வணக்கம் நண்பர்களே !
அண்மையில் நடந்த சிவகாசி வெடிவிபத்து என்னை நிலை குலைய செய்தது ! விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன் என்கிற முறையிலும் , அந்த ஊரில் தங்கி படித்தவன் என்கிற முறையிலும் என்னை இன்னும் வெகுவாகவே பாதித்தது! வெடி விபத்தில் இறந்து போன அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை இந்த கவிதை/பாடல் மூலம் தெரிவித்து கொள்கிறேன் !
தெற்கு தமிழ் நாட்டினிலே தொழில் செய்யும் நகரமுங்க !
கரிசல் மண் பூமியிலே கந்தக காத்து வீசுமுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !
பட்டாசு செய்வதிலே பெயர் வாங்கி குடுத்ததுங்க , இன்று
பட்டாசு விபத்துக்கு பெயராகி போனதுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !
ஒரு நாளு பண்டிகையாம் உங்களுக்கு தீபாவளி ! அதுக்கு
ஒரு வருஷம் உழைப்பாங்க எங்க ஊரு தொழிலாளி !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !
மாவட்ட செய்தியிலே ஓரமாக வந்ததுங்க ! இன்று
மாநிலத்தின் செய்தியிலே தலைப்பாக வந்ததுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !
அப்பப்போ வெடிவிபத்தில் பெரிய சத்தம் கேக்குமுங்க !
அப்பமட்டும் சர்க்காரு சைரன் சத்தம் கேக்குமுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !
பாஸ்பரசும் , கந்தகமும் வாழ்க்கையாகி போனதுங்க !எங்களுக்கு
பட்டாசு வெடி விபத்து வழக்கமாகி போனதுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !
நன்றியுடன் !
இரா.மாடசாமி

Tweet | |||||
உணர்ச்சிப் பூர்வமான கவிதை. சொல்லப் போனால் கவிதை போல் இல்லை நாட்டுபுறப் பாடல் போல் இருந்தது...
ReplyDeleteமறக்கமுடியாத கொடிய சம்பவம்..
ReplyDeleteமீண்டும் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள அனைவரும் உறுதிஎடுக்க வேண்டும்
@சீனு,
ReplyDeleteநன்றி நண்பரே!
@கவிதை வீதி... // சௌந்தர் //
ReplyDeleteஒவ்வொரு முறையும் அரசாங்கம் இதை சொன்னாலும் விபத்து மட்டும் நடந்து கொண்டேதான் இருக்கிறது நண்பரே !