Wednesday 25 July 2012

இது கவிதை அல்ல !

வணக்கம் நண்பர்களே!
                                                என்  மனதில் தோன்றிய சில கிறுக்கல்களை  இங்கு
 கொடுத்திருக்கிறேன். பிடிதிருந்தால் கமெண்ட் செய்யவும் .

1.குழந்தை பருவத்திலிருந்து  விரும்பும்  பேருந்தின் ஜன்னல்  சீட்டை, விருப்பமில்லாமல்  விட்டு கொடுத்தேன் மனைவிக்கு!! காலத்தின் கட்டாயம்!!!!  

2. மூக்கை பிடித்த படியே  குப்பை லாரியை கடக்கும் யாவருக்கும் , அதன்  ஓட்டுனரின் மனநிலையை அறிந்திருக்க வாய்ப்பில்லை!!!  
அசுத்தம் சோறு போடும் !!!!

3.கிரிக்கட்டை ரசித்து பார்த்து கொண்டிருந்த என் நண்பர் சொன்னார் , சுரேஷ் ரைனா சூப்பராக Catch  பிடிப்பார் என்று !? புரியாமல் கேட்டேன் Catch  என்பதன் தமிழ் அர்த்தம் "பிடி" என்பதுதானே ?!

4.என் மகன் , எனக்கும் தந்தையாகிறான் , என்  தந்தைக்கும் , தந்தையாகிறான், "என்  அய்யாவே"  என ஆசையோடு அழைக்கும் போது !!!!

5. மகனின் மொட்டைக்கு, வந்திருந்த உறவினர்கள் வாழ்த்தியது நினைவில் இல்லை , இறுதியில் மிஞ்சிய சோறை ஒரு அறிமுகம் இல்லாத பாட்டிக்கு கொடுத்தபோது, அவர்  சொன்ன  வார்த்தைகள், நினைவை விட்டு நீங்க மறுக்கிறது! "உன் புள்ள , நோய் நொடியில்லாம சந்தோசமா இருக்கணும்"!

6. மது பழக்கம் இல்லாத என்னை பார்த்து , மது பழக்கம் உள்ள நண்பன் சொன்னான், நானும் உன்னை மாதிரி இருந்திருந்துருக்கலாம் என்று !  அப்போதுதான் ,எனக்கு என்னையே பிடித்தது!

7. போதையில் இருந்த நண்பனை  வண்டியில் பத்திரமாய் வீட்டில் கொண்டு சேர்த்து விட்டு கிளம்பும் போது  நண்பன் சொன்னான் " மச்சி பாத்து போடா!
அக்கறை !!!!!

8. வண்டி ஸ்டார்ட் ஆகாதபோது ,படித்த  Mechanical engineer கூட படிக்காத மெக்கானிக்கிடம் செல்கிறார்! Experience is Good Teacher !  

9.  நண்பனைப்போல் நாத்திகவாதி ஆகவேண்டும் என நினைக்கும் அடுத்தநாளே , குளித்து உடையணிந்த உடன் மனம் தானாக  திருநீரை நோக்கி பயணிக்கிறது ! தொட்டில் பழக்கம் !

10. ஆட்டோ காரரிடம் சண்டை போட்டு  மிச்சம் பிடித்த பத்து ரூபாயை  ,
       கேட்காமல்  டிப்ஸாக கொடுத்தேன் செட்டி நாடு ஹோட்டல் சர்வரிடம் !!!!
       முரண்பாடு !!!   







நன்றியுடன்,
இரா. மாடசாமி

Related Posts Plugin for WordPress, Blogger...

0 comments :

Post a Comment

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger