Thursday, 13 September 2012

யார் நடிகன் ?

வணக்கம் நண்பர்களே !
                      என்னுடைய முந்தைய பதிவான புரியாத பாடல்வரிகளும் ! அதன் அர்த்தங்களும் ! பதிவு அனைவருக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.நிறைய பேர் பாராட்டி எழுதி இருந்தனர்.அனைவருக்கும் நன்றி ! 


அண்மை காலமாக  திரை உலகில் நான் அடிக்கடி கேள்விப்படும் ஒரு நிகழ்வு.அதாவது ஒரு பெரிய இயக்குனரும்,பெரிய நடிகரும் இணைந்து ஒரு படம்  பண்ண ஒப்புகொண்டு  பின்னர் அதை கைவிடுவது! காரணம் கேட்டால், அந்த பெரிய  நடிகர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிடுவார்.அது என்னவெனில்" இந்த கதை எனக்கு பொருந்தாது" "என்னுடைய ரசிகர்கள் விரும்பமாட்டார்கள்" என்று கூறுவார். இதை பற்றிய  ஒரு சிறு அலசல் இந்த பதிவு.


யார் கதாநாயகன்!
                  எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் கதையின் கருவை உள்  வாங்கி கொண்டு,கதைக்கு பொருந்தி, அதற்கேற்றாற்போல் தம்மை மெருகேற்றி  நடிக்க கூடியவர்தான் கதையின் நாயகன் ! ஆனால் இன்று கதா நாயகன் வெறும் நாயகனாக  மட்டுமே நமக்கு தோற்றமளிக்கிறார்.  அன்றைய காலத்தில்  நடிகர் திலகம்  திரு .சிவாஜி அவர்கள் கதைக்காக மட்டுமே நடித்தார். அவர் அவ்வாறு  நடிக்கவில்லை எனில் ஒரு வீரபாண்டிய கட்டபோம்மனையோ, கப்பலோட்டிய தமிழனயோ , கர்ணனயோ  நாம் அவர் உருவில் கண்டிருக்க முடியாது !

ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ,பொது மக்களின் எதிர்பார்ப்பும் !

என்னதான் மக்களுக்காக நடித்தாலும் ரசிகர்கள்தான் தியேட்டருக்கு முதல் நாளில் வந்து எங்களை வாழ்த்துகிறார்கள் ! படம் வெளியிடும் முதல் நாள்  வேலையை விட்டு விட்டு விடிய விடிய உழைக்கிறார்கள் அதனால் அவர்களின் ரசனைக்குத்தான் படம் எடுக்க முடியும்  என்று கூறலாம் ! ஒரு  ரசிகன் எதனால் ஒரு நடிகருக்கு ரசிகராகிறான் ! அந்த நடிகரானவர்  ஏதோ  ஒரு வகையில் அந்த ரசிகனை ஈர்க்கிறார்!  உடனே அந்த நடிகர் மீது பற்று உண்டாகிறது.அவ்வளவுதான் அடுத்து வரும் படங்களில் அந்த நடிகர் நடித்தாலும் சரி! இல்லை என்றாலும் சரி! ஆனால் ஒரு சாதாரண , நடுநிலையான ஒருவர்  படத்தில் நடிகரின்  நடிப்பையோ , அவர் செய்யும்  சாகச காட்சிகளையோ   மட்டும் விரும்புவதில்லை  மாறாக  படத்தின் அத்தனை அம்சங்களையும் விரும்புவார் ! பிடித்திருந்தால்  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிந்துரை செய்வார்! இவ்வாறு பரிந்துரை செய்த படங்கள் தான் நூறு நாட்களுக்கு ஓடுகிறது! 

கதைக்காக நடித்ததால்தான் சிவாஜிக்கு   இன்றளவும் நமது தாத்தா ,பாட்டி கூட ரசிகர்களாக இருக்கிறார்கள். மக்கள்  அவருக்கு நடிகர் திலகம் என பட்டம் சூட்டினரே அன்றி  யாரும்  ரசிகர் திலகம் என்று பட்டம் கொடுக்கவில்லை! ஒரு குறிப்பிட்ட ரசிகர்  கூட்டத்துக்கு  மட்டும் நடிப்பேன்  என்று சொன்னால் அந்த நடிகரை  மக்கள் மறக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை !நன்றியுடன்!
இரா.மாடசாமி  


Related Posts Plugin for WordPress, Blogger...

6 comments :

 1. நல்ல அலசல் சார்.. நடிப்பையும் தாண்டி பொது வாழ்வில் நடிக்காமல் இருக்கும் நடிகனையும் தமிழன் விரும்புவான் எண்பது என் கருது

  ReplyDelete
 2. @சீனு,
  சரியாக சொன்னீர்கள் ! கருத்துக்கு மிக்க நன்றி !

  ReplyDelete
 3. /// வீரபாண்டிய கட்டபோம்மனையோ, கப்பலோட்டிய தமிழனயோ , கர்ணனயோ நாம் அவர் உருவில் கண்டிருக்க முடியாது ///

  இதற்கு மேல் என்ன சொல்ல முடியும்... ?

  சிவாஜி அவர்கள் மூலம் பாடம் தான் கற்க முடியும்... கமல் பக்கத்தில் வருகிறார்...

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

   Delete
 4. Above 13 years ,one day the main and special scenes were in all the channel on INDEPENDENCE day .All that was occupied by the great Sivaji .My daughter asked and expressed her wonder on his actions .Your post is very nice
  by DK., (D.Karuppasamy)

  ReplyDelete
  Replies
  1. Dear Friend ,
   Thank you very much for your comment .

   Delete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger