Monday 23 July 2012

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏன்?!!

வணக்கம் நண்பர்களே!
                                                 நீண்ட நாட்களாகவே  பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் இன்னல்கள் பற்றியும் , எதனால் ஏற்படுகிறது ? என்பது பற்றியும்   ஒரு உருப்படியான பதிவை எழுதவேண்டும் என எண்ணினேன் . அது இந்த பதிவின் மூலம் நிறைவேறி இருக்கிறது என நினைக்கிறேன் !  






கஜினி படத்தில்  அசின் வில்லனின் சட்டையை பிடித்து சொல்வார் , " இன்னும் எத்தனை பேருக்குத்தான்டா நாங்க  பயப்படுறது"  இது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பது கீழிருக்கும் செய்தியை படித்தபின் தெரிந்து கொள்ளலாம்!


பள்ளியில்- சிறுமியிடம்   பாலியல்  தொந்தரவு செய்ய முற்பட்ட ஆசிரியர் கைது ! மனம் பாதித்த நிலையில் சிறுமி மருத்துவமனையில்  அனுமதி !!!

கல்லூரியில் -ஈவ்  டீசிங் செய்த மாணவர்களால் , பெண் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை !!

பேருந்தில்- சக பயணி சில்மிஷம்

அலுவலகத்தில்- சக ஊழியரின் ஆபாச மறைமுக பேச்சு! சில்மிஷம்!

வெளியில் - தனியாக சென்ற பெண்ணிடம் வாலிபர்கள் அட்டகாசம் !


 இன்றைய காலத்தில், பெண்களுக்கு எதிரான கொடுமைகளும், வன்முறைகளும்  நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாள்தோறும் செய்தி தாள்களிலும் , தொலைகாட்சி செய்திகளிலும் காண்கிறோம். அவர்கள் , முந்தய காலத்தை போல வீட்டிலேயே முடங்கி கிடக்காமல்,  நாங்களும்  ஆண்களுக்கு நிகரான வேலையே செய்வோம் என எத்தனையோ முறை நிரூபித்து அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றனர் .  ஆனால், இந்த ஆண் சமுதாயம் இன்னும் அவர்களை ஒரு பெண்களாக இல்லை, மனிதர்களாக கூட மதிக்க வில்லை ! அப்படி மதித்திருந்தால்,  மேலே சொன்ன பெ(வ)ண்கொடுமை  நிகழாது. வீட்டு வேலை முடித்து விட்டு , குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த வேலைக்கு எத்தனையோ பெண்கள் இன்றும் பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள் . வீட்டிலிருந்து  வெளியே வந்தபின் , ஆண்களால்  அவர்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது!


இதற்க்கு காரணங்கள் தான் என்ன !

 நமது  வளர்ப்பு முறையும், கல்வி முறையும் தான் இதற்கு முழு பொறுப்பு என்றே நான் சொல்வேன்.


பெற்றோர்களும் வளர்ப்பு முறைகளும் !!!!

 சிறு வயது  முதலே  ஆண் பிள்ளைகளை  ஒரு விதமாகவும், பெண்பிள்ளைகளை  ஒரு விதமாகவும் தான்  நமது பெற்றோர்கள் வளர்க்கிறார்கள் !

பையனை  கராத்தே பயிற்சிக்கும் , பெண்களை பாட்டு  மற்றும் நடனம் சார்ந்த பயிற்சியில் சேர்ப்பது- இது  தந்தையின் பாகுபாடு ! ஏன் பெண் குழந்தைகளை தற்காப்பு சார்ந்த பயிற்சிக்கு அனுப்ப மறுக்கிறார்கள்! தற்காப்பு தேவை இல்லை என எவ்வாறு தீர்மானிக்கிறார்!
 
பெண்களுக்கு  பதிமூன்று வயதை எட்டியவுடனோ , பருவம் எய்தவுடனோ  அவர்கள் தனது அன்னையின் கண்காணிப்பின் கீழ் வந்து விடுகின்றனர் ! இதனால் வெளி உலக தொடர்பு ஆறு மணிக்கு மேல் அறுந்து விடுகிறது !
மகன் பதினோரு மணிக்கு வந்தாலும் சாப்பாடு போடும்  அம்மா , 6 மணிக்கு 5 நிமிடம் தாமதமாக வந்தாலும் மகளிடம் ஆயிரம் கேள்வி கேட்பது - இது தாயின் பாகுபாடு .

அடுத்தது கல்வி முறை,
                                                  இன்றளவும் இந்தியாவில் பாலியல் கல்வி ஒரு  விவாதத்திற்கு உரிய தலைப்பாகவே மட்டும்  பார்க்க படுகிறது ! அதை நடைமுறைபடுத்த எவரும் முன் வரவில்லை!

எந்த ஒரு விஷயத்தையும் மூடி வைத்து ரகசியம் காக்கும்போது அதன் மீது எதிர்பார்ப்பு தானாகவே கூடி விடுகிறது ! அதுதான் இவ்வளவு இன்னலுக்கும் காரணம் ! அடிப்படையான விஷயங்கள் கூட ஆகாயம் அளவுக்கு பார்க்கப்  படுகிறது !ஆண்  மற்றும் பெண் , இவர்கள் இருவருக்கும் அவர்களுக்குள் ஏற்படும் பருவ பிரச்சினைகளையும், ரசாயன மாற்றங்களை பற்றியும்  சொல்லி கொடுக்க வேண்டும் .  அப்போது தான் அவர்கள் தெளிவு பெறுவார்கள். குறிப்பாக ஆணுக்கு, பெண்களும் உங்களை போன்ற ஒரு பாலினத்தவர் தான் ரசாயன மாற்றங்களாலும் ,ஒரு வித பால் சுரப்பியினால் மட்டுமே உடலின்  அமைப்பு வேறு படுகிறது என்பதை உணர்த்த வேண்டும்.

இறுதியாக,  பெ(வ)ண் கொடுமைக்காக  கொடுக்கபடும் தண்டனையை இன்னும் அதிகப் படுத்த வேண்டும் ! பெண்களை நாம் தெய்வமாக மதிக்க வேண்டாம் ! ஒரு மனிதராகவாவது மதிப்போம்! அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டாம் ! அவர்களுக்கு எதிரான பாவங்களை செய்யாதிருப்போம்!


நன்றியுடன்
இரா.மாடசாமி


Related Posts Plugin for WordPress, Blogger...

1 comments :

  1. absurd! how can the way a girl grows determined why she is abused? It is the abusers you need to analyse not women!!!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger