Friday 31 August 2012

திரும்பி பார்க்கிறேன்! கழுத்து சுளுக்கிகிச்சு!!!

வணக்கம் நண்பர்களே ! 

                                                என்னடா  தலைப்பு  இப்படி இருக்கிறதே என  பார்க்க வந்தீர்களா!  இந்த பதிவு என்னுடைய 25 வது  பதிவு ! மிகவும் முக்கியமானது! திரும்பி பார்க்கிறேன்னு மட்டும்  போட்டா  வரமாட்டீங்கன்னு எனக்கு தெரியும் ! அதனால் தான் கழுத்து சுளுக்கிகிச்சு  அப்படீன்னு  சேர்த்து போட்டேன்  ! எப்படி ?!  







ஒரு நாள்   ஆனந்த விகடனை புரட்டி கொண்டிருந்தபோது நண்பர்  திரு.பிலாசபி பிரபாகரன்  அவர்களின் தளம் பற்றிய  அறிமுகம் பதிவாகியிருந்தது.தொடர்ந்து அவர் தளங்களுக்கு சென்று பார்வையிட்டேன் ! மிகவும் பிடித்திருந்தது !  பின்னர் நாமாகவே ஒரு தளத்தை தொடங்கலாம் என எண்ணினேன் !  தளத்தை  தொடங்கினாலும் அதன் அமைப்பை உருவாக்கிய பெருமை  நண்பர் திரு.அப்துல் பாசித்   மற்றும்  திரு தங்கம் பழனியையே மற்றும் சாரும் ! இவர்களின் தளத்தில் சென்று கற்ற பின்தான் என்னுடைய தளம் இவ்வாறு காட்சியளிக்கிறது . புதிய பதிவர்கள் இவர்களின் தளங்களுக்கு சென்று  பார்வையிடுவது நல்லது ! 

தளத்தை தொடங்கினாலும் , பதிவை போடவேண்டும்! அதை படிக்க வேண்டும் ! என்ன செய்வது? முதலில் எனது தளத்தை அலுவலக நண்பர்களிடம் அறிமுகம் செய்தேன் ! கிண்டல் செய்ய ஆரம்பித்தனர் !
நண்பர்  திரு .ராஜாராமன் மட்டும் ஊக்கம் கொடுத்தார்.  Follower யாரும்  கிடைக்கவில்லை ! அதனால்  வல்லுகட்டாயமாக  அவரை  சேர்த்தேன்! இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது!யாருமே இல்லாத டீ கடையில யாருக்குங்க டீ ஆத்துறீங்க என்பார்! எனக்கு முதலில் கமெண்ட் போட்டது கல்லூரி நண்பர் காளிமுத்து ! பதிவுலகம் எனக்கு கை கொடுக்காது என ஒரு ஆதங்கத்தில் பதிவுலகத்தை கிண்டல் செய்து  ஒரு பதிவை போட்டேன்! அதுதான் பட்டையை கிளப்பும் பராசக்தி சிவாஜி கணேசன் ! அதை படித்து விட்டு நண்பர்   திரு. வரலாற்று சுவடுகள்  கமெண்ட்  போட்டார் ! மகிழ்ச்சியாக இருந்தது! 

பின்னர் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன் ! நான் ரசித்த தமிழ் சினிமா !,சுஜாதா தொடர் பதிவு ! மிகுந்த வரவேற்ப்பை பெற்றது !  சுய விளம்பரம் போதும் என நினைக்கிறேன் . என்னை ஊக்கபடுத்தியவர்கள் , என்னை தொடர்கிரவர்கள் தளத்திற்கு வந்து பார்வையிட்டவர்கள் , அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் !   தொடர்கிறேன் எனது பணியை உங்கள் வாழ்த்துக்களோடு !  சிறிய கவிதை அல்லது கிறுக்கலுடன் இந்த பதிவை முடித்து கொள்கிறேன் ! 

ஓடி களைத்தவனுக்கு
வேர்வை  வரவில்லை 
மின் விசிறி !

வன்முறை வார்த்தைகள்  
இனிக்கிறது 
மழலையின்  குரலில் 
ஒய்  திஸ் கொலைவெறி !

நகக் கீறலின் 
காயங்களை 
வேர்வை முத்துக்கள் 
நனைத்தது 
முதல் இரவு ! 

பள்ளிக்கு புதிது 
அறிவியல் தமிழ்
எனக்கு பழசு 
சுஜாதா ! 
ஏன் ? எதற்கு ? எப்படி ?

வரலாற்று தினங்களை 
தாங்கி பிடிக்கிறது 
என் வீட்டு சுவர் 
காலண்டர் !
 

நன்றியுடன் 
இரா. மாடசாமி 




Related Posts Plugin for WordPress, Blogger...

13 comments :

  1. அசைப்பேர்டுவதும் அழகே....

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete
  3. தங்கள் நட்பில் இணைந்ததில் மகிழ்கிறேன் சார்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே!எழுத்தால் இணைவோம் !

      Delete
  4. நல்லாருக்கு.தொடருங்க

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அய்யா ! உங்களை போன்ற மூத்த பதிவர் என்னுடைய தளத்திற்கு வருகை தந்தது மிக்க மகிழ்ச்சி !

      Delete
  5. என்னை குறிப்பிட்டு எழுதியமைக்கு நன்றி மாடசாமி...

    நானும் பதிவுலகம் வந்த புதிதில் டிட்டோ உங்களைப்போலவே தான் இருந்தேன்... அலுவலக, கல்லூரி நண்பர்களை வலுக்கட்டாயமாக சேர்த்தது, ஒண்ணுக்கும் ஆகாத பதிவை எழுதிட்டு எல்லோரையும் படிங்க படிங்க'ன்னு மெசேஜ் அனுப்பிட்டு இருந்தேன்...

    போக போக எல்லாம் சரி ஆயிடும்... தொடர்ந்து அயர்ச்சியடையாமல் எழுதுங்கள்...

    அப்புறம், தயவு செய்து பின்னூட்டபெட்டி ஸ்டைலை மாற்றவும்... தொடர்ந்து பத்து நிமிடங்களாக பின்னூட்டம் போட முயற்சி செய்து இப்போதுதான் முடிந்திருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே!மன்னிக்கவும்! உங்களின் பெயரை போட்ட நான் உங்கள் தளத்தின் லிங்க் கொடுக்க மறந்து விட்டேன் ! இப்போது சரி செய்துவிட்டேன் ! உங்களின் வருகைக்கு நன்றி ! பின்னூட்ட பெட்டியை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை!முயற்சி செய்கிறேன் !

      Delete
  6. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே !

      Delete
  7. கவிதைகள் சூப்பர்.. :)

    ReplyDelete
    Replies
    1. நட்பில் இணைந்ததற்கு நன்றி நண்பரே!

      Delete
  8. இருபத்தி ஐந்தாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே! பதிவு எழுதிய தொடக்கத்தில் அப்படி தான் இருக்கும். எனக்கு முதல் பின்னூட்டமே என் மூன்றாவது பதிவில் தான் கிடைத்தது. என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger