Thursday 27 September 2012

அப்பாவும் நானும்! தொடர்பதிவு-1!



வணக்கம் நண்பர்களே!  
                      ஒவ்வொருவருக்கும் தனது முதல் ரோல் மாடல் தனது தந்தைதான் என்று சொன்னால் அது மிகை ஆகாது! எனக்கும் அதுபோலத்தான். என் தந்தைக்கும் எனக்கும் இடையில் நடந்த சில சுவையான சம்பவங்களை உங்களுடன் பகிர்கிறேன்.
அரசாங்க பணியில் விருப்ப ஒய்வு வாங்கிவிட்டு சொந்தமாக தொழில் செய்வதற்காக  சென்னையில் சிறிய மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார். வருமானம் சொல்லும் படியாக இல்லை . விடுமுறை தினங்ளில் அடிக்கடி கடைக்கு சென்று வருவேன். ஒரு நாள், தந்தை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது நான் கடையை பார்த்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு வாடிக்கையாளர், தம்பி! க்ளோசப் பேஸ்ட் ஒன்னு கொடு! என கேட்டார், நான் தேடி பார்த்துவிட்டு,க்ளோசப் இல்லைங்க! என்றேன். உடனே அப்பா உள்ளிருந்து சார் கோல்கேட் தரட்டுமா? என்றார்! வாடிக்கையாளரும் சரி என வாங்கி சென்றார். உடனே என் தந்தை என்னை பார்த்து வியாபாரம் எப்படி செய்யனும்னு கத்துக்க! கெடுக்காத என்றார், அசிங்கமாக போய் விட்டது எனக்கு! எப்படியாவது தந்தையிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என உறுதி எடுத்துகொண்டேன். சற்று நேரத்தில் இன்னொரு வாடிக்கையாளர், தம்பி ! வாழைப்பழம் இருக்கா? என  கேட்டார். அப்போதுதான் விற்று தீர்ந்தது வாழைப்பழம். ஆனாலும் என் தந்தையிடம் நல்ல பெயர் வாங்கும் ஆர்வத்தில் , சார் பேரீச்சம்பழம் இருக்கு தரட்டுமா? என்றேன். வாடிக்கையாளரும் அப்பாவும் என்னை பார்த்து சிரித்தனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா முதல் முதலாக சபரிமலைக்கு மாலை போட்டார்! எங்கள் வீட்டில் அதிக சந்தோஷம் எனக்குத்தான். காரணம். மாலை போட்டால் அப்பா அடிக்கமாட்டார், திட்டமாட்டார் என அம்மா சொன்னார்! அது போலவே அப்பாவும் என்னை வாங்க சாமி,போங்க சாமி என்றார். ஒரு நாள் மொத்த வியாபாரம் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு கடை திரும்பினேன். என் போதாத நேரம் , ஒரு பொருள் மிஸ்ஸிங். சரி அப்பாதான் மாலை போட்டிருக்கிறாரே நம்மை திட்ட மாட்டார் என சந்தோஷமாக இருந்தேன். இடிவிழுந்தது அந்த எண்ணத்தில், அட புறம்போக்கு சாமி! எருமமாடு சாமி ! உனக்கு அறிவு இருக்கா சாமி! என மரியாதையோடு திட்ட ஆரம்பித்தார்! கொடுமைடா சாமி என நானே நொந்துகொண்டேன் !   

தொடரும் !!!!!!


நன்றியுடன் 
இரா.மாடசாமி                        





Related Posts Plugin for WordPress, Blogger...

2 comments :

  1. சுவாரஸ்யமாக உள்ளது... (உண்மைகளை சொல்வதற்கு பாராட்டுக்கள்...)

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. சாமியோவ் உங்கள் அனுபவ உண்மை நன்றாக இருக்கிறது

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger