Tuesday 24 July 2012

காதலில் சொதப்பியது எப்படி?!! எனது முதல் காதல் அனுபவம்!!!!


வணக்கம்  நண்பர்களே  !!!
                                                   இன்று எனது முதல் காதல் (சொதப்பல்) அனுபவத்தை  இங்கு எழுத போகிறேன். இது வரை யாரிடமும் சொல்லவில்லை! காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு  நிச்சயமாக இது  பயன் உள்ளதாக  இருக்கும் !











பத்து வருடங்களுக்கு முன்பு , கொசுவத்தி  சுருள அப்பிடியே கொஞ்சம் சுத்துங்க ! ஆங் ! இப்போ நீங்க பிளாஷ் பேக்கிற்குள் வந்து விட்டீர்கள் !   அது ஒரு  ஆடி மாதம் ! தந்தையுடன்  துணி எடுக்க தி.நகர்  வரை சென்றிருந்தேன்! ஒரு கடையின் உள்ளே நானும் என் தந்தையும் உள்ளே செல்ல , அவளோ  எதிரே உள்ள இன்னொரு கடையில் ! அங்கு தான் நிகழ்ந்தது எங்களது முதல் சந்திப்பு!சுமாரான உயரம்! என்னை விட அழகு!!!!! சரி ! சரி !! கூல் ! அந்த பொண்ணு மட்டும்தான்  அழகு ! சட்டென  நான் தந்தையிடம்,  அந்த எதிர்  கடைக்கு செல்லலாம் என சொன்னேன் . என் தந்தை , உடனே  பாரம்பரியம் , பண்பாடு என நாங்கள்  துணி எடுக்க வந்த  கடையை பற்றி லெக்ச்சர் அடிக்க ஆரம்பித்து விட்டார் !  என்ன பாரம்பரியமோ  !  என் காதலில் அந்த வீணா போன பாரம்பரியம்  பாடாய் படுத்தியது ! எந்த துணியும் சில நாள்களில் கிழியதான் போகிறது ! இதில் பாரம்பரியம் இருந்தால் என்ன ! இல்லாவிட்டால் என்ன ! சரி மேட்டேருக்கு  வருவோம்! அவள் என்னை பார்த்து சிரித்தாள். சிறிய புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு உள்ளே சென்று விட்டேன்  ! ( வேற வழி அப்பாவ வச்சுகிட்டேவா   பாக்க  முடியும் ) 



 பின் நான் உள்ளே சென்று வித விதமான ஆடைகளை பார்த்தாலும் என் மனம் என்னவோ அவளின் சிரிப்பை மட்டுமே நாடியது.  பின்ன ! முதல் முதலாக என்னை பார்த்து !! ஒரு பெண் சிரித்து இருக்கிறாள் !அதுவும்  காதலுடன்! விட்ருவமா !!!!

 விக்ரமின் படத்தில் வரும்  ல! ல ! லா! ல ல லாலாலா !!! கோரசுடன்  என் மனது ஏதோ  பண்ணியது ! எப்போது   அவளை மறுபடியும் சந்திப்போம்  என்று என் மனது அவளை நினைத்து வாடியது ! மறுபடியும் ஒரு முறை அவளை பார்த்துவிடமாட்டோமா  என ஏங்கியது !

ஒரு வழியாக  ! துணி எடுத்துவிட்டோம் ! இப்போது என் தந்தை பில் செட்டில் பண்ணுவதர்க்காக வரிசையில் நின்றார் !  இந்த சமயத்தை நான் பயன்படுத்தி கொண்டு மறுபடியும் அவளை பார்த்து விடலாம் என என்  தந்தையிடம் ,                 " அப்பா  நான் கொஞ்சம் வெளியே நிற்கிறேன்" என அவர் அனுமதி தருகிற வரையில் நிற்காமல் கட கட வென வெளியில் வந்தேன் !
எதிர் கடையை நோட்டமிட்டேன் !  1000 வாட்ஸ்  பிரகாசம் என் முகத்தில்  !


ஆம் ! இன்னும் அவள் இருந்தாள் ! என்னை அழைப்பது போல இருந்தது  அவள் கண்கள் ! சாலையை கடந்து அவளருகில் சென்றேன்! இதயம் இப்போது அளவுக்கு அதிகமாகவே  துடித்தது! அவள் அருகில் நான் !


 சிரித்தேன் ! அவளும் என்னைபோலவே சிரித்தாள்  ! சிரித்தவுடன் எனக்கு அவளை நெருங்கும் தைரியம் வந்து விட்டது !இப்போது நெருக்கதில் இருவரும் !  மூச்சு காற்று அனலாக கொதித்தது!  அவள் கையை லேசாக பற்றி விட்டேன் !!!! அப்போது !!!

பின்னந்தலையில் ! டமார் என ஒரு அடி விழுந்தது ! தேய்த்துகொண்டே தலையை  திரும்பினால், காதல் படத்தில் வரும் தண்டபாணி போல  கண்கள் சிவந்த நிலையில் என் அப்பா!!!!! 
   
  கோபத்துடனே சொன்னார் ! ஏன்டா எரும மாடு ! உன்னை நான் அங்க தேடிகிட்டு இருக்கேன் ! நீ இங்க !!! துணிக்கடை போம்மை கையை புடிச்சுகிட்டு என்னடா பண்ற?


 ஐயோ ! அம்மா !  ஏ ! யாருப்பா மண்டையில குட்டுறது  ! ஏ !  இங்கபாரு  ! வேணாம் ! பேசிகிட்டு  இருக்கும்போது என்ன இது கைய நீட்டுற பழக்கம் ! அடிச்சு முடிச்சாச்சா ? போங்க ! போய் கம்மெண்ட்ட போட்டுட்டு  வேலய  பாருங்க! அடுத்தவன் காதல் கதைய படிக்க  என்னா  ஆர்வம்  காட்டுராய்ங்க !

 நன்றியுடன் !

இரா. மாடசாமி

 (நன்றி - பட உதவி - Google images ) 
Related Posts Plugin for WordPress, Blogger...

0 comments :

Post a Comment

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger