Monday 16 July 2012

தொப்பலும், தொப்ப கட்டையும்,

          
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம், பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு நண்பர் திரு.தங்கம் பழனி அவர்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சரி, இந்த வாரம் எந்த விஷயம் பத்தி எழுதலாம்னு  யோசிச்சப்போ, தமிழின் சில சொற்கள் திரிந்து வேறு ஒரு சொல்லாக உருவெடுத்து பின் அதே வழக்கமாகி போன பல சொற்களை நாம் கேள்வி பட்டிருப்போம். அதில் எனக்கு தெரிந்த  ஒரு சொல்லை இன்று பார்ப்போம்.

நீங்கள், மழையில் முழுவதுமாக  நனைந்து வந்தால்  (ஷர்ட்,பான்ட் உட்பட) உங்கள் நண்பர்களோ, அல்லது குடும்பத்தினரோ இப்படி கேட்டிருப்பர்.
" என்ன ? இப்படி தொப்பகட்டயாக நனைந்து வந்திருக்கீங்க!! " ()
 " என்ன ? இப்படி தொப்பல் தொப்பலாக நனைந்து விட்டீர்கள் !!?

மேற்காணும் வாக்கியங்களில் உள்ள தொப்பகட்டை, தொப்பல்  ஆகிய  இரண்டும் தவறான சொற்களாகும்.

 தமிழகத்தின் தென் மாவட்டங்களில்  உள்ள  ஊர்களில்,
நீரை தேக்கி வைக்க பயன்படும் ஒரு பெரிய தொட்டி போன்ற  இடம் தெப்பம் எனப்படும், இந்த தெப்பம் பொதுவாக கோவில் அருகிலோ, அல்லது விவசாயம் சார்ந்த பகுதிகளிலோ, இருக்கும். இந்த தெப்பத்தில்  மரத்தாலான கட்டையானது  தண்ணீரில் முழுவதுமாக ஊறிய (அதில் உள்ள துகள்கள் பிரித்து போகும் அளவுக்கு) நிலைதான் தெப்பக்கட்டை என்று அழைப்பர் . இதுவே நாளடைவில் தொப்பகட்டையாகவும் பின் அதுவே தொப்பலா
கவும்  திரிந்து விட்டது .
தகவல் உதவி
திரு. நடேசன் ஐயா  
(எனது தமிழ் பேராசிரியர்) 

Related Posts Plugin for WordPress, Blogger...

0 comments :

Post a Comment

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger