Tuesday, 18 September 2012

இளையராஜா ! இசையராஜா!

வணக்கம் நண்பர்களே !
                                                 அண்மையில் "நீதானே என் பொன் வசந்தம்" படத்தின் இசை வெளியீட்டு விழாவினை தொலைகாட்சியில்  பார்த்தேன் ! இளையராஜாவின் இசையில் நிறைய எதிர்பார்ப்புக்களோடு திரைக்கு வர இருக்கிறது ! பொதுவாக இளைய ராஜா இசை வெளியீடு நிகழ்சிகளில் பங்கேற்க மாட்டார். இப்போது அடிக்கடி பங்கேற்று  ரசிகர்களுக்கு உற்சாகமூட்டுகிறார் . நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைஞானி இசையில் வெளிவந்த சில முத்தாய்ப்பான பாடல்களை அவருடைய இசை குழுவில் உள்ளவர்கள் வாசிக்க கேட்டேன். அது  என்னை கொஞ்சம்  பின்னோக்கிய  காலத்திற்கு அழைத்து சென்றது ! அதை பற்றிய  ஒரு பதிவுதான் இது .  இந்த பதிவு முழுக்க முழுக்க இசைஞானி அவர்களுக்கு சமர்ப்பணம் .


இளையராஜா ! தமிழ் சினிமாவிற்கு என்றுமே இசையராஜாதான் இரா.பார்த்திபன் சொன்னதுபோல ! 1970-80 கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் இசை துறையில்  ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வந்த இசை சக்கரவர்த்தி !  இசை என்பது கேட்க கூடியதல்ல ! உணரக்கூடியது !அந்த உணர்வை தனது ஒவ்வொரு பாடலிலும் தருகிறவர் இசைஞானி ! இன்றளவும் பின்னணி இசையில் இவரை அடித்து கொள்ள ஆளே இல்லை எனலாம் ! மற்றவரின் இசை நம்மை மகிழ்ச்சி படுத்தும் ! இவரின் இசை மட்டுமே  நம்மை பரவசபடுத்தும் !

 " புது ராகம் படைப்பதாலே நானும் பிரம்மனே " ஆம் ! இவர் உண்மையில் இசைக்கான பிரம்மன் ! ஒவ்வொரு படைப்பும்  ஒவ்வொரு விதம் !முந்தய படைப்பின்  சாயம் இல்லாமல் நேர்த்தியாக  இன்னொன்றை   படைப்பதில் இவர் பிரம்மன் தான் !

இவரது படைப்பில் எனக்கு பிடித்த சிலவற்றை  உங்கள் முன் பகிர்வதில
மகிழ்ச்சியடைகிறேன் .

தாய் மூகாம்பிகை! " ஜனனி ! ஜனனி!  என்ற இந்த பாடல்  கண்களை  மூடிக்கொண்டு  தனி  அறையில் நீங்கள் கேட்டால்  கண்டிப்பாக ஒரு  மாற்றத்தை உணர்வீர்கள்!

அவதாரம்!"தென்றல் வந்து தீண்டும்போது" என்ற பாடலின் சரணத்துக்கு முன் வரும்" தந்த தான" என தொடங்கும்  ராஜாவின் ஹம்மிங் ! சான்ஸே இல்லை ! ராஜா ராஜா தான் !

அரங்கேற்றவேளை ! " ஆகாய வெண்ணிலாவே "இந்த பாடலின் பல்லவியில் வரும் ஒவ்வொரு வரிகளும் ஏற்ற இறக்கத்துடன் அழகான  சந்தம்!மேலும் பல்லவிக்கு முன் வரும் வயலின் இசை மனதை மயக்கும் !

மூன்றாம் பிறை !"கண்ணே கலைமானே"! சிறு வயதில் இந்த பாடலை போட்டுவிட்டால் தானாகவே  தூங்கி விடுவேனாம் ! அம்மா  சொன்னது ! அருமையான தாலாட்டு !

பன்னீர் புஷ்பங்கள் !"ஆனந்த ராகம் " என்ற பாடல்களுக்கு முன் வரும் இசை கோர்வை ஜிவ்வென்று உங்களை இழுத்தால் ஆச்சர்யமில்லை ! கீழே சொடுக்கி அதை உணருங்கள் !


சிந்து பைரவி !" கலைவாணியே !  என்ற பாடலில்  " கண்ணீர்  பெருகியதே " என யேசுதாஸ் உச்ச ஸ்தாதியில் பாடும் இடத்தில் நமக்கு கண்ணீரை வர வைத்துவிடும்! இளையராஜா -வைரமுத்து கூட்டணி மீண்டும்  எப்போது ?

தர்ம பத்தினி ! நான் தேடும் செவ்வந்தி பூவிது ! எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் !

முதல் மரியாதை ! ராசாவே உன்னை நம்பி ! மெல்லிசையின் முத்திரை !

இன்னும் சொல்லிகொண்டே போகலாம் ! பின்னணி பற்றி எழுத வேண்டுமே !

 மௌன ராகம்- கார்த்திக் ரேவதி காதல் காட்சியின்  பின்னணியில்  ஒலிக்கும்    "கீ  போர்டு "  இளையராஜாவின் ஸ்கோர் போர்டு

வீடு திரைப்படத்தில் " சொக்கலிங்க பாகவதரின் சோகத்தை உணர்த்தும்
 வயலின்  எத்தனை  முறை என்னை அழ வைத்தது !

காதலுக்கு மரியாதை-கடைசி காட்சியில் இவர் சேர்த்திருக்கும் பின்னணி இசை நீங்களே கேளுங்கள்  ! முழுவதுமாக கேட்க வேண்டும் ! குறிப்பாக ஷாலினியின் தாயிடம் ஸ்ரீவித்யா ஷாலினியை பெண் கேட்டதும் " ஷாலினியின் தாய்" எடுத்துகோங்க,கூட்டிட்டு போங்க "  என சொல்லி முடித்தவுடன் வரும் இசை கோர்வையை கவனமாக கேட்கவும் !



 இது போல் ஆயிரம் ஆயிரம் சொல்லிகொண்டே போகலாம் !  மாலை சூட மலர்கள்  பத்தாது ! புகழை வர்ணிக்க வார்த்தைகள் பத்தாது !  வாழ்க இசைஞானி! வளர்க அவர்தம் புகழ் !


நன்றியுடன்
இரா.மாடசாமி

Related Posts Plugin for WordPress, Blogger...

8 comments :

  1. Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே !

      Delete
  2. Hello sir, NAYAGAN padam BGM vittuteengalae! Innum 100 varusham appuram kaettaalum, avaroda isai DHAIVEEGA RAAGAM thaan. AVAR ORU ISAI KADAVUL!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே ! அவரை பற்றி சொல்ல இந்த ஒரு பதிவு பத்தாது ! இருந்தாலும் நாயகன் படத்திலும் ராஜா ராஜாவகத்தான் இசை அமைத்திருப்பார் !

      Delete
  3. இளைய ராஜாவை பற்றிய அருமையான பதிவு சார்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி சகோ !

      Delete
  4. அவரின் தொகுப்புக்கள் பல உள்ளன... ஊக்கம், சந்தோசம், ஆறுதல், ..., ..., என பலவற்றை தரும் அவரது பாடல்கள்...

    ரசித்து எழுதி உள்ளதற்கு பாராட்டுக்கள்... மிகவும் ரசிக்க வைத்தது... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே !

      Delete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger