்கம்  நண்பர்களே ,
                                                 ஆரோக்கிய வாழ்க்கை என்பது நீங்கள் தேர்வு செய்வது .நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவை சார்ந்திருக்கிறது . நம் சொந்த ஆரோக்கியமானது ஆழ்ந்த தாக்கம் உடையது . உணவு ,உயிர்ச்சத்து இவற்றின் அடிப்படடைக் கொள்கைகளை  புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கிய வாழ்வின் உச்ச சக்தியை பெறமுடியும் . ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நம் உணவு பழக்கத்திலுள்ள நோய்த்தன்மை உள்ள உணவுகளை சிறிது கவனத்திற்கு கொண்டுவருவோம் .

[மேலும் படிக்க>>>]

Thursday, 25 October 2012

ஆரோக்கிய பழக்கங்கள் தொடர்பதிவு -2

- 2 comments
வணக்கம் நண்பர்களே !
                                                  ஆரோக்கிய பழக்கங்கள் தொடர்பதிவு  அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும் என நினைக்கிறேன் . இந்த பதிவில் அதையே தொடர்கிறேன் .

ஆரோக்கிய பழக்கங்கள் தொடர்பதிவு-1 படிக்க இங்கே கிளிக் செய்யவும் .


[மேலும் படிக்க>>>]

Friday, 19 October 2012

கரகாட்டக்காரனை ரீமேக் செய்யும் கெளதம் மேனன் !!!!

- 6 comments
வணக்கம் நண்பர்களே !
                                                
 நம்ம (கி)ராமராஜன் அண்ணன்,  ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் படத்துல நடிக்கிறார் ! என்னங்க  Shocking ஆ  இருக்கா ! எனக்கும்தான்!  கீழ படிச்சு பாருங்க அப்படியே காமெடியாவும்  இருக்கும். ஒன்னும் இல்லைங்க அதாவது  கரகாட்டக்காரன்  படத்த கெளதம் ரீ மேக் பண்ணுனா எப்படி இருக்கும்னு ஒரு சிறு கற்பனை மனதில் தோன்றியது . ரெண்டே ரெண்டு சீன் தான் எழுதி இருக்கேன் . படிச்சுட்டு நல்லா இருந்தா சொல்லுங்க !

             
 காட்சி :ராமராஜன் முதன் முதலா கரகம் ஆடியதை கண்டு அவருக்கு   ஷண்முக சுந்தரம் மரியாதை செய்து வீட்டிற்கு காப்பி சாப்பிட அழைக்கும் காட்சி

 ச.சுந்தரம் :  Dear All,  Well performance  done by Mr. Muthaiyan ! இந்த மாலைய  உங்க எல்லார் சார்பிலையும் இத நான் அவருக்கு போடுறேன் ! தம்பி!  நல்லா ஆடுனீங்க  தம்பி  well done !
 I have not seen ever such a dance like this ! super  தம்பி ! வெளியூர் ஆட்டகாரன  உள்ளூர்  ஆட்டக்காரன் மதிக்குறதுதாங்க மரியாதை ! 

ராமராஜன் :  தேங்க்ஸ்

அவர் சென்ற உடன்  தர்மகர்த்தா சந்தான பாரதி  ராமரஜனுக்கு மரியாதையை செய்ய வருகிறார் .


சந்திர சேகர் : Sir  ! வாட் இஸ் திஸ் ! Shame Shame puppy shame !I didn't expect from you !

கனகா : uncle leave it !  He is always doing like this !

சந்தான பாரதி: you  two  people are making problem !get lost !

கனகா  (ராமராஜனை  பார்த்து ):Hey Man ! Can you  come for competition  with me ?

ராமராஜன்: competition எல்லாம் எனக்கு கமர்கட்டு சாப்புடுறமாதிரி ! எங்க வச்சுக்கலாம் ! எப்ப வச்சுக்கலாம்

கனகா : எங்க வேணாலும் ! எப்ப வேணாலும்

ராமராஜன் : அப்ப ready ங்குற !

கனகா: Yes ! what you told ,You're going to break my knee?  Let see !

 ------------------------------------------------------------------------------------------------------------------
விருந்து சாப்பிட போகும் காட்சி

 கௌண்டமணி : தம்பி ! ( ராம ராஜன் நெஞ்சில் கைவைத்து) இங்க என்ன சொல்லுது ! காமாட்சி ! காமாட்சி னு சொல்லுதா ?

ராமராஜன் : ஆமாண்ணே ! அவ கண்ணு வழியா என்ன பார்க்கணும் போல இருக்கு !

ச.சுந்தரம் : அடேடே! வாங்க தம்பி ! என்ன அங்கேயே நின்னுடீங்க ! உள்ள வாங்க !

உள்ளே வந்தபின்

ச. சுந்தரம் : தம்பி ! have some coffee, tea, snacks !


ராமராஜன்: no thanks !

 கௌண்டமணி: தம்பி அதெல்லாம் சாபிடுறது இல்ல ! நீங்க  எங்களுக்கு மட்டும் சொல்லுங்க ! தம்பிக்கு ஒரு பீர் சொல்லுங்க !ச்ச !மோர் சொல்லுங்க !

ச.சுந்தரம் :  எம்மா  காமாட்சி  தம்பிக்கு  மோர்  கொண்டு வா !

கனகா  மோர் கொண்டுவைக்கிறார் !

அப்போது ராமராஜன் கனகாவிடம் :  I am crazy about you !

 ச.சுந்தரம்: தம்பி ! have it ! I am extremely sorry  for the incident happened on that day night . I don't like competition !


ராமராஜன்: Sorry ! i am not responsible for that  uncle !

 ச.சுந்தரம்: OK தம்பி ! Leave it ! நீங்க சின்ன வயசுல இருந்தே ஆடுறீங்க போல !  ஆட்டத்த எங்க கத்துக்கிட்டீங்க ?

கௌண்டமணி : ஆட்டகாரங்ககிட்ட !

 ராமராஜன்:  அண்ணே ! Stop  funny ! actually my father was a great dancer ! he got so many medals ! also he got medal from MGR . After his death , My mother trained me !she is also a good dancer ! எனக்கு எல்லாமே அம்மாதான்!  நீங்க கூட பார்த்திருப்பீங்களே !

ச. சுந்தரம் : நோ ! பார்த்தது இல்ல ஆனா நிறைய கேள்விபட்டுருக்கேன் ! சரி தம்பி நீங்க சாப்பிட்டுகிட்டு இருங்க நான் போயிட்டு வர்றேன் !


அவர் போனவுடன் நம்ம  அண்ணன் கிராமராஜன் காமாட்சி (கனகா ) மேல லவ்வு வந்து  பாட்டு பாட  ஆரம்பிக்கிறாரு.  கீழே சொடுக்குங்க  அந்த அழகான பாட்ட பார்க்குறதுக்கு !


என்னடா கரகாட்டக்காரன் பாட்ட போடுறதுக்கு வில்லுபாட்டுகாரன் பாட்ட போடுரான்னு பாக்குறீங்களா ! அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க ! இந்த பாட்ட பாத்ததுக்கப்புறம் தான்  எனக்கு இந்த பதிவு யோசனையே வந்தது ! அப்புறம் பாதி வசனம் ஆங்கிலத்துல வருதேன்னு குழம்பாதீங்க ! நம்ம கெளதம் படம் அப்படித்தானே  பாதி இங்கிலீஷ் பாதி தமிழ்னு  எடுப்பார் !மறக்காம  கருத்துரைக்கவும் ! பிடித்திருந்தால் ஓட்டு போட்டு  அதிகம் பேர் படிக்க பரிந்துரை செய்யவும் !

நன்றியுடன்
இரா.மாடசாமி




                                
[மேலும் படிக்க>>>]

Wednesday, 17 October 2012

ஆரோக்கிய பழக்கங்கள் 10 !!! தொடர்பதிவு -1

- 3 comments

வணக்கம் நண்பர்களே ,
                                                   சென்ற பதிவில் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான 10 ஆரோக்கிய கட்டளைகள்  பற்றி தெரிந்து கொண்டீர்களா ! இப்போது ஆரோக்கிய பழக்கங்களை பற்றி தெரிந்து கொள்வோம் .

[மேலும் படிக்க>>>]

Saturday, 13 October 2012

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான 10 ஆரோக்கிய கட்டளைகள் !!!

- 6 comments
 வணக்கம் நண்பர்களே !
                                                   இன்றைய உலகில் நாம் அனைவரும் எந்திரம் போல சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருக்கிறோம் . ஆனால் ஆரோக்யமாக இயங்கி கொண்டிருக்கிறோமா என்றால் மௌனம் தான் பதில். அதற்காகவே இந்த  பதிவு. நண்பர் ஒருவர் துண்டு பிரசுரம் ஒன்றை என்னிடம் காண்பித்தார் . அதில் உள்ள தகவல்களை அப்படியே உங்களுக்கு அளிக்கிறேன் ! இதில் வரும் ஆலோசனைகள் எதுவும் எனது சொந்த கருத்துக்கள் கிடையாது. பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

[மேலும் படிக்க>>>]

Tuesday, 9 October 2012

அப்பாவும் நானும்!! -தொடர் பதிவு -2

- 4 comments
வணக்கம் நண்பர்களே !
                                                அப்பாவும் நானும் தொடர்பதிவு  எனக்கு பழைய நினைவுகளை மீட்டுத்தருகிறது . பதிவர்கள் மற்றும் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுத்தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.இனி இந்த பதிவில் தொடர்வோம் !

-------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு ஞாயிற்று கிழமை . ஏழாம் வகுப்பு படித்துகொண்டிருந்த  நான் சாவகாசமாக தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த அப்பாவிடம், காதல் என்றால் என்ன ? என கேட்டேன் !  சமையல் அறையிலிருந்த என் அம்மா தோசை கரண்டியோடு அடிக்க வந்துவிட்டார் ! அதை தடுத்து நிறுத்திய  அப்பா,  அம்மாவிடம் " இதுல என்ன தப்பு இருக்கு" நம்மகிட்ட கேட்காம யார்கிட்ட போய் கேட்பான் ! என கூறி அம்மாவை அனுப்பிவைத்தார் . பின் என்னிடம் , உனக்கு அம்மாவை பிடிக்குமா ? அப்பாவை பிடிக்குமா ? என கேட்டார் . ரெண்டு பேரையுமே ! என்றேன் நான் . அவர் விடாமல் , யாரை அதிகமாக பிடிக்கும் என்றார் . இப்போது  சற்று நேரம் யோசித்துவிட்டு "அம்மா " என்றேன் .  இதுதான் காதல் என்றார் . புரியவில்லை என்றேன் . ஒருவர் மீது அளவு கடந்த நேசம் வைப்பதற்கு பெயர்தான் காதல் என்றார் ! எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு அழகாக சொல்லி புரியவைத்துவிட்டார் ! அன்றிலிருந்து எனக்கு அப்பாவின் மீது அளவுகடந்த நேசம் வந்துவிட்டது! மன்னிக்கவும் , காதல் வந்துவிட்டது !
-----------------------------------------------------------------------------------------------------------------------

சென்னைக்கு வந்த புதிதில் வியாபாரம் சுமாராக இருந்ததால் அப்பா ஒரு சிறிய ஒண்டி குடுத்தனம் உள்ள வீடு  ஒன்றை  வாடகைக்கு பார்த்து எங்களை குடியமர்த்தினார் . பின்னர் உறவினர் ஒருவர் எங்கள் தெருவுக்கு அடுத்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி எங்களுக்கு வாடகைக்கு விட்டார். அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீட்டிலும் கணவன் மனைவி அனைவரும் நன்கு படித்து வேலைக்கு செல்பவர்கள் ! இதை கவனித்த நான் ஒரு நாள் அப்பாவிடம் , நம்ம அடுக்கு மாடி குடியிருப்புல  நம்ம அம்மா மட்டும்தான் படிக்கலப்பா ! என்றேன் .  பொளேரென அடி விழுந்தது என் கன்னத்தில் ! அப்பாவேதான் ! அம்மா மௌனமாகவே இருந்தார் !
அப்பா,என்னடா ! ரொம்ப படிசுட்டோம்னு திமிரா உனக்கு? அம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேள் !என்றார்.மன்னிப்பு கேட்டேன் !  நான் செய்த தவறுக்கு வெட்கி தலைகுனிந்தேன் !  யாரையும் தரகுறைவா பேசக்கூடாது ! நீ அவங்க வயித்துல இருந்துதான் வந்த அத மறந்துறாத !  என்றார் . அவர் பேச பேச என் மண்டையில் சம்மட்டியில் அடித்தது போல் இருந்தது. எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டோம் என அன்று தான் உரைத்தது.  அந்த நிகழ்வுக்கு பிறகு  இன்றளவும் அவர்  சொன்ன வார்த்தைகளை காப்பாற்றி வருகின்றேன் .



நன்றியுடன்
இரா.மாடசாமி.


[மேலும் படிக்க>>>]

Wednesday, 3 October 2012

தொலைந்து போன விளையாட்டுக்கள் !

- 9 comments
வணக்கம் நண்பர்களே!
                                          ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு ஊரிலிருந்து ஒரு உறவினர் வந்திருந்தார் !  அவர்  ஒரு ஆசிரியர் ! எனது மகனை  பார்த்து உன்  பெயர் என்ன? என்ன படிக்கிறாய்?  என கேட்டார் ! அவனும் பதில் சொல்லிவிட்டு !  தொலைகாட்சியில்  சிறுவருக்கான அந்த அலைவரிசையை பார்ப்பதில் ஆர்வம் காட்டிகொண்டிருந்தான் ! அவர் என்னை பார்த்து , பையன  வெளியில கூட்டிட்டு போறதில்லையா ? என கேட்டார் ! நான் இல்லை என்பது போல் தலை அசைத்தேன் ! அவர், நம்ம ஊர்னா தெருவில இருக்குற பசங்க கூட விளையாடலாம். இங்க எங்க முடியுது. பூட்டி வச்ச இரும்பு கம்பிக்கு உள்ளதான் இருக்க வேண்டி இருக்கு என சொல்லி பின் சிறிது நேரத்தில் சென்று விட்டார் ! அவர் சென்றவுடன் எனது சிறுவயது ஞாபகங்கள் என்னை என் ஊருக்கு அழைத்து சென்றது ! அதை பற்றிய ஒரு பதிவு இது !


கிராமத்தில் நான் சிறுவனாக இருந்த பொது பள்ளியில் இருந்து நேராக வீட்டுக்கு வந்த உடன் பையை  ஒரு மூலையில் போட்டுவிட்டு தோப்பிற்கு விளையாட சென்று விடுவேன் !  நிறைய  விளையாட்டுக்கள்  விளையாடுவோம் ! ஓடிபிடிப்பது, மறைந்து விளையாடுவது , உப்புமூட்டை , மணலில் வீடு கட்டுவது ,  கோலி , பல்லாங்குழி, திருடன் -போலீஸ் ,பரம பதம், கண்ணாமூச்சி ,  சிறிய சாமான்களை வைத்து  சோறு பொங்குதல் , போன்ற பல விளையாட்டுக்கள் விளையாடுவோம். இதில் ஒவ்வொரு  விளையாட்டும்  நம் வாழ்க்கையின் ஒரு உணர்வை வெளிபடுத்தும் .  ஓடிபிடிப்பது -  ஓட்ட பயிற்சி , உப்புமூட்டை - வலிமை சேர்க்கும் , மணல் வீடு - சோறு பொங்குதல்  போன்றவை  சிறுவர்களுக்குள்ள ஒற்றுமையை  உணர்த்தும், பல்லாங்குழி - சேமிப்பு மற்றும் எண் கணக்கின் அவசியத்தை உணர்த்தும் , . மேலும்  இரவில் ஒரு விளையாட்டு விளையாடுவோம்  அதன் பெயர்  கூட்டாஞ்சோறு   அதாவது ஒவ்வொருவரும் தத்தம் அவரது வீட்டில் செய்த  உணவை, அனைவரும் எடுத்துகொண்டு யாருடைய  வீட்டிலாவது  வைத்து பகிர்ந்து உண்ண வேண்டும் !  தினம் ஒரு வீடு வீதம் , ஒவ்வொரு வீடாக சென்று சாப்பிட வேண்டும் ! இந்த விளையாட்டில்   விட்டுகொடுத்தல் , சகோதரத்துவம் , போன்ற பண்புகளை  வளர்க்கும் ! 
இன்னொரு விளையாட்டு உங்களுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியாது ! அதன் பெயர் படப்பெட்டி ! அதாவது ஒரு கட்டத்தில் தமிழ் படங்களை எழுதி அதை கோடு  போட்டு பிரித்து அதில் சுமார் 30  முதல் 40 படங்கள் எழுதி வைத்திருப்பார்கள் . பைனான்சியர் ஒருவர் இருப்பார் , அவரிடம் காசு கொடுத்து ஒரு படம் வாங்கி கொள்ளவேண்டியது ! பரம பதம் போல கட்டையை உருட்ட வேண்டும் . நான்கு பேர் விளையாடும் அந்த ஆட்டத்தில், காசு கொடுத்து வாங்கிய உங்கள் படத்தின்  கட்டத்தில் மேல் நின்று விட்டால்  அதற்க்கு காசு கொடுக்க வேண்டும் !  பணத்திற்காக  சிகரெட் அட்டைகள் பயன்படுத்துவோம். இதைத்தான் பேங்க் கேம் என சீனாகாரன் நம்மை ஏமாற்றுகிறான்!


இவ்வாரான விளையாட்டுக்கள்  இப்போது அழிய காரணம்  புத்தகசுமை,நேரமின்மை , நகரமயமாதல், சிறுவர்களுக்கான தொலைக்காட்சி அலைவரிசை என நிறைய  வந்தபின் தான் !  இப்போது  எனது மகன் பள்ளி விட்டவுடன்   குழந்தைகளுக்கான  அலைவரிசை , வீட்டு பாடம் , சாப்பாடு , தூக்கம்  என அவன் வாழ்க்கையே மாறிக்கிடக்கிறது ! இதற்க்கு பின்னால் வரும் தலைமுறையை நினைத்தால் இன்னும் பயமாக இருக்கிறது. 


[மேலும் படிக்க>>>]
 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger