Wednesday, 12 September 2012

புரியாத பாடல்வரிகளும் ! அதன் அர்த்தங்களும் !

வணக்கம் நண்பர்களே !
                                                 இன்றைய காலங்களில்   நல்ல திரைப்பட பாடல்கள்  வந்தாலும், வார்த்தைகள்  புரிவதில்லை.அதற்காகவே மிக அரும்பாடுபட்டு அந்த பாடல் வரிகளின் அர்த்தம் கண்டுபிடிக்கும் முனைப்பில் இறங்கி சிலவற்றை மட்டும் கண்டுபிடித்துள்ளேன். இது யூகத்தின் அடிப்படையில் கண்டுபிடிக்க பட்டது . பாடலாசிரியர்  என்ன நினைத்து எழுதினாரோ எனக்கு தெரியாது !


முதலில் இப்போது திரை அரங்குகளில் ஓடிகொண்டிருக்கும் "நான்" திரைப்படத்தில் வரும் " மாக்க ஏல, மாக்க ஏல, காயகவுவா " அதாவது திருநெல்வேலியை மற்றும் தூத்துக்குடி பகுதியை சார்ந்த மக்கள் தமக்கு  நெருக்கமானவர்களை "ஏலே மக்கா" என அன்போடு அழைப்பர்கள். அதனை அடிப்படையாக கொண்டு  பாடலாசிரியரும் இசை அமைப்பாளரும் அதை மாற்றி போட்டு "மாக்க ஏல" என  வரிகளை அமைத்துள்ளனர். மேலும்  "கையை கழுவ வா " என்பதன் சுருக்கமே "காயா கவு வா" என்பதாகும் . இப்போது படியுங்கள்  ஏலே மக்கா,ஏலே மக்கா,சாப்பிட்டு விட்டு கையை கழுவ வா என்பதே இதன் பொருளாகும் .

அடுத்து , காக்க காக்க படத்தில் வரும் "ஓமகா சீயா மாகியாஹா ,ஹீமோ மகாசகியா " இந்த பாடல் படமாக்க பட்டிருக்கும் இடம் கடற் பகுதி  அதை உணர்த்தவே  இந்த வரிகள் (மகா- பெரிய ,"SEA"yaa   - கடலே )  (மாகியாகா- யாதுமான) (ஹீமோ - மானிடன் ) (மகா- பெரிய )( சகியா -தோழியா)
ஓமகா சீயா -ஒ  பெருங்கடலை போன்றவளே !
மாகியாஹா-எல்லாமாகிய !
ஹீமோ மகாசகியா -  மானுடத்தில் பெரிய தோழியே

அடுத்து , காதலில்  விழுந்தேன் திரைப்படத்தில் வரும் அட்ரா  அட்ரா நாக்க முக்க என்ற  பாடல். குத்து சண்டையில் நாக் அவுட்   என்று அழைக்கப்படும் ஒரு முறையாகும் . அதாவது மூக்கில் அடித்து  நாக் அவுட் செய் என்பதே இதன் விளக்கம் விரிவாக சொல்ல போனால் அடிடா! அடிடா! மூக்கில் அடித்து நாக் அவுட் செய்  என்பதாகும்

அடுத்து ஒரு பழைய பாடல் ! சூரியன் படத்தில் வரும் லாலாக்கு டோல் டப்பிமா ! லா - விதி , லாக்கு-பூட்டு , டோலு - சுங்க சாவடி , டப்பி,டப்பு- காசு
அதாவது  பூட்டியிருக்கும் சுங்க சாவடியில்  விதிப்படி காசு கட்டிவிட்டு செல்லுங்கள் என்று பாடலாசிரியர் கூறுகிறார்.

நண்பர்களே ! இந்த பாடல்களின்  ரசிகர்கள் கோபம் கொள்ள கூடாது!  புரியாத வரிகளை அர்த்தம் கண்டுபிடிக்கும் ஒரு சிறு முயற்சியே . இது ஒரு வானவில்லின்  இலக்கிய ஆராய்ச்சியின்  படைப்பு ! இந்த படைப்பிற்கு விழும் ஓட்டுக்களின் எண்ணிக்கையை பொறுத்து அடுத்த ஆராய்ச்சி தொடங்கும் !


நன்றியுடன் !
இரா.மாடசாமி
Related Posts Plugin for WordPress, Blogger...

13 comments :

 1. அருமையாக ஆராய்ச்சி செய்து
  பதிவிட்டுள்ளீர்கள்
  நிச்சய்ம் பாடலாசிரியர்கள் இதைப்படித்தால்
  ஆகா இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா என
  சந்தோஷப்பட்டுக்கொள்வார்கள்
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. @Ramani,
  நன்றி திரு. ரமணி அவர்களே ! தொடர்ந்து தளத்திற்கு வரவும் !

  ReplyDelete
 3. இவ்வளவு நாள் தெரியாம இருந்தது சார்...

  இப்ப தெரிந்து கொண்டேன்...

  ReplyDelete
 4. @திண்டுக்கல் தனபாலன்,
  நன்றி நண்பரே !

  ReplyDelete
 5. அப்ப உங்களுக்கு பதிவு போட வஞ்சனையே இருக்காதுங்க...

  இதுபோல இருக்கிற எல்லா தமிழ்பாடலுக்கும் விளம்க்ம்போட்டுடுங்க...


  அப்படியே அதை எழுதியவர்களுக்கு ஒரு மெயில் அனுப்பி வையுங்க...

  ஏன்ன அவர்களுக்கு கூட இந்த விளக்கம் தெரியாதுபோல...

  ReplyDelete
 6. கவிதை வீதி... // சௌந்தர் //
  உங்களை போன்ற நண்பர்களை நம்ம தளத்துக்கு வந்து ஏமாந்து போக கூடாது ! அதற்க்ககத்தான் அவ்வப்போது சில நகைச்சுவை பதிவு எழுதுகிறேன் ! உங்கள் கருத்துக்கு நன்றி !

  ReplyDelete
 7. மகத்தான பல அரிய தத்துவங்களுக்கு எளிமையான பதவுரை, பொழிப்புரைகளுடன் விளக்கமளித்துள்ள தங்களது உன்னதமான முயற்சி பாராட்டத்தக்கது. இதைப் புத்தகமாக்கி அரசு நூலகங்களில் வைத்தால், எம் போன்றவர்களின் அறிவுக்கண் திறக்க உதவியாயிருக்கும் என்ற கோரிக்கையைத் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

  :-)))))

  ReplyDelete
 8. அருமையாக ஆராய்ச்சி

  ReplyDelete
 9. @சேட்டைக்காரன்,
  கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே !

  ReplyDelete
 10. @BKK ,
  கருத்துக்கு மிக்க நன்றி . தொடர்ந்து தளத்திற்கு வருகை தரவும் .

  ReplyDelete
 11. இலக்கியப் ஆராய்ச்சி வாழ்க....

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger