Monday, 30 July 2012

குழந்தைகளுக்கு ஏன் விஜய்யை பிடிக்கிறது!?

 வணக்கம் நண்பர்களே ,
                                                 இந்த பதிவை படிப்பதற்கு முன்  நீங்கள் ஒரு முக்கியமான  முடிவு ஒன்றை  எடுக்க வேண்டும் .அது என்னவென்றால் எந்த நடிகரையும் சாராத ஒரு நடுநிலையான மனதுடன் மட்டுமே படிப்பது

 
சரி மேட்டர்க்கு  வருவோம்,   இன்றைய திரைத்துறையில் ஹீரோவாக  வருவதற்கு அதிக சிரத்தை எல்லாம் எடுக்க  வேண்டாம் . கொஞ்சம் பஞ்ச் வசனம், கொஞ்சம் சண்டை , கொஞ்சம்  காதல் அவ்வளவுதான் , இது இருந்தாலே அவர் பெரிய ஹீரோவாகி விடுகிறார் .இதில் ,எந்த நடிகர் சிறப்பாக நடிக்கிறாரோ அவரின் படங்களை பார்க்கிறோம், ரசிக்கிறோம் .  சிலர்  அவரின் மேல் உள்ள  பற்றினால் தீவிர ரசிகர்களாக கூட மாறி விடுகின்றனர்.

  ஆனால் குழந்தைகள் மனதில் இடம் பிடிக்க மேலே சொன்ன கொஞ்சம், கொஞ்சம் டெக்னிக் வேலை செய்யாது .அதைத்தான், இன்று நாம் இந்த கட்டுரையில் அலசபோகிறோம். இவர்களின் உலகம் சற்று வித்தியாசமானது , திரை உலகில் குழந்தைகளின் ரசனையை  இரண்டு விதமாக பார்க்கிறேன்  நான்! அது என்ன வென்றால்.  

  1 வயது  முதல்  3 வயது வரை:  இந்த வயது குழந்தைக்கு  நல்ல இசை மட்டுமே பிடிக்கும், இவர்களுக்கு வசனமோ,பாடலோ புரியாது. அதனால்தான் இன்றைக்கும் " Why  திஸ் கொலைவெறி" "வேணாம் மச்சான் வேணாம்  "  ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் " போன்ற பாடல்களுக்கு  இவர்கள் ஆடவும் , வைத்த கண் மாறாமல் பார்க்கவும் முடிகிறது.  மேலே சொன்ன காரணங்களில் விஜய் நடித்த படங்களின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆவது வாடிக்கையே!  வேட்டைக்காரன் படம் தோல்வி அடைந்தாலும் அதன் பாடல்கள்  " ஏன் உச்சி , கரிகாலன், புலி உறுமுது" போன்ற  பாடல்கள் இன்றளவும் குழந்தைகளின் மனதில் இறுக்கிறது. தற்போதய ஹிட் நண்பன் படத்தில் அனைத்து பாடல்களும். இன்னும் பல...


3 முதல் 10  வயது வரை :
                                               இந்த இடைப்பட்ட வயது உள்ளவர்கள்  விரும்புவது,   நல்ல இசையுடன் கூடிய  நடனம்,  கொஞ்சம் சண்டை, கொஞ்சம் சாகசம் ! படத்திலே ஹீரோ செய்யும் நகைச்சுவையுடன் கூடிய முக பாவனைகள், கொஞ்சம் ஸ்டைல்  போன்றவை . இவர்கள்,ஹீரோ ஆடும் நடனத்தையும்,  சண்டை கட்சியையும்  அப்படியே ஆடுவது  மற்றும்  செய்கை செய்வது , பஞ்ச் வசனம் பேசுவது வழக்கமாக்கி கொள்கிறார்கள்.ஆதலால் ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு வித்தியாசமான நடன அமைப்பை எதிர்பார்ப்பார்கள் . இதில் விஜய் ஒவ்வொரு படத்திற்கும் எப்படி சிரத்தை எடுத்து ஆடுகிறார் என்பது அனைத்து  நடிகர்களின் ரசிகர்களுக்கே தெரியும். மேலும் படத்தில்   கதையோடு ஒன்றி  நகைச்சுவை (Friends ,கில்லி,வேட்டைக்காரன், நண்பன் )  வருமாறு பார்த்து கொள்கிறார்.  


பொதுவாக குழந்தைகளுக்கு  திரைப்படத்தில் என்ன பிடிக்கிறது ?
 இவர்களின் உலகில் ஹீரோ மாங்கு மாங்கு என வில்லனை அடித்தாலும், பக்கம் பக்கமாக வசனம் பேசினாலும், செண்டிமெண்டாக கண்ணீர் விட்டாலும்,காதல் ரசம் பொழிந்தாலும்,டிவி ரிமோட் தானாகவே  மாறிவிடும்.
இவர்களுக்கு  ஹீரோ என்பவர் ,ஒன்று சூப்பர் பவர் உள்ளவராக (சூப்பர் MAN , Spider MAN )   இருக்க வேண்டும் அல்லது அவர்களில் ஒருவராகவே  இருக்க வேண்டும் .அதாவது  இவர்கள் செய்யும் சேட்டை, குறும்பு, நடனம் போன்றவற்றை பிரதிபலிக்கவேண்டும்  என்றே விரும்புகிறார்கள்.  இந்த அனைத்தையும் விஜய் தனது படங்களில்  ஓரளவாவது நிறைவேற்றி இருக்கிறார் என நான்  நினைக்கிறேன் .

பின் குறிப்பு: இது விஜய்யை பாராட்டி எழுதப்பட்டது அல்ல! நடுநிலையுடன் எழுதப்பட்டது. மேலும் முழுக்க  முழுக்க குழந்தைகளின்  ரசனை சார்ந்த பதிவு மட்டுமே . இதற்கு முந்தய தலைமுறை நடிகர்களை  உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. இந்த பதிவு  யாரையும் புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!
Related Posts Plugin for WordPress, Blogger...

0 comments :

Post a Comment

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger