Friday 20 July 2012

சிகப்பழகு விளம்பரம் ஒரு சீட்டிங்!

வணக்கம் நண்பர்களே ,                                                
                                               இன்றைய  தினம்  டிவியில்  வரும் விளம்பரங்கள் (Advertisement) நம்மை  ஏமாற்றும்  விதமாகவே உள்ளது.  அதிலும் சிகப்பழகு விளம்பரங்கள் சொல்லவே வேண்டாம் !  ஒரு பொருளை விற்பனை செய்ய விளம்பரம்  எவ்வளவு  முக்கியம் என்பது நமக்கு தெரிந்ததே!அதுவே எல்லை மீறும் போது நமக்கு எரிச்சலூட்டும்படி  செய்து விடுகிறது!  



சிவப்பழகு!

   பொதுவாக சிவப்பழகு என்று இவர்கள் எதை முன் வைக்கிறார்கள்? சிவப்பு தோலையா ? அன்னையும் , தந்தையும்  தந்த இந்த உடலின் வண்ணம் எந்த நிறமாயினும் இவர்களுக்கென்ன ?அதை மாற்ற  சொல்வதற்கு இவர்கள் யார்? கருப்பு  நிறத்தை  கொச்சைபடுத்தி, கருப்பு என்றாலே  மிக தாழ்வு மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களிடம் சக நண்பர்களோ, மாணவர்களோ, அலுவலக ஊழியர்களோ  பழக தயங்குவார்கள் என்று இவர்கள் காட்டும் விளம்பரங்கள், அநியாயம் ! இது எவ்வளவு அப்பட்டமான பொய்! . முதலில் , இவர்கள் நிறுவனத்தில் நிறத்தை வைத்து வேலை கொடுக்கிறார்களா? அல்லது திறமையை வைத்து வேலை கொடுக்கிறார்களா என்பதை நமக்கு தெரியபடுத்தட்டும்,  பின்னர் சொல்லட்டும்!
இதை வாங்கினால் உங்கள் முகம் வெயிலில் இருந்து காக்கும்,புத்துணர்வுடன் வைத்திருக்கும், என்று சொல்ல வேண்டுமே தவிர இதை வாங்கினால் உங்கள் முகம் சிவப்பாகி விடும், அதனால் மட்டுமே உங்களை எல்லோருக்கும்  பிடிக்கும் , காதலனோ, காதலியோ கிடைப்பார்கள் என்று  சொல்ல கூடாது ! மற்றொன்று , 6 வாரங்களில் அல்லது 10 வாரங்களில்  சிவப்பாகி விடும்  என டைம் லிமிட் கொடுப்பது எதற்கு ? சரி! 6 வாரங்களில்  சிவப்பகாமல்  போனால்?  இன்னொரு கிரீம் வாங்க வேண்டும் ! இப்படியே  6 முதல் 60 வாரங்கள் போட்டாலும் கிரீம் கரையுமே தவிர சிவப்பாக முடியாது ! வீணாக சரும நோய்க்கு ஆளாக வேண்டியதுதான் !

அப்புறம்,  இவங்க அந்த  பொருள விக்கிறதுக்கு முன்னாடி அந்த பொருள் சம்பந்தமான  ஒரு மீட்டர் அல்லது ஒரு மிசின் வச்சுருப்பாங்க !!!!! அது எங்க கெடைக்குதுன்னு யாருக்கும் தெரியாது! ஒரு வேளை அவங்களே டிசைன் பண்ணி வச்சுருப்பாங்களோ!!!! இருக்கும் ! நமக்கு எதுக்கு அதெல்லாம்! நாம விசயத்துக்கு வருவோம்!நிறத்தினை  அளக்கும்  மீட்டர் வைத்து அளந்து காட்டுவாங்க  உடனே அந்த நபர் முகம் ஏதோ  குற்றம் செஞ்ச மாதிரியும் ,உலகத்துலேயே அவர்தான் அசிங்கமனவர் மாதிரியும்  பீலிங் காட்டுவார்  .  உடனே கம்பெனி காரங்க  அந்த கிரீம் போடச்சொல்லி மறுபடியும் அந்த மீட்டர் வச்சு கட்டுவாங்க !!! இப்ப   அந்த மாடலிங்  நபர்,  வாவ் அப்படின்னு  உலக அழகி/அழகர் ஆயிட்ட மாதிரி  பிலிம் காட்டுவார்! இதே டெக்னிக் தான்
 இதர அழகு சம்பந்தப்பட்ட அத்தனை பொருள்களுக்கும் ! கொடுமடா சாமி !


என்னை பொறுத்தவரை அழகு என்பது தோலில் இல்லை . தோல்  என்பது உடல் பாகங்களை பாதுகாக்கும் ஒரு மெல்லிய கவசம். அதனை நாம் பாதுகாக்க முயற்சி செய்யலாமே தவிர அதனை அதன் தன்மையை மாற்ற கூடாது .

 மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்

நன்றியுடன்
இரா.மாடசாமி.












Related Posts Plugin for WordPress, Blogger...

0 comments :

Post a Comment

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger